தேடல் தொடங்கியதே..

Sunday 19 May 2013

கீழக்கரை நகராட்சியால் தொடர்ந்து புறக்கணிக்கப் படும் 18 வது வார்டு பகுதி - குமுறும் பொது மக்கள் !


கீழக்கரை 18 வது வார்டு பகுதியில் உள்ள வாருகால்களிருந்து சாக்கடை சகதிகள், பொது மக்கள் நடமாடும் பாதைகளில் அள்ளி வைக்கப்படுவதால் பெரும் சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதாகவும், இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பல்வேறு விதமான நோய்களால் அவதிப்படுவதாகவும், இந்த 18 வது வார்டு பகுதி மட்டும் நகராட்சி நிர்வாகத்தினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


இது குறித்து தெற்குத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர். அஸ்வத் கரீம் அவர்கள் கூறும் போது " எங்கள்  18 வது வார்டு பகுதியான நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதியிலிருந்து, டவுன் காஜி இல்லம் வழியாக கட்டளிமுசா பங்களா முதல் பாபு ஆட்டோ ஸ்டாண்ட் வரை உள்ள சாக்கடை வாருகால்கள் எதற்கும் முறையாக மூடி போட வில்லை. இதனால் தெருக்களில் சேரும் குப்பைகள் அத்தனையும் வாருகால்களில் விழுந்து, கழிவு நீர் சரியாக ஓடாமல் சாக்கடை தண்ணீர் தெருவெங்கும் வழிந்து ஓடுகிறது. 


பின்னர் துப்புரவுப் பணியாளர்களால் தெருக்களில் அள்ளி வைக்கப்படும் சாக்கடைகள், அங்கிருந்து அப்புறப் படுத்தப்படாமல் நடப்பவர்களின் கால்களில் மிதிபட்டு துன்பம் ஏற்படுத்துவதுடன், சகிக்க முடியாத துர் நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நகர்ராட்சி அலுவலர்களிடம் இது சம்பந்தமாக கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 18 வது வார்டை பொருத்தமட்டில் ,இந்த சாக்கடை விஷயம் மட்டுமல்ல. இது போன்ற அனைத்து பிரச்சனைக்கும், உடனடியாக தீர்க்கப்படாமல், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது." என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

இது குறித்து தெற்குத் தெருவை சேர்ந்த ஜமீல் அஹமது அவர்கள் கூறும் போது "நகராட்சி சார்பாக எங்கள் பகுதியில் எந்த பணிகளும் சரிவர செய்யப்படுவது இல்லை. கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையிலிருந்து தெற்கு தெரு இஸ்லாமியா பள்ளிகளுக்கு செல்லும் சாலையில், பாபு ஆட்டோ ஸ்டான்ட் அருகில் ( 18வது வார்டு பகுதி ) 'அபாயப் பள்ளம்' ஒன்று வாயைப் பிளந்தவாறு பேராபத்தை விளைவிக்க காத்திருக்கிறது.



முதியவர்களும் பள்ளிச் சிறுவர்களும் கடந்து செல்லும் இந்த சாலையில் உள்ள பள்ளத்தை, சீர் செய்ய பலமுறை நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் இல்லை. யாரவது விழுந்து முதுகெலும்பு ஒடிந்தால் மட்டும் தான் விடிவுகாலம் பிறக்கும் போலத் தெரிகிறது" என்று தளர்ந்த குரலில் தன் மனக் குமுறலை வெளிப்படுத்தினார். 

கீழக்கரை நகரில் இது போலவே இன்னும் சாக்கடையிலிருந்து விமோசனம் பெறாத பகுதிகள் ஏராளமாக காட்சியளித்தே வருகிறது. உதாரணமாக கீழக்கரை நடுத்தெரு, நெய்னா முகம்மது தண்டையல் தெருப் பகுதியை குறிப்பிடலாம். 



இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி பார்க்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.  

கீழக்கரை நடுத் தெருவில் நாறிக் கிடக்கும் சாக்கடைகளுக்கு தீர்வு கிடைக்குமா ??
http://keelaiilayyavan.blogspot.in/2012/11/blog-post_22.html

FACE BOOK COMMENTS :
  • Segu Sathaku Ibrahim ஊர் முழுக்க வாருகால்வாய்களுக்கு மூடி போட ஒன்ணரை ஆண்டு காலம் போதாதா?
  • Hassan Ali ராமராஜன் (டவுசர்)சொன்னமாத்ரி சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போலவருமா இதை பார்த்து பார்த்து சலிச்சி போச்சி வேற எதாவது இருந்தால் போடுங்கள் சாக்கடையும் ,குப்பையும் இருந்தாதான் அது கீழக்கரை நம் குழந்தைகள் நம்ம ஊரில் வாழ்ந்து விட்டால் போதும் அந்த குழந்தைகள் வேறு எங்கும் நோயில்லாமல் வாழ்ந்துவிடும் ஏன்டா அது வாழ்ந்த இடம் அப்படி
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை நகராட்சிக்கு ஒரு நல்ல பொறுப்பான ஆணையரை, தமிழக அரசு பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் ஆவல் கொண்டிருந்த சமயத்தில், கடந்த ஆண்டு பொறுப்பேற்ற, கமிசனர் ஆரம்பத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டதோடு சரி. அதோடு பழைய குருடி கதவ தொறடி என்று பழைய பஞ்சாங்கத்திற்கே சென்று விட்டது அவர் மீது நம்பிக்கை வைத்திருந்து பொதுமக்கள் தலையில் இடியாய் இறங்கி இருக்கிறது. 

    அவருக்கும், அரசியல் தலைகளுக்கும் ஒத்துப் போகும் வார்டு கவுசிலர்களின் பகுதிகள் மட்டுமாவது ஓரளவுக்கு நாறாமல் இருக்கிறதா ? என்றால் அதுவும் இல்லை. இப்படி நகர் நலனில் அக்கறை இல்லாமல் நடந்து கொள்ளும் கமிஷனரின் பொறுப்பற்ற பல பணிகளால், கீழக்கரை நகராட்சியின் வருவாயும், மத்திய மாநில அரசுகளின் நிதிகளும் வீணாகி வருகிறது. 

    ஒரு உதாரணத்திற்கு கீழக்கரை நகராட்சிக்கு வாங்கியிருக்கும் கழிவு நீர் உருஞ்சும் (மெகா சக்கர்) வாகனத்தை சொல்லலாம். கீழக்கரை நகரின் எந்த தெருக்குள்ளும் செல்ல முடியாத இந்த பிரமாண்டமான, மிகப் பெரிய உருவில் இருக்கும் வண்டியை என்ன காரணத்திற்காக வாங்கினார்கள் என்று இது வரை யாருக்கும் புரியவில்லை. 

    கமிசனர் ஒரு முறை யோசித்து செயல்பட்டு இருந்தால், இந்த மெகா வண்டியை வாங்கியதற்கு பதிலாக, அதே தொகையை வைத்து, கீழக்கரையின் அனைத்து தெருக்களுக்கு உள்ளும் செல்லக் கூடிய மூன்று சிறிய அளவில் இருக்கும் கழிவு நீர் உருஞ்சும் ( மினி சக்கர் ) வாகனங்களை வாங்கி இருக்கலாம். 

    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று இறுமாப்போடு இருக்கும் மங்குனி மனிதர்களே.. உங்களை இறைவன் கடுமையாக பிடித்து உலுக்கும் நாள், வெகு விரைவில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்.

1 comment:

  1. இப்போது உள்ள நிர்வாகம் பதவி ஏற்று ஒன்ணரை ஆண்டுகளை தாண்டி விட்டது.நடந்து முடிந்த நகராட்சி தேர்தல்,நகர் சுகாதாரத்தை முன்னிலைப் படுத்தி குப்பைக்கரையான கீழக்கரை நகரை முடிந்த அளவு தூய்மையான நகராக மாற்றும் முகமாக பரவலாக பேசப்பட்டு நகரின் முதல் குடிமகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வேட்பாளர்கள் இது சமபந்தமாக பல் வேறு வகையான வாக்குறுதிகளை கூறி அதன் பயனாக வாகை சூடி பதவியில் அமர்ந்தனர்.

    அவர்கள் முன் நாம் வைக்கும் பல கேள்விகளில் ஒன்று:

    ஊர் முழுக்க வாருகால்வாய்களுக்கு மூடி போட ஒன்ணரை ஆண்டு காலம் போதாதா? கோடிகணக்கில் நிர்வாகத்தில் பணம் இருந்தும் அந்த பணியை முடிக்காததன் நோக்கம் தான் என்ன? மூடி போட்டிருந்தால் இந்த அடைப்புகள் ஏற்படாது அல்லவா? இதற்காக முதல் குடிமகளும் பொது மக்களை நோகக் கூடிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா?

    இனியாவது சிந்தித்து விரைந்து செயல் பட வேண்டுகிறோம்.

    ReplyDelete