தேடல் தொடங்கியதே..

Sunday 25 November 2012

கீழக்கரையில் லேசான சாரல் மழை - வெயிலுடன் வீசும் குளிர் காற்று !

கீழக்கரை நகரில் இன்று (25.11.2012) அதிகாலை முதலே லேசான தூறலுடன் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டம் இல்லாமல் வெறித்தே காணப்படுகிறது. அவ்வப்போது வெயிலும் அடித்து வருகிறது. இருப்பினும் குளிர் காற்று வீசிய வண்ணம் உள்ளது. இந்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கீழக்கரை பகுதியில் கடந்த மாதம் பெய்த கன மழைக்கு பிறகு மழையின் அடிச்சுவடே இல்லாமல் வெயிலின் கடுமை வெளுத்து வாங்கியது.  அதன் பின் தற்போது பெய்து வரும் சாரல் மழையால், நகரெங்கும் குளுமை நிலவி வருகிறது. 






வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையான தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவையொட்டி பரவுயுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக தென் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

No comments:

Post a Comment