தேடல் தொடங்கியதே..

Monday 11 November 2013

கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் !

"எதிர்கால உலகை ஆளப்போகிறவர்கள் இவர்களே..." என்று அடிக்கடி பெரியவர்களால் சுட்டப்படும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் 'குழந்தைகள் தினம்'. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 



இந்நிலையில் கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் குழந்தைகள் தின விழா போட்டிகள் BLUE DAY & KITE FESTIVAL என்கிற பெயரில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று நடை பெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவ மணிகள் அனைவரும், ஒற்றுமையை வெளிக் கொணரும் விதமாக, நீல வண்ணத்தில் உடையணிந்து கொண்டு பட்டம் பறக்க விடுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். 




மேலும் கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியின் சார்பாக கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, ஓவியம் தீட்டுதல், பெயிண்டிங், கட்டிடக் கலை (ICE STICK MAKING, COLLAGE WORK, FLOWERS ARRANGEMENT, BUILDING BLOCKS, BOAT MAKING) உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மணிகளுக்கும், ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா11 November 2013 at 22:51

    இதை காணும் போது மனம் பேதலிகிறது. காரணம் இது போன்ற வாய்ப்புகள் எங்கள் காலத்தில் (1960 - வாக்கில்) அறவே கிடையாது.
    இன்று இவை எல்லாம் காலத்தின் கட்டாய மாற்றஙகள்.வரவேற்க கூடிய ஒன்று கூட.
    வருங் கால கீழக்கரை இளைய தலைமுறையினரை கால ஓட்டத்திற்கேற்பவும், அவர்கள் யார் என்பதை அவர்களே தெரிந்து கொள்ளும் விதமாகவும், தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும் மாணவச் செல்வங்களை அதற்கேற்ப தயார் படுத்தும் விதமாகவும் கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் பங்காற்றும் தலைமை மற்றும் ஆசிரிய பெருந்தகைகளுக்கும், சீரிய நிர்வாகத்திற்கும் வல்ல நாயனின் அருளாசியும்,கருணையும் கிடைக்க இரு கையேந்தி இறைஞ்சுகின்றேன்

    ReplyDelete