தேடல் தொடங்கியதே..

Sunday 25 November 2012

சில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அந்நிய‌ முதலீட்டு சதியை முறியடிக்க துண்டு பிரசுரங்கள் விநியோக‌ம் - கீழ‌க்க‌ரையில் மனித நேய மக்கள் கட்சியினர் முயற்சி!

சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வு பரப்புரை நடத்தி வருகிறது. வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து முழு விபரங்கள் அடங்கிய 1 கோடி துண்டுப் பிரசுரங்கள் வினியோகத்தை மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் தொடங்கி வைத்து பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். 




இவை தவிர, சுவரொட்டிகள், வீதி முழக்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகன பரப்புரை என பன்முக அம்சங்களோடு, தமிழகமெங்கும் இப்பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. மதுரையில் ம.ம.க.பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் இதற்கான நிகழ்ச்சிகளை துவங்கினார். 





இந்நிலையில் கீழக்கரையிலும், இதற்கான விழிப்புணர்வு பிர‌ச்சார‌த்தில் கீழக்கரை நகர் நிர்வாகிகள் ஈசி ஜெராக்ஸ் சாதிக், இக்பால், மாவட்ட தலைவர் பகுதிகளுக்கு  ந‌டை பய‌ண‌மாக‌ சென்று வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் துண்டு பிர‌சுர‌ங்க‌ளை வழங்கி, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு நுழைந்தால் அனைத்து தரப்பு மக்களும் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்?என்பதனை விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தற்போது தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழையா விட்டாலும் கூட, வழங்கப்பட்டு வரும் பரப்புரையால், எதிர் காலங்களில் பொது மக்கள் இது குறித்த விழிப்புணர்வோடு இருப்பார்கள் எனபது நிதர்சனமே..

No comments:

Post a Comment