தேடல் தொடங்கியதே..

Friday 14 June 2013

கீழக்கரையில் மினி வேன்களில் பூச்செடிகள், பழக்கன்றுகள் விற்பனை - ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள் !

கீழக்கரை நகருக்குள் மினி வேன்கள் மூலம் அலங்கார பூச்செடிகள், பழக்கன்றுகள், நிழல் தரும் மரக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுக்கு மல்லி, கொத்து மல்லி, சிகப்பு ரோஜா, முல்லை, இட்லிபூ, நந்தியா வட்டை, பொன்அரளி, குரோட்டன்ஸ் உள்ளிட்ட மலர் செடிகளும், ஒட்டு மாம்பழம், சீனி கொய்யா, கமலா ஆரஞ்சு, சாத்துக்கொடி, நாரத்தை, எலுமிச்சை, சீத்தாப்பழம், நெல்லி ரகங்கள் ஆகிய பழக்கன்றுகளும், 

மரச்செடிகளான தேக்கு, மலைவேம்பு, கொன்றை, பூவரசு, இலுப்பை போன்றவைகளும் நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.





இது குறித்து தென்காசிப் பகுதியில் இருந்து கீழக்கரைக்கு செடிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஸ்ரீ பார்வதி நர்சரி கார்டன் உரிமையாளர். திரு. மாடசாமி அவர்கள் கூறும் போது "வருடத்தில் இருமுறை கீழக்கரை பகுதிக்கு மரக் கன்றுகளையும் பூச்செடிகளையும் விற்பனைக்கு கொண்டு வருகிறோம். மலர் செடிகள் மற்றும் அலங்கார செடி வகைகள் ஒவ்வொன்றும் ரூ.20 க்கும், ஒட்டு ரக வீரிய பழக்கன்றுகள் ஒவ்வொன்றும் ரூ.40 க்கும் விற்பனை செய்து வருகிறோம். தற்போது விற்பனை அமோகமாக இருக்கிறது." என்று தெரிவித்தார்.


இவற்றை வாங்கி நடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மேலதிக விவரங்களுக்கு 96599 65756 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

  1. கீழக்கரை மேலக்கரை ஆகி வருகிறது ! கடந்த பத்தாண்டுகளில் நான் நல்ல மாற்றத்தை - விழிப்புணர்ச்சியைத் தமிழ் மண்ணில் காணுகிறேன் ! பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் இதுபோன்ற தாவர முயற்சிகளில் இறங்கலாம் !-
    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
    எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
    சென்னை-33

    ReplyDelete