தேடல் தொடங்கியதே..

Monday 2 September 2013

கீழக்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீன் - பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர் !

கீழக்கரை கோல்டன் பீச் அருகே, இன்று (02.9.2013) காலை 6 மணியளவில் சுமார் 5 அடி நீளம், 45 கிலோ எடை கொண்ட, பாட்டில் நோஸ் வகையைச் சேர்ந்த கருப்பு நிற டால்பின், இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. டால்பின் கண், வாயில் காயம் இருந்ததால், பாறையில் மோதி, இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து கீழக்கரை பிரிவு  வனச் சரகர் எஸ்.ஜெயராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கரை ஒதுங்கிய டால்பின் மீனை பொது மக்கள் பலர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். 




சுனாமி தாக்குதலுக்குப் பின் கீழக்கரை பகுதியில் உள்ள கடலோர கிராமங்களில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவதும், அரிய வகை மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 2 மாத காலத்தில் இப்பகுதிகளில் டால்பின் மீன், அறிய வகை கடல் பாம்பு போன்றவை தொடர்ந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதால், இதனை தடுக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த மாதம் கீழக்கரை ஜெட்டிப் பாலம் அருகே கரை ஒதுங்கிய அரிய வகை 'கடல் வாழினம்'  குறித்து நாம் வெளியிட்டிருந்த செய்தியை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும் .

No comments:

Post a Comment