தேடல் தொடங்கியதே..

Thursday, 9 May 2013

கீழ‌க்க‌ரை நகரில் 'ஹ‌மீதியா மெட்ரிக்குலேஷன் ப‌ள்ளி' மாண‌வி + 2 தேர்வில் முத‌லிட‌ம் !

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் பெறப்பட்ட +2 மாணவ மாணவிகள் தேர்வினை எழுதி முடிவுக்காக காத்திருந்தனர். இன்று அதற்கான தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குனர். திருமதி. வசுந்தரா தேவி அவர்கள் சென்னையில் வெளியிட்டார். மாணவ மணிகளின் பெற்றோர்களால் மிகுந்த எதிபார்ப்புடன் எதிர் நோக்கப்பட்டிருந்த இந்த தேர்வு முடிவுகளால், கீழக்கரை நகர் காலை பொழுதிலிருந்தே மிகுத்த பரபரப்புடன் காணப்பட்டது.

இது வரை கிடைத்துள்ள தகவல்களின் படி, கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா‌ மெட்ரிக் ப‌ள்ளியில் பயின்ற கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஜாஹிர் ஹீசைன் அவ‌ர்க‌ளின் மகளார் J.ஹ‌ஸ்னா ரஸானா அவர்கள் கீழக்கரை நகரில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.



மாணவி J .ஹ‌ஸ்னா ரஸானா அவர்களுக்கு கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


கீழக்கரை நகர மேனிலைப் பள்ளிகளின் +2 தேர்வு முடிவுகள் - ஓர் ஒப்பீடு !



 ஹமீதியா பள்ளிகளின் +2 தேர்வு முடிவுகள் 
(கடந்த 2012 ஆண்டுடன் ஓர் ஒப்பீடு)

(தகவல் : உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கம், மேலத் தெரு, கீழக்கரை)








கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் மாண‌வ‌ர் அப்துல் க‌ரீம் அஹ்ஷ‌ன் 1146/1200 முத‌லிட‌ம் பெற்றுள்ள‌ர். அவ‌ருக்கு அடுத்த‌ப‌டியாக‌ இர‌ண்டாவதாக‌‌ ப‌ட‌த்தில் மாண‌வி ஹதிஜ‌த்துல் அஃப்ரோஸ் 1123/1200, மூன்ற‌வ‌தாக‌ மாண‌வி முஹ‌ம்ம‌து அபியா,1126/1200 பெற்றுள்ளார். 

இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வர்‌ 'அப்துல் க‌ரீம் அஹ்ஷ‌ன்' அவர்கள் 1146 ம‌திப்பெண்க‌ள் பெற்று கீழ‌க்க‌ரை நகரில் இர‌ண்டாம் இட‌ம் பிடித்துள்ளார்.

FACE BOOK COMMENTS :

Like ·  ·  · Share · Edit

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அரசு இணைய தளங்களில் வெளியீடு - அலைப் பேசி மூலமும் அறிய ஏற்பாடு !


தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரை நடை பெற்றது. 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில்  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும், அதனை பின் வரும் அரசு இணையதள முகவரிகளில் காணலாம் என்றும்  அரசுத் தேர்வுகள் இயக்குனர். திருமதி. வசுந்தரா தேவி அவர்கள் அறிவித்துள்ளார்.




இதில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜி.பி.ஆர்.எஸ். வசதியுடன் செல்போனிலும் தேர்வு முடிவுகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 உயர் தொழில் நுட்ப சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.

* இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தனியார் இணைய தளங்களில் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, அரசு இணையதளங்களின் வேகம் குறையாமல் இருக்க 16  உயர் தொழில் நுட்ப சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

* மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ, மாணவியர் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* செல்போன், எஸ்.எம்.எஸ். மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி : தின மணி )


தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் ஏதேனும் ஒரு  இணையதள முகவரியை கிளிக் செய்து காணலாம்.













பிளஸ் 2  தேர்வு முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கிய அறிவிப்பு :

கீழக்கரையில் +2 மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகளும், அதன் பிரிண்ட் அவுட்டும் இலவசமாக எடுத்து கொடுக்கப்படுகிறது.

கீழக்கரை முஸ்லீம் பஜாரில், வள்ளல் சீதக்காதி சந்தில் செயல்பட்டு வரும், 'மறைக்கா'ஸ் ஹஜ் & உம்ரா சர்வீஸ்' நிறுவனத்தில் +2 மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளும், அதற்கான கணினி பிரிண்ட் அவுட்டும், இலவசமாக எடுத்து கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ மணிகள்பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இந்த நல்ல சேவையை செய்யும், நல் உள்ளங்களுக்கு கீழை இளையவன் வலை தளம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு : ஜனாப். பசீர் அஹமது அவர்கள் - 80127 11656

Tuesday, 7 May 2013

கீழக்கரையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலிலும் அயராது உழைக்கும் பெண்மணி !


கீழக்கரையில் தற்போது அக்னி நட்சத்திரம் வெயில் மிக உக்கிரமாக அனலை கக்கி வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளான 04.05,2013 முதலே கடுமையான வெப்பம் மக்களை பெரிதும் வாட்டி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலானோர் வெயிலின் உக்கிர தாண்டவத்தில்   இருந்து தங்களை காக்கும் பொருட்டு, சாலையோர கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் இளநீர், தர்பூசணி, மோர், பழ ஜூஸ் போன்றவற்றை வாங்கி அருந்தி வருகின்றனர். 



இந்நிலையில் கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (லூலூ சென்டர்) எதிரே, சுட்டெரிக்கும் வெயிலின் கடுமைக்கு இடையிலும், கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்த பாத்திமா என்கிற 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி, இளநீர் வியாபாரம் செய்து உழைத்து வருவது அனைவரையும் 'ஒரு நிமிடம்' நின்று, உழைப்பின் மகத்துவத்தை  சிந்திக்க தூண்டியுள்ளது. இளநீர் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு, மிக கனமான இளநீரை, நொடிப் பொழுதில் அவரே அரிவாளால் சீவி கொடுப்பதோடு, உள்ளிருக்கும் இளம் வழுக்கையை வெட்டி கொடுக்கிறார். ஆண்களே செய்வதற்கு கொஞ்சம் சிரமப்படும் இந்த வேலையை மிக இலாவகமாக செய்வது, அனைவரையும் ஆச்சரியப் பட வைக்கிறது. 


இது குறித்து சகோதரி பாத்திமா அவர்கள் கூறும் போது "நானும் எனது கணவர் அவர்களும் இணைந்து இந்த இளநீர் விற்பனையை ஐந்து வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறோம். இறைவன் அருளால், இந்த தொழில் பரக்கத்தாக இருக்கிறது. ஒரு இளநீர் அதன் அளவு மற்றும் வகைக்கு ஏற்ப ரூ.15 முதல் 25 வரை விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் உள்ளூர் இளநீர், பொள்ளாச்சி இளநீர் மன நிறைவான வகையில் கிடைக்கும். பல வருடங்களாக இந்த தொழிலில் இருப்பதால், மிக விரைவாக சீவி, வெட்டி கொடுப்பது சுலபமாகத் தெரிகிறது." என்று தெரிவித்தார்.

(சகோதரி பாத்திமா அவர்களின் கணவர். இஸ்மாயில் காக்கா அவர்கள், கீழக்கரை ஹமீதியா பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காவலராக பணியாற்றியவர் எனபது குறிப்பிடத் தக்கது.)

இந்த அகினி நட்சத்திர வெயிலின் தாக்கம், எதிர் வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதலே காலை 8 மணிக்கு சுட்டெரிக்க துவங்கும் வெயில் நேரம் ஆக, ஆக அதன் உக்கிரம் தலை கிறுகிறுக்க வைத்து விடுகிறது . இதனால் மாலை நேரங்களில் கீழக்கரை புதிய ஜெட்டி பாலம் பகுதியில், காற்று வாங்க வரும் பொது மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

Sunday, 5 May 2013

கீழக்கரையில் கோடைகால இஸ்லாமிய 'இலவச பயிற்சி' முகாம் - NASA நிர்வாகத்தினரின் சிறப்பான முயற்சி !


கீழக்கரையில் கோடை விடுமுறையை, இஸ்லாமிய வழியில் பயனுள்ளதாக்கிட, வடக்குத் தெரு சமூக நல அமைப்பான NASA நிர்வாகத்தினரின் தொடர் முயற்சியில் நடத்தப்படும் கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம், இறைவன் அருளால் எதிர் வரும் 08.05.2013 முதல் 24.05.2013 வரை நடை பெற உள்ளது. 

(படங்கள் : NASA அமைப்பினரின் சார்பாக, சென்ற ஆண்டு நடை பெற்ற கோடை கால இஸ்லாமிய பயிற்சி முகாம்)







இது குறித்து இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளர். ஜனாப். நிப்ரான் அவர்கள் கூறும் போது "ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் கோடை விடுமுறை காலங்களில் மார்க்க கல்வியை   அடிப்படையாகக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். இம்முகாமில் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள், இறை வழிபாட்டு முறைகள், குர்ஆன் மனனம், ஹதீஸ் மனனம், அரபி மொழி ஆரம்ப பயிற்சி, தீனியாத் வகுப்புகள் போன்றவை சிறப்பாக நடத்தப்படுகிறது. 


இப்பயிற்சி முகாமுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் தற்போது அல் மதரசத்துல் முஹம்மதியா பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்புகள் துவங்க இன்னும் ஓரிரு நாள்களே உள்ளதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, இந்த நல்ல முகாமில் சேர்த்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த பயிற்சிகள் முழுமையும், கீழக்கரை நகர் மாணவர்கள் பயனடையும் நோக்கோடு இலவசமாகவே வழங்கப்படுகிறது. " என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புக்கு : 9965348839, 9003926865