தேடல் தொடங்கியதே..

Friday 21 June 2013

கீழக்கரையில் ஜவாஹிருல்லா MLA பொது மக்களுடன் சந்திப்பு - முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்பட விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி !

கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளாக இருக்கும்  தெருக்களில் வழிந்தோடும்  சாக்கடை கழிவு நீர், நாறும்  குப்பைகள், இரவில் எரியாத தெரு விளக்குகள், சீரமைக்கப்படாத குண்டும் குழியுமான சாலைகள், வீடுகளுக்கு வந்து சேராத காவிரி நீர், சாலைகளில்அள்ளப்படாத மணல் திட்டுகள், திறப்பு விழா கண்டும் திறக்கப்படாத மின் கட்டண வசூல் மையம், வெட்டப்படாத பட்டுப் போன மரங்கள்...

புற நகர் பகுதியில் பாழடைந்து கிடக்கும் பொது நூலகம், நிழற்குடை இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள் என அடுக்கிக் கொண்டே போகும் பல்வேறு பிரச்சனைகளை, சட்ட மன்ற உறுப்பினர் முனைவர். பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்களிடம் பொது நல அமைப்பினர்களும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் மனுக்கள்  வாயிலாகவும், வாய் மொழியாகவும்  தெரிவித்தனர்.

கீழக்கரை நகரில் நிலவி வரும் சுகாதரக் கேடுகளை களையவும், குப்பைகள் இல்லாத முன் மாதிரி நகராட்சியாக கீழக்கரையை மாற்றவும், சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (21.06.2013) வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகருக்குள் நடை பயணமாக சென்று பொதுமக்களின் குறைகளை நேரில் விசாரித்தார். அவருடன் த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள், கீழக்கரை நகராட்சி கமிசனர், சுகாதார ஆய்வாளர், மதிப்பீட்டாளர், துப்புரவு மேற்பார்வையாளர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்களும், பல்வேறு சமூக நல அமைப்பினர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் திரளாக சென்றனர்.




சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு செய்வதை அறிந்த இல்லத்தரசிகள் பலர், தங்கள் பகுதியை கடந்து சென்ற MLA அவர்களிடம் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்சனைகளை முறையிட்டு நிவர்த்தி செய்யக் கோரினர். கீழக்கரை முஸ்லீம் பஜார் பகுதியில் இருந்து லெப்பை தெரு, ஜின்னா தெரு, ஓடக்கரை பள்ளி வழியாக மேலத்தெரு, சொக்கநாதர் கோயில் தெரு, சின்னக்கடைதெரு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

முடிவில் நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் பொது மக்களிடம் கேட்டறியப்பட்ட அனைத்து புகார்களையும், கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற, நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். அடுத்த மாதம் ஜூன் 15 ஆம் தேதிக்குள் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து செயல்படுத்தப்படுவதாக நகராட்சி ஆணையரால் உறுதி மொழி தரப்பட்டது.

2 comments:

  1. Last CM of TN, Karunanithi announced about keelakarai as TALUKA, but still not any action from our MLA.

    ReplyDelete
  2. Last CM of Tamil Nadu, Karunanthi announced keelakarai as "TALUKA". But still not any action from our MLA.

    ReplyDelete