தேடல் தொடங்கியதே..

Thursday 9 May 2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அரசு இணைய தளங்களில் வெளியீடு - அலைப் பேசி மூலமும் அறிய ஏற்பாடு !


தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரை நடை பெற்றது. 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில்  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும், அதனை பின் வரும் அரசு இணையதள முகவரிகளில் காணலாம் என்றும்  அரசுத் தேர்வுகள் இயக்குனர். திருமதி. வசுந்தரா தேவி அவர்கள் அறிவித்துள்ளார்.




இதில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜி.பி.ஆர்.எஸ். வசதியுடன் செல்போனிலும் தேர்வு முடிவுகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 உயர் தொழில் நுட்ப சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.

* இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தனியார் இணைய தளங்களில் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, அரசு இணையதளங்களின் வேகம் குறையாமல் இருக்க 16  உயர் தொழில் நுட்ப சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

* மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ, மாணவியர் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* செல்போன், எஸ்.எம்.எஸ். மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி : தின மணி )


தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் ஏதேனும் ஒரு  இணையதள முகவரியை கிளிக் செய்து காணலாம்.













பிளஸ் 2  தேர்வு முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கிய அறிவிப்பு :

கீழக்கரையில் +2 மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகளும், அதன் பிரிண்ட் அவுட்டும் இலவசமாக எடுத்து கொடுக்கப்படுகிறது.

கீழக்கரை முஸ்லீம் பஜாரில், வள்ளல் சீதக்காதி சந்தில் செயல்பட்டு வரும், 'மறைக்கா'ஸ் ஹஜ் & உம்ரா சர்வீஸ்' நிறுவனத்தில் +2 மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளும், அதற்கான கணினி பிரிண்ட் அவுட்டும், இலவசமாக எடுத்து கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ மணிகள்பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இந்த நல்ல சேவையை செய்யும், நல் உள்ளங்களுக்கு கீழை இளையவன் வலை தளம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு : ஜனாப். பசீர் அஹமது அவர்கள் - 80127 11656

No comments:

Post a Comment