தேடல் தொடங்கியதே..

Monday 15 April 2013

கீழக்கரையில் நாளை (16.04.2013) மாதாந்திர மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு !


கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (16.04.2013) செவ்வாய் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, தேரிருவேலி, உத்திரகோசமங்கை, களரி, கொம்பூதி   மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5 மணி வரை 'மின் விநியோகம் இருக்காது' என்று மின் வாரிய உதவி செயற் பொறியாளர் திரு .கங்காதரன் தெரிவித்துள்ளார்.



கீழக்கரை பகுதியில் ஏற்கனவே 7 மணி நேர அறிவிக்கப்பட்ட மின் வெட்டும்,

நள்ளிரவு - 12 மணி முதல் 1 மணி ( 1 மணி நேரம் )
அதி காலை - 6 மணி முதல் 9 மணி வரை  ( 3 மணி நேரம் )
நண்பகல் - 12 மணி முதல் 2 மணி வரை  ( 2 மணி நேரம் )
மாலை - 6 மணி முதல் 7 மணி வரை ( 1 மணி நேரம் )

இது தவிர அறிவிக்கப்படாத மின் வெட்டாக பல மணி நேரங்களும் அமலில் ஓராண்டுக்கும் மேலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே நாளை ஏற்பட இருக்கும் நீண்ட நேர மின் வெட்டினை  சமாளிக்க, பொது மக்கள் அனைவரும் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

இஸ்லாமியா பள்ளியில் நடைபெற்ற மழலை மாணவ, மாணவியருக்கான பட்டமளிப்பு விழா!

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் மழலை ஆரம்பக் கல்வியான எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்பை நிறைவு செய்து, முதலாம் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் முகமாக, அவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் நேற்று முன் தினம் (13.04.2013) சிறப்பாக  நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில் தெற்கு தெரு ஜ‌மாத் த‌லைவ‌ர் ஜாஹிர் ஹுசைன் கள‌ஞ்சிய‌ம்  தலைமை வகித்தார். பள்ளிகளின் தாளாளர் M.M.K.முகைதீன் இப்ராகிம், தெற்குத் தெரு ஜ‌மாத் செய‌லாள‌ர் பவுசுல் ர‌ஹ்மான், உறுப்பின‌ர் அப்துல் வாஹித், க‌ல்விக்குழு தலைவ‌ர் சீனி முக‌ம்ம‌து,‌ ச‌ப் க‌லெக்டர் ர‌வீந்த‌ரன், ஆர்.டி.ஓ குண‌சேக‌ர‌ன், ஹ‌மீதியா தொட‌க்க‌ப்ப‌ள்ளி தாளாள‌ர் சிராஜீதீன், முஹம்மது ச‌த‌க் பொறியியல் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜ‌காப‌ர், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸடிஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். 



த‌லைமை ஆசிரிய‌ர் சார்த்தோ வரவேற்புரை ஆற்றினார். யு கே ஜி மாண‌வி பாத்திமா ஹாலிஷா கிராஅத் ஓதினார்.எத‌ற்காக‌ இந்த ப‌ட்ட‌ம‌ளிப்பு விழா ? என்கிற தலைப்பில் யு கே ஜி மாண‌வி ஆயிஷ‌த் ந‌ஃபா விள‌க்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஹைராத்துல் ஜ‌லாலியா தொட‌க்க‌ப்ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர் சுரேஷ்குமார் முன்னாள் கவுன்சிலர்க‌ள் M.M.K. முகம்மது காசிம், ஜ‌மால், வேல்சாமி மற்றும் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த விழாவில் மழலை மாணவ, மாணவிகளுக்கான பட்டங்களை, இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் M.M.K.முகைதீன் இபுறாகீம் வழங்கி, குழந்தைகளின் எதிர் கால கல்வி வளம் பெற  ஊக்கப்படுத்தினார்.