தேடல் தொடங்கியதே..

Saturday 13 July 2013

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் மீது, முதன் முறையாக, தூய்மைப் பணிகள் ஒப்பந்ததாரர் இலஞ்ச குற்றசாட்டு - பொது மக்கள் அதிர்ச்சி !

கீழக்கரை நகராட்சியில் இருந்து, கீழக்கரை நகரின் பொது சுகாதாரம் கருதி, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்காக, 1 வது வார்டு பகுதி முதல் 11 வது வார்டு பகுதி வரையிலான, முதல் நிலை திடக் கழிவு சேகரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, தனியார் நிறுவனமான மதுரையை சேர்ந்த EXCEL NEAT AND TIDY AGENCY நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டு, வேலைகள் நடை பெற்று வந்தது.  ஆனால் தற்போது இப்பகுதியில் துப்புரவுப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததால் குப்பைகள் மீண்டும் தேங்க துவங்கியுள்ளது.



இந்நிலையில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் மீது, முதன் முறையாக, தனியார் தூய்மைப் பணிகள் ஒப்பந்ததாரர்  திரு. ஆறுமுகம் அவர்கள் நகராட்சி நிர்வாகத்தினர் மீது இலஞ்ச குற்றசாட்டு வைத்துள்ளார். தன்னுடைய குற்றசாட்டுகள் அனைத்தையும் மனுவாக எழுதி, அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளார். (அந்த கடிதத்தின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.). 

அந்த கடிதத்தில் அவர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் நகராட்சி தலைவியின் கணவர் உள்ளிட்டோர் மாதா மாதம் ரூ.30000 இலஞ்சம் கேட்பதாகவும், அதனால் நீதி மன்ற வழக்கு தொடர்ந்து தடுப்பு ஆணை  (LEGAL STAY  ORDER) பெறப் போவதாகவும், இதனால் எதிர் காலத்தில், துப்புரவுப் பணிகள் நடக்காமல், நகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கும் சூழல் உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாததால் பொது மக்கள் படும் வேதனை குறித்து நாம் முன்னதாக வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடவும்.

கீழக்கரை தெருக்களில் மீண்டும் குப்பைகள் தேங்குவதால் பெரும் சுகாதாரக் கேடு - பொது மக்களே தெருக்களை கூட்டி அள்ளும் அவலம் !

2 comments:

  1. இப்போதைய நகராட்சியின் சீர் கெட்ட நிர்வாகத்தால் கீழக்கரை மீண்டும் குப்பைக்கரையானது. மக்கள் நல பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய்களை ஒதுக்கி இருந்தும் திராணி அற்றவர்களின் செயலால் மீண்டும் கொடிய தொற்று நோய்கள் பரவக் கூடிய வாய்ப்புகள் வெகு தூரத்தில் இல்லை.

    கடந்த காலங்களில் உடல் நோக உழைத்து சம்பாதித்த பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நகர் சுகாதார சீர்கேட்டால் பிரசவித்த உயிர் கொல்லி நோயான டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்ச்லுக்கு மதுரை மற்றும் இராம்நாதபுரம் மருத்துவமனைகளில் கொட்டி அழுத கீழக்கரை வாழ் குடும்பத்தினர்க்கு தான் அதன் கொடுமை பூரணமாக புரியும்.அவர்களின் வயிற்று எரிச்சல் வீண்போகாது.சிந்திக்க கூடிய திறன் உள்ளவர்கள் புரிந்து நடந்து கொள்ளுங்கள். காலச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது.

    மற்றொரு செய்தியும் உலா வருகிறது. தொகுதி நிதியிலிருந்து நமது ஊருக்கு சில மக்கள் நல திட்டங்களை செயல் பாட்டிற்கு கொண்டு வர எத்தனிக்கும் முற்சிக்கும், நமது ஊரில் அது நடக்க இருப்பதால் அதற்கும் கமிஷன் காரணமாக தடை ஏற்பட்டுள்ளதாம்.இதற்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் தான் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    கோடிகளில் புரளும் அன்புக்குரிய புண்ணியவான்களே பொது மக்கள் வேண்டுவதெல்லாம் இது தான்.

    நீங்கள்அனுபவிக்கும் சுக போகத்தில் பங்கு கேடகவில்லை. அந்த் ஹராமான காசு எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

    இப்போது வீதி எங்கும் நிறைந்திருக்கும் உயிர் கொல்லி வியாதிகள் பரப்பும் குப்பைகளை அகற்றி மக்களை காப்பாற்றுங்கள்.

    மீண்டும் குப்பைக்கரையான கீழக்கரையை கோபுரக்கரையாக மாற்ற மனசாட்சியுடன் செயல் பட முயற்சியுங்கள்.

    வருடத்திற்கு ரூபாய் ஆறு நூறு தண்ணீர் வரியாகக் கட்டும் மக்களுக்கு தாகம் தீர்க்கக குடிநீர் கிடைக்க அதற்கு உரிய இடையூர்களை நீக்க கடும் முயற்சி செய்யுங்கள். புண்ணியமாவது கிடைக்கட்டும் அதற்காக தான் உங்களுக்கு ஓட்டளித்து பொது சேவைக்கு அனுப்பினோம்.பணம் சம்பாதிக்க அல்ல. அல்லாத பட்சத்தில் பதவிகள் துறவுங்கள்.அது உங்களுக்கும் நல்லது. ஊருக்கும் நல்லது.

    நீங்கள் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகளை ஏறத்தாழ நெருங்குகிறது. இன்னூம் வாருகால் மூடி போடும் பணி பூர்த்தியாகவில்லை.அதனை விரைந்து முடித்து வழிந்தோடும் கழிவு நீர்களை தடுத்து நிறுத்தி மக்களை சுகாதார சீர்கேட்டிலிருந்து காக்க தங்களின் உன்னதமான சக்திகள் செலவிடுங்கள். வல்ல ரஹ்மான் நற் கூலியை வழங்க இரு கரம் ஏந்துகிறோம்.

    சில லட்சங்களில் முடிய வேண்டிய ஹைமாஸ் விளக்குகளை பல லட்சங்களை செலவழித்து முடித்த திறமை மிக்கவர்களே அதனை இரவில் மட்டும் எரிய விட்டு மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வாருங்கள்.

    இதனைக்கும் மேலே எங்கள் வழி தனி வழி என இதே போக்கில் போக எத்தனித்தால் மக்கள் .......தை தூக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இது திண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் "மங்காத்தாவின் தங்கச்சி மகனுடைய Comments-ஐ எங்கே ரொம்ப நாளாக் கீழக்கரை டைம்ஸ்-ல பார்க்க முடியலயேன்னு உண்மையிலேயே ஓரிரு நாட்களுக்கு முந்திகூட நினைத்தேன்......

      Delete