கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த செல்லாப்பா அவர்கள் தோட்டக் கலையில் அளப்பரிய ஆர்வமுடையவர். இவருடைய தோட்டம் கீழக்கரை அருகே மாலாக்குண்டு பகுதியில் அமைந்துள்ளது. இவருடைய தோட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட, மரக்கன்றுகளும், செடிகளும் வளர்க்கப்படுகிறது. லிபியா நாட்டிலிருந்து வாங்கி வரப்பட்ட ஆலிவ், ஜெர்மனி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மெகா சைஸ் எலுமிச்சை, இலங்கையிலிருந்து வாங்கி வரப்பட்ட தென்னை என்று இதன் பட்டியல் நீள்கிறது. இவை தவிர இன்னும் பல்வேறு வகையான, அரிய மரக் கன்றுகளை தன்னுடைய தோட்டத்தில் வளர்த்து வருகிறார். இந்த பட்டியலில் தற்போது 'மைசூர் சந்தன மரங்களும்' இடம் பெற்று இருக்கிறது.
நம் கீழக்கரை மண்ணில் சந்தன மரங்கள் வளர வாய்ப்புள்ளதா? என்று ஆச்சிரியத்தில், இவருடைய தோட்டத்திற்கு தினமும் ஏராளமானோர் காண வருகின்றனர். தற்போது இவர் துபாயில் தலைமையகத்தை கொண்டு இயங்கி வரும் ஈ.டி.ஏ ஸ்டார் குழுமத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து செல்லாப்பா அவர்கள் கூறும் போது, "எனக்கு சிறு வயதிலிருந்தே, தோட்டக்கலை மீது ஆர்வமுண்டு. எனவே நான் ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்கு சென்று வரும் போதெல்லாம், நம் பகுதியின் சீதோசன நிலைக்கு ஏற்ற, ஏதாவது ஒரு செடியை வாங்கி வருவேன். இப்படி நான் வாங்கி வந்த செடிகள் தான், தற்போது என் தோட்டத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது மைசூர் சந்தன மரங்களையும் நடவு செய்து வளர்த்து வருகிறேன். இவ்வகை மரங்களை வளர்ப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

கீழக்கரை பகுதியில் சந்தன மரம் வளர்க்க, முன் வருபவர்களுக்கான அறிவுரைகள்
சந்தன மரங்களை வளர்ப்பவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.
ஐந்தாண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். சந்தன மரத்தின் மூலம் வரும் வருமானத்தில் 25% அரசுக்கு வரியாகவும், 75% வளர்ப்பவர்களுக்கு வருமானமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மொத்தத் தொகையும் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே சந்தன மரங்களை வளர்க்க அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அனைவரும் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்கலாம். சந்தன மரங்கள் வேலிகளிலும், தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய மரமாகும்.

தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர்.
சந்தன மரங்களை வீடுகளிலும், பூங்காக்களிலும், விவசாய நிலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்க்கலாம். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும், தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் வளரக்கூடியது.
விவசாயமாக செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் இணைந்து வளரும் தன்மை கொண்டது. எனவே தென்னை, நெல்லி, சப்போட்டா, முருங்கை, சீத்தா, காட்டாமணக்கு, முந்திரி மற்றும் பலவகையான தோப்புகளில் ஊடுபயிராக வளர்க்கலாம்
தற்போது ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 8000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 12 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து மூன்று முதல் ஐந்து கிலோ கட்டை (வாசனை மிகுந்த வைரப்பகுதி) கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்தின் மூலம் ஒரு மரத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம்.
இன்றைய நிலமைக்கு மரம் வளர்ப்பும் லாபகரமானது தான். மிகக்குறைந்த ஆட்தேவை, இடுபொருள் செலவு, பராமரிப்பு செலவு, அதிக லாபம் இதற்காகவே மரம் வளர்ப்பும், பரிந்துரை செய்யப்படுகிறது. இதனை மிகச் சிறப்பாக நம் கீழக்கரை பகுதியில் செயலாற்றி வரும் செல்லாப்பா அவர்களுக்கு கீழை இளையவன் வலை தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

APPO INIMEL IVARU "KEELAI VEERAPPAN"
ReplyDelete