தேடல் தொடங்கியதே..

Monday, 21 October 2013

கீழக்கரை அருகே பெரிய பட்டிணத்தில் 'அல் மஸ்ஜிதுல் தக்வா' - புதிய பள்ளிவாசல் திறப்பு விழா !

கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டிணம் தக்வா நகரில் கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் தக்வாவை நேற்று முன் தினம் (18.10.2013) வெள்ளிக் கிழமையன்று, கீழக்கரை டவுன் காஜி. மௌலவி காஜி A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீக்கி திறந்து வைத்து மஹ்ரிப் தொழுகை நடத்தினார். இந்த பள்ளியின் திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் M.S.கபீர் தலைமை வகித்தார். ஜலால் ஜமால் ஜும்மாப் பள்ளி தலைவர் அப்துல் லத்தீப் மற்றும் அல் மஸ்ஜித் பலாஹ் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செய்யது அஹமது நெய்னா ஜமாலி கிராத் ஓதினார். அமீரக பெரியபட்டிணம் ஜமாஅத் பைத்துல்மால் தலைவர் ஜஹாங்கீர் வரவேற்புரை ஆற்றினார். 


மௌலவி செய்யது அக்பர் ஜமாலி மற்றும் மௌலவி முஹம்மது ஜாபர் அன்வாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஒன்றிய கவுன்சிலர் அபீபுல்லாஹ், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் செய்யது அஹமது புகாரி, உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார ஜமாத்தார்கள், உலமாக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக மஸ்ஜித் பலாஹ் பள்ளியின் இமாம் ஹாபீஸ் முஹம்மது இஸ்மாயில் மன்பயீ துஆ ஓதினார். 

No comments:

Post a Comment