தேடல் தொடங்கியதே..

Monday 19 November 2012

செல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கீழை இளையவன் கவிதைகள் வலை தளத்தில், தற்போதைய கலாச்சார சீர்கேட்டிற்கு யார் காரணம் ? பெற்றோர்களா ? செல்போன் கலாச்சாரமா? மீடியாக்களா? விழிப்புணர்வு இன்மையா? என்று கருத்து ஓட்டெடுப்பு நடத்தினோம். அதில் 55 சதவீதம் பேர் செல் போன்  கலாச்சாரமே என்றும் 18 சதவீதம் பேர் பெற்றோர்களே என்றும் வாக்களித்திருந்தார்கள். 


கீழை இளையவன் கவிதைகள் வலை தளத்தில் வெளியான விழிப்புணர்வு கவிதை - "ஓடிப் போகுமா... கலாச்சாரம் ?"

ஆகவே பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளையும் 'கேடுகளை வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்கும் செல்போன்' கலாச்சாரத்திலிருந்து, பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், அனாச்சாரங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். இல்லை எனில் உடைந்த கண்ணாடியாக வாழ்க்கை மாறக் கூடும். இறைவன் பாதுகாப்பானாக ! 

தற்சமயம் அதிக அளவில் பெண்கள் அந்நிய ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும், விபச்சாரம் போன்ற வழி கேடுகளில் வீழ்வதும் நிகழ்ந்து வருகின்றது. இதற்கான முழுப் பொறுப்பையும் பெற்றோர்களே ஏற்க வேண்டி இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

01. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.

02. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக Mobile Phone போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

03. Mobile Phoneல் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன SMS வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.

04. பெண்கள் எங்கே செல்கின்றார்கள்? எப்போது வருகின்றார்கள்?? என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

05. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை ஆபாச சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழி தவற வைப்பது.

06. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம் : வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)

07. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் விருப்பப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

08. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது. அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

01. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

02. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

03. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்த வரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (Attendance) சரியாக உள்ளதா ? என வாரம் ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.

04. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

05.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு Mobile Phone களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். Land Line டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

06. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், ஆம்னி டிரைவர், சிட்டை வட்டிக் காரன், பால்காரன், கேபிள் டீவிக்காரன், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் Phone நம்பரை கொடுக்க வேண்டாம்.

07. தெரியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ, அல்லது Message அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டித்து விடுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற Call or Message வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

08. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ, குடும்பத்தினர் பற்றியோ, குடும்ப விசயங்கள் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் 'இது உங்களுக்கு அவசியமற்றது' என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

09. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும் தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்காதீர்கள், அதுபோல் சக மாணவியரால் 'நல்லவன்' என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்து தான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட, அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் போதும், ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி DELETE செய்து விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல், முறையான ஆபாசம் இல்லாத லூசான, தளர்வான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு தான். அதை விடுத்து டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள் வாங்கப்பட்டு புளு பிலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

நன்றி : முக நூல் நண்பன் (அறிவுரைகள்)

அந்நியருடன் ஓடிப்போகும் / ஓடிப்போன பெண்களின் நிலை:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை, காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்து விட்டு பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள் அல்லது தன் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறாள்.

ஓடிப்போகும் போது இவள் தனது பெற்றோரின் ஓட்டு மொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள்.

இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம் பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி, உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.


பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரை கடந்த பின் கதறாமல், இப்போதே அணை போட திட்டமிடுவீர், உங்கள் பெண் பிள்ளைகளை முறையாக ண்காணியுங்கள்.  
கண்ணாடிகள் ஜாக்கிரதை..!
Comments :

அருமையான ஆய்வு கட்டுரை.. வாழ்த்துகள்.. இன்றைய காலக்கட்டத்தில் அலைபேசிகளால் பெண்கள் படும் துயரங்களை வெட்ட வெளிச்சமாக சுட்டி காட்டி உள்ளீர்கள்.. இந்த விழிப்புணர்வு கட்டுரையை பாராட்ட வார்த்தைகள் இல்லை..

தத்தம் வீட்டில் உள்ள பெண்களை குறிப்பாக இளம் வயதினர், உயர்நிலைப்பள்ளி - கல்லூரி மாணவிச் செல்வங்கள், சம்பாத்தியம் காரணமாக வெளியூர், தூர தேச நாடுகளுக்கு சென்ற கணவன்மார்களை பிரிந்து வாழும் இளம் மனைவிமார்களை பாதுகாக்க வேண்டிய காட்டாய பொறுப்பு வீட்டில் உள்ள ஆண், பெண் ஆகியோருக்கு கட்டாய கூட்டு கடமையாகும். கடமையை மறந்தால் நாசம் தான் மிச்சும்..இது சத்திய வாக்கு. உண்மை எப்போதும் கசக்கத் தான் செய்யும்..

அதே வேளையில் பெண்களை அலை பேசி என்னும் மாய வலையால் சீரழிக்க எண்ணும் ஆண் எத்தர்களே உங்கள் வீட்டிலும் பெண்கள் உண்டு என்பதை மனதில் கொண்டு அச்ச்த்துடன் செயல் படுவீராக..படைத்த வல்ல ரஹ்மான் பிடரி நரம்புகளுக்கு அருகில் இருந்து உங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற இறைமறை வசனத்தை திண்ணமாக நம்புங்கள்

  • Keelai Ilayyavan தற்போதைய காலக் கட்டத்தில், இந்த விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்றாக இருப்பதால், மறக்காமல் நம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்.
    6 hours ago · Like · 3
  • Mohamed Rasooldeen GD MESSAGE
    6 hours ago · Unlike · 1
  • Kader Riyaz Asalamu alaikum thampi padethayn unmaiyai purenthu erupergal alah thane (quranel solkeran rasool margalen manaivergu nengal adutha angaledam nalenamaga pesathergal yane yantral avargal nenjel thavarana peneerukum yantru solekera rasool salahu alaivasalm solekergal aanum penum thanetherunthal 3vathuaga saithan erukeran yantru)nala karuthai sola vanthu erukeregal varaverga vendeya visayam ethai facebookel matum potamal notice atethu vilepunaru saiungal alah ungalugum yane samuthayatherkum uthave saivanga ameen
    6 hours ago · Unlike · 3
  • Jamaludeen Jamal nice topic
  • Keelai Ilayyavan காக்கா, தங்களின் கருத்து பகிர்விற்கு நன்றி. இறைவன் நாடினால், கையேடாக வெளியிட விரைவில் முயற்சிகள் செய்கிறேன்
    6 hours ago · Like · 3
  • Kader Riyaz Insha alah yane uthavegal ungalugu yapoluthum erukum notec atekum pothu quranvasanangalaum hatethaium sarthu kolungal alah uthave saivan
    5 hours ago · Unlike · 2
  • Mohamed Rasooldeen inda news face book friends mattum pagirndu kolvadai vida,inda message ovoru veetirkum kidaithal nalldu.insha allh muyarchi saiyungal.
    5 hours ago · Unlike · 1
  • Asan Hakkim Good Infirmaction of all
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல விழிப்புணர்வு செய்தி. அனைத்து தரப்பு மக்களும் ஒரு முறையாவது முழுவதும் படிக்க வேண்டிய கட்டுரை 

    //திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
    ''இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்
    களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்''. (அல் குர் ஆன் : 24:37)

    ''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியரிடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)//

2 comments:

  1. அருமையான ஆய்வு கட்டுரை.. வாழ்த்துகள்.. இன்றைய காலக்கட்டத்தில் அலைபேசிகளால் பெண்கள் படும் துயரங்களை வெட்ட வெளிச்சமாக சுட்டி காட்டி உள்ளீர்கள்.. இந்த விழிப்புணர்வு கட்டுரையை பாராட்ட வார்த்தைகள் இல்லை..

    தத்தம் வீட்டில் உள்ள பெண்களை குறிப்பாக இளம் வயதினர், உயர்நிலைப்பள்ளி - கல்லூரி மாணவிச் செல்வங்கள், சம்பாத்தியம் காரணமாக வெளியூர், தூர தேச நாடுகளுக்கு சென்ற கணவன்மார்களை பிரிந்து வாழும் இளம் மனைவிமார்களை பாதுகாக்க வேண்டிய காட்டாய பொறுப்பு வீட்டில் உள்ள ஆண், பெண் ஆகியோருக்கு கட்டாய கூட்டு கடமையாகும். கடமையை மறந்தால் நாசம் தான் மிச்சும்..இது சத்திய வாக்கு. உண்மை எப்போதும் கசக்கத் தான் செய்யும்..

    அதே வேளையில் பெண்களை அலை பேசி என்னும் மாய வலையால் சீரழிக்க எண்ணும் ஆண் எத்தர்களே உங்கள் வீட்டிலும் பெண்கள் உண்டு என்பதை மனதில் கொண்டு அச்ச்த்துடன் செயல் படுவீராக..படைத்த வல்ல ரஹ்மான் பிடரி நரம்புகளுக்கு அருகில் இருந்து உங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற இறைமறை வசனத்தை திண்ணமாக நம்புங்கள்

    ReplyDelete
  2. போலி மூஸா கதையும் அலை பேசியின் விளைவே, திண்ணமாக

    ReplyDelete