தேடல் தொடங்கியதே..

Tuesday 24 July 2012

கீழக்கரையில் குப்பைகளால் வஞ்சிக்கப்பட்ட பகுதிகள் - தீராத வேதனையில் குமுறும் பொதுமக்கள் !

கீழக்கரையின் சுகாதார சீர்கேடுகளை களைய, மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் (PWPO), கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் (KMSS) உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்புகளும் பல ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, சமீபத்தில் இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் எடுத்த முயற்சிகளின் விளைவாக,  ஜீ தமிழ் தொலைகாட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியின் மூலம் காணொளிப் படம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

500 பிளாட் செல்லும் பகுதி

இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக க‌ட‌ந்த‌ சில‌ நாட்களுக்கு முன்,  நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் திரு.குபேந்திரன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு நந்த குமார், சுகாதாரத்துறை  உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கீழக்கரையில் ஆய்வு செய்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக கடற்கரையை ஒட்டிய கலங்கரை விளக்கம் பகுதிகளில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் நகருக்குள் துப்புரவு பணியாளர்களால், பல காலங்களாக கண்டு கொள்ளப்படாத 'குப்பை களஞ்சியங்கள்' ஏராளமாக காணப்படுகிறது. 

இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகி A.M.ஹாஜா அனீஸ் அவர்கள் கூறும் போது " கீழக்கரை மேலத் தெருவிலிருந்து 500 பிளாட் செல்லும் பகுதியிலும், பழைய குத்பா பள்ளி பின்புறம் உள்ள அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதியிலும்  காலம் காலமாக, துர்நாற்றம் வீசும் கோழிக் கழிவுகள், மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. 

இந்த பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் பறந்து கொண்டிருக்கிறது. இந்த பக்கம் கடந்து செல்பவர்கள் துர்நாற்றம் தாங்காமல் வேறு பக்கமாக சுற்றிச் செல்கின்றனர். நகராட்சி ஆணையர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற ஆவன செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதி - O.J.M.தெரு, கீழக்கரை
இது குறித்து மேலத் தெருவைச் சேர்ந்த மசூது மவுலானா அவர்கள் கூறும் போது "சமீபத்தில் நம் கீழக்கரை நகரின் சுகாதார சீர்கேடு புகார்கள் அடிப்படையில், நேரடி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் ஆண்டாண்டு காலமாக குப்பைகள் கிடக்கும் பகுதிகளை ஆய்வு செய்யாமல், நல்ல நிலைமையில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் சென்றுள்ளனர். 

இந்த 500 பிளாட் குப்பை மேட்டின் அருகில் தான் தொழுகை பள்ளிவாசல் உள்ளது. தொழுகைக்கு செல்பவர்கள் கூட, இந்த துர் நாற்றம் மிகுந்த குப்பைகளால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும். இல்லாத போது வஞ்சிக்கப்பட்ட பகுதியாக, இந்த பகுதியை அறிவித்தால் நல்லது" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.

7 comments:

  1. தற்போது விரைவாக நடவடிக்கை எடுத்து 500 பிளாட் பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
    மீண்டும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படாத வண்ணம், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்க் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. பொய்யான அலங்காரமான வாக்குறுதிகளை நம்பி, நம்பிக்கையுடன் ஓட்டளித்த மக்களை ஏமாற்றி இப்போது பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பதவிகளை துறக்க வேண்டும்.

    நகரின் சுகாதாரத்தை பின்னுக்கு தள்ளி சாலைகளை அமைப்பதில் முஸ்திபு காட்டுகிறார்களே. அது ஏன்? சமீபத்தில் நகர் சுகாதாரம் பற்றி ஜி தமிழ் தொலைகாட்சி ஒளிபரப்பின் நடுவே ஆணையர் (பொருப்பு) உடன் நடந்த தொலைபேசி உரையாடலில் அவர் அறிவித்தப்படி வரும் நிதி ஆண்டில் பாதாள சாக்கடை திட்டம் அமுல் படுத்தப் படுமானால் இந்த சாலைகளின் கதி? அந்தோ மக்களின் வரி பணம்.

    தற்போது குப்பைக்கரை என புகழ் பெற்ற கீழக்கரையின் தலையாய பிரச்சனையே குப்பைதான் என்பதில் இங்குள்ள மக்களிடையே இரண்டாம் கருத்து கிடையாது.இது பற்றி மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ளாதது ஏன்? ஏன்? ஏன்? உப்புக்கு சப்பில்லாத ஆயிரம் சமாதானங்களை சொல்லுகிறார்கள். குறைந்த பட்ஷம் வாருகால்களை முறையாக மூடி அடைப்புக்களை நீக்கி தொற்று கிருமி களின் உற்பத்தியை தடை செய்தார்களா? இதற்கு ஒன்பது மாத அவகாசம் போதாத? உதாரணத்திற்கு துணை தலைவரின் அலுவலகம் அமைந்துள்ள முஸ்லீம் பஜாரிலிருந்து பழைய மீன் கடை செல்லும் (ஒ.ஜே.எம் தெரு)சாலையில் ஊர் மக்களே வந்து கண் குளிர கண்டு செல்லுங்கள்.

    பொதுவாக நகரில் தற்சமயம் பலவிதமான தொற்று வியாதிகள் பரவி காணப்படுகிறது. உள்ளூர் மற்றும் இராமநாதபுரம் குழந்தைக்கான சிறப்பு மருத்துவர்களை பேட்டி கண்டாலே அதன கொடுரம் தெரிய வரும்.

    சமீபத்திய பத்திரிக்கை செய்தியில் பிரதானமாக கடற்கரை ஓர குடி இருப்பு பகுதிகளில் தொற்று நோய்க்கான கிருமிகள் அபரிதமாக காணப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணம் கடற்கரை ஓர திறந்த வெளிகளில் கருவாட்டிற்காக மீன்களை காயப் போடுவதுதான்.

    இது விஷயத்தில் நமது நகரின் நிலைமை? அனுதினமும் கடற்காற்று கரையை நோக்கி வீசும் போது, அது புழுக்கள் நிறைந்த கருவாடுகளை ஆரத்தழுவி வந்த பின்னரே நாம் சுவாசிக்கக்கூடிய கட்டாயத்தில் வாழ்ந்து வருகிறோம்.அதன் கொடுமையை (அதிலும் காலை வேளையில்) கடற்கரை ஓரத்தில் குடி இருக்கும் மக்களிடம் கேட்டால்தான் அதன் கொடுரம் புரியும்.

    முன் காலங்களில் மக்கள் குடி இருப்புகள் குறைவாக,மேலும் மீன்பிடி இயந்தர படகுகள் அபரிதமாக இருந்த காலத்தில் கூட கருவாடுகளை ஊருக்கு வெளியே கிழக்குப் பக்கத்தில் பெரிய பட்டணத்திற்கு இடைப்பட்ட திறந்த வெளியிலும், மேற்கே சின்ன ஏர்வாடிக்கு அருகில் குடி இருப்பு இல்லாத பகுதியிலும் மீன்களை காயப் போடுவார்கள். யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் இப்போது சொரணை அற்ற கீழக்கரை மக்களின் தயாள இரக்க குணத்தை பகடை காயாக்கி கொடூர வியாதிகளை குறிப்பாக குழந்தைகளுக்கு பரப்பி வருகிறார்கள். அந்த இரண்டு நபர்களின் சுகபோகத்திற்காக ஊர் மக்கள் வேதனை அடையத்தான் வேண்டுமா? மக்களே சிந்திப்பீர்களா? ஒருவர் கடுவாட்டு பண்ணை வைத்திருப்பவர். மற்றவர் இடத்தை வாடகைக்கு விட்டவர்கள்.அவர்களின் செல்வத் தகுதிக்கு இந்த வருமானம் கடலில் கரைத்த பெருங்காயம். ஆனால் மக்கள் படும் அவதியோ சொல்லும் தரமன்று.

    மக்கள் நலம் கருதி மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பூனைக்கு மணி கட்டுவது யார்? லஞ்ச லாவண்ணியத்திற்கு அடி பணியாது நகராட்சியின் சுகாதாரத் துறை போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா? மாவட்ட சுகாதார மேளாளர் திருமதி.உமா மகேஸ்வரி இது விசயத்தில் கவனம் செலுத்துவார்களா. அவ்ரது பார்வைக்கு யாராவது சமூக ஆர்வலர் கொண்டு செல்லுவார்களா?

    இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்த்கீம்.

    ReplyDelete
  3. பொய்யான அலங்காரமான வாக்குறுதிகளை நம்பி, நம்பிக்கையுடன் ஓட்டளித்த மக்களை ஏமாற்றி இப்போது பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பதவிகளை துறக்க வேண்டும்.

  4. பொய்யான அலங்காரமான வாக்குறுதிகளை பரிபூரணமாக விசுவாசித்து ஓட்டளித்த பொது மக்களின் நம்பிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டு இன்று பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் மனம் மாற வேண்டும். சேவை மனப்பான்மையை செம்மையாக பேணி செயல் பட்டால் மட்டமே நகர் வளர்ச்சி காணமுடியும். மேம்படவும முடியும். இது ஒரு கசப்பான உண்மை.

    இன்றைய காலக்கட்டத்தில் குப்பைக்கரையாக பெயர் பெற்றிருக்கும் ஓராயிரம் ஆண்டுக்கு மேலான சரித்திரத்தை தன்னகத்தே வைத்திருக்கும் பாரம்பரியம் மிக்க கீழக்கரை நகர் குப்பை களஞ்சியமாக மாற முக்கிய காரணம் சேவை மனப்பான்மை இல்லாத இன்னால் மற்றும் முன்னால் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த பொது மக்களே குற்றவாளிகள். ஏன் என்றால் வெளியூர்காரர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லையே. உள்ளூர் வாசிகளை அதிலும் நன்கு அறிமுகமான தெரு வாசிகளை தானே தெரிவு செய்தோம். அந்த தவறான முடிவின் பயனை இன்று அனுபவிக்கிறோம். இனி அதைப் பற்றி பயன் யாது? வருங்காலங்களில் சிந்திப்போமாக.

    ஊர் சுகாதாரத்தையே பிரதானப் படுத்தி நடந்து முடிந்ததுதான் கடந்த நகராட்சி தேர்தல்.அந்தோ பரிதாபம். இன்று ? அதையே புறக்கணித்து விட்டு தரமில்லாத சாலைகளை அமைப்பதிலேயே அபரிதமான முஸ்தீபு செய்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் ஜி தமிழ் தொலை காட்சியில் ஒளிபரப்பில் நகரின் மானம் தோலுரித்து காட்டப்பட்டதது. இடையில் திருவாளர் நகரின் ஆணையர் (பொருப்பு) அவர்களின் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவரது கூற்றுப்படி வரும் நிதி ஆண்டில் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப் படுமானால் இந்த கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே போடப்பட்ட சாலைகளின் கதி? அந்தோ மக்களின் வரிப்பணம்.

    ReplyDelete
  5. சமீபத்திய பத்திரிக்கையின் குறிப்புபடி கடலோர குடி இருப்பு கிராமங்களில் தொற்று நோய் கிருமிகள் அபரிதமாக காணப்படுகிறது. காரணம் அங்கேல்லாம் ஊற வைத்து நாற்றம் எடுத்த மீன்களை கருவாடு தயாரிக்க மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே திறந்த வெளியில் காயப் போடுகிறார்கள்.

    இது விஷயத்தில் நமதூரின் நிலை என்ன? நமதூரின் சிறிய கடற்கரையை அடைத்தாற்போல் கருவாடு பண்ணை உள்ளது. அனுதினமும் கடற்காற்று தரையை நோக்கி வீசும் போது அங்கு காயப்போட்டிருக்கும் கருவாடுகளை ஆரத் தழுவி தொற்றுக் கிருமிகளுடன் ஊருக்குள் நுழையும் காற்றை சுவாசிக்க கூடிய கட்டாய்த்தில் நாம் இருக்கிறோம். கணாததற்கு கடற்கரை ஓரக்களில் குப்பை மலைகள்.இதன் பயனாகவே வருடம் முழுவதும் நகரில் தொற்று வியாதிகள் தீராத பிரச்சனையாக உள்ளது. இது சம்பந்தமாக உள்ளூர் மற்றும் இராமநாதபுரத்தில் உள்ள சிறப்பு குழந்தை மருத்துவர்களிடம் கேட்டால் மனதை பிழியும் அதிர்ச்சியான அறிக்கைதான் கிடைக்கும். அதிலும் கடற்கரை ஓரங்களில் குடி இருப்போரிடம் முக்கியமாக காலை வேளையில் அவர்கள் படும் துயரத்தை கேட்டால் அதை எஅழுத்தில் வடிக்க முடியாது.

    ReplyDelete
  6. முன் காலங்களில் கருவாடு பண்னைகள் ஊருக்கு கிழக்கே பெரிய பட்டிணத்த்ற்கு இடைப்ப்டட மக்கள் குடி இருப்பு இல்லாத திறந்த வெளியிலும், மேற்கே சின்ன ஏர்வாடிக்கு இடைப்பட்ட மக்கள் குடி இருப்பு இல்லாத திறந்த வெளிப் பகுதியிலும் காயப் போடுவார்கள். இது மட்டும் அல்ல. திராவகம் கல்ந்த கடல் பாசிகளையும் காயப் போடுவார்கள்.

    ஆனல் சமீப காலங்களில் ஊரின் நலனில் அக்கரை அற்ற சொரணை அற்ற பொரும்பாலன மக்களின் காரணமாக, போகுவரத்து செலவை மிச்சப்படுத்தி தொழிலில் கொள்ளை லாபம் காண இவர்கள் ஊர் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கி பூமியிலேயே சுகிக்க வைக்கிறார்கள். கஷ்டத்தை அனுபவிகிறர்களே தவிர எதிர்ப்பு இல்லை. வசூல் வேட்டை நடத்தி குதுகளிக்கும் பொது நல அமைப்புகளும் கண்டு கொள்வதில்லை. (விதி விலக்காக இருக்கும் மிகச் சில பொது நல அமைப்புகள் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

    தனிப்பட்ட இரண்டு நபர்களுக்காக ஊர் மக்கள் அல்லல் படத்தான் வேண்டுமா? ஒருவர் வெளியூர் வாசியான கருவாடு பண்ணைக்காரர். மற்றவர் இடத்தை வாடகைக்கு கொடுத்தவர்கள்.அவர்களின் செல்வத் த்குதிக்கு இந்த வாடகை வருமானம் ஒரு பொருட்டே அல்ல. ஊர் மக்களின் நலன் கருதி மனம் மாற எல்லாம் வல்ல ரஹ்மான் கருணை புரிவானாக.ஆமீன்.

    பூனைக்கு யார் மணி கட்டுவது? நகராட்சி சுகாதாரத் துறையும், மாவட்ட சுகாதார மேலாளர் திருமதி. உமா மகேஸ்வரியும் லஞ்ச லாவண்ணியத்திற்கு இடம் கொடாது போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நகர மக்களை குறிப்பாக குழந்தை செல்வங்களை காக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் கட்சி பாகுபாடு இன்றி துயர் நீங்க பாடு பட வேண்டும்.

    ReplyDelete