தேடல் தொடங்கியதே..

Friday, 21 June 2013

கீழக்கரையில் புரதான 'பழைய குத்பா பள்ளி வாசலை' பழைமையுடன் புனரமைப்பு செய்ய ஜமாத்தார்கள் கலந்தாய்வு - BSA அஸ்ரப் புஹாரி அவர்கள் பங்கேற்பு !

இந்திய தேசத்தில் மிகப் பழமையான பள்ளி வாசலாகவும், கீழக்கரை நகரின் புரதான பள்ளிவாசல்களில் ஒன்றாகவும் பழைய குத்பா பள்ளி மஸ்ஜித் திகழ்கிறது. 'பாதன் பள்ளி' என்றும் 'பாத்தன் பள்ளி' என்றும் 750 ஆண்டுகளுக்கு முன், கீழக்கரை வந்த கடல் வழி வரலாற்று ஆய்வாளர் இப்னு பதுதா அவர்களின் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது இந்த புராதானப் பள்ளிவாசலின் பழைமை மாறாமல், மீண்டும் புனரமைப்பு செய்யவும், விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளவும், பழைய குத்பா ஜமாஅத் நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக ஜமாத்தார்கள், நகரின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட, கலந்தாய்வு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (17.06.2013) லுஹர் தொழுகைக்கு பின்பு நடை பெற்றது.


இந்த கலந்தாய்வில் கீழக்கரை ஓடக்கரை பள்ளியினை பழமை மாறாமல் புரனமைப்பு செய்ததை போன்று பாதன் பள்ளியையும் புரனமைப்பு செய்யும் வழி முறைகள் பற்றி கலந்தாய்வு செய்ய ஓடக்கரை பள்ளி புரனமைப்பு குழுவின் முக்கிய அங்கதினர்களாக BSA அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனார்.அஷ்ரப் அப்துல் ரஹ்மான் புஹாரி, மற்றும் தைக்கா வாப்பா அவர்களின் பேரர். நிஜாமுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர். ஜனாப்.ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். துணை தலைவர் கிதுர் முஹம்மது, முன்னாள் ஜமாஅத் தலைவர் முஹம்மது சதக் தம்பி, முன்னாள் துணை தலைவர் சீனி முஹம்மது, முன்னாள் செயலாளர்கள் ஜின்னா சாகிபு, அஹமது சுல்தான், சபீர் அலி, ஏ கே எஸ் ஹமீது சுல்தான், ஹிதாயத்துல்லாஹ், வரலாற்று ஆய்வாளர். அபு சாலிஹ், மூர் டிராவல்ஸ் அசனுதீன், இஞ்சினியர் கபீர் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு, தங்கள் ஆக்கப்பூர்வ கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பள்ளியின் புரனமைபின் முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டது, மேலும் பள்ளியை முன் அல்லது பின்புறம் அல்லது முன் பின்புறம் கல் பள்ளியாக விஸ்திகரிப்பு செய்வது பற்றியும் பேசப்பட்டது. 

பழைய குத்பா பள்ளி குறித்த வரலாற்றுச் சுவடுகள் :

கீழக்கரை பழைய குத்பா பள்ளி, பாரசீகர்கள் குடியமர்ந்த காலத்தில் (10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கலப்பிரயர்கள் ஆட்சி காலத்தில்) இப்பள்ளி கட்டப்பட்டதாக வரலாற்றுச் சுவடுகள் தெளிவுறுத்துகிறது.

கீழக்கரைக்கு கடல் வழியாக ஆய்வுக்கு வந்த வரலாற்று ஆய்வாளர். இபுனு பதூதா, இந்த பள்ளி குறித்து பதிவு செய்து இருக்கிறார். 

கி.பி.12 ஆம் நூற்றாண்டு வாக்கில், பவுத்திர மாணிக்கப் பட்டிணமாக அறியப்பட்ட கீழக்கரை நகரில், இப்பள்ளிவாசல் ஷஹீது போருக்குப் பின், பாண்டிய, சோழ அரசுகளின் ஒத்துழைப்புடன், அராபிய வணிகர்கள், பாரசீக - யமானிய வம்சா வழிகளால்  புனரமைக்கப்பட்டது. 

மேலும் கி.பி.1500 முதல் 1600 காலக் கட்டத்தில், வள்ளல் சீதக்காதி அவர்களின் தாய் வழிப் பாட்டனார் 'வவ்வாலி மரைக்காயர்' என்று அழைக்கப்பட்ட நெய்னா முஹம்மது மறைக்காயர் அவர்களால் விஸ்தரிப்பு செய்யப்பட்டது. இதுவே கீழக்கரையின் முதல் குத்பா பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த கலந்தாய்வில் பேசிய B.S.A அவர்களின் மகனார் அஷ்ரப் புகாரி அவர்கள் "உலக அளவில் பழமை வாய்ந்த பள்ளிகளின் ஒன்றாக திகழும் இந்த பள்ளி பழமைக்கும் நமது பாரம்பரியத்திற்கும் முன் உதாரணமாக  திகழ்கிறது. கீழக்கரை வரலாற்றின் முதல் இடமாக திகழும் இந்த பள்ளியை பழமை மாறாமல் பாதுகாப்பது நமது அனைவரது கடமையாகும். அனைவரும் ஒன்றுபட்டு இந்த பள்ளியை புரனமைதல் செய்வதற்கும், பள்ளியை விஸ்திகரிப்பு செய்வதற்கும் பாடுபடுவதோடு மட்டும் இல்லாமல் அனைத்திலும் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். நிஜாமுதீன் அவர்கள் பேசும் போது "இப்பள்ளியை விஸ்திகரிப்பு செய்யும் போது கல் பள்ளியகவே விஸ்திகரிப்பு செய்ய வேண்டும். ஏனெனில் காங்க்ரீட் கட்டிடத்தின் காலவரம்பு 40 ஆண்டுகளுக்கு மட்டுமே. ஆனால் கல் பள்ளிக்கோபான் நெடுங்காலம்  காலம் உறுதியாக நின்று நூற்றாண்டுகள் பேசும் காலவரம்பு உண்டு" என்பதை தெளிவுபடுத்தினர். 

இது குறித்து கீழக்கரை வரலாற்று ஆய்வாளர்.அபு சாலிஹ் கூறும் போது "கீழக்கரையின் பழைய குத்ப பள்ளி ஜமாஅத் என்பது கீழக்கரை மக்களின் பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கிய மிக பெரிய பாரம்பரியமிக்க ஜமாஅத் ஆக இருக்கிறது. 13 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இப்பள்ளியை புரனமைதல் சம்பந்தமாகவும் விஸ்தீகரிப்பு சம்பந்தமாகவும் பல முறை கூட்டம் கூட்டப்பட்ட போதிலும் அதற்கான பணிகள் துவங்க படவில்லை.

அதே வேளையில்  இன்று நடை பெற்ற கூட்டம் ஜமாஅத் மக்களை சிந்திக்க வைக்கவும்,  கருத்துகள் பரிமாறுவதற்கும், நல்லவை, கேட்டவை தெரிந்து கொண்டு நல்லதின் பால் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செல்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

மேலும் இக்கூட்டத்தில் பள்ளி விஸ்தரிப்பு செய்வதால் ஜனாஸா அடக்கும் மையவாடி சின்னதகிவிடுமோ ? என்று பலர் கவலை படுவதாகவும், இது ஜும்மா  பள்ளி என்பதால் பள்ளியின் வேலை ஆரம்பம் ஆகிவிட்டால், தொழுவதற்கு தடை இன்றி மாற்று இடம் தேவை என்றும் பலர் கவலைபடுவதாக கருத்து பரிமாறப்பட்டு இருக்கிறது. அதனை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்வது என்றால் பள்ளி மையவாடியை சுற்றி உள்ள இடங்களை பள்ளிகாக இனமாகவோ அல்லது விர்கிரயமாகவோ தந்தால் இப்பிரச்சனையை உடனடியாக சரி செய்யப்பட்டு பள்ளி விஸ்தீகரிப்பு சம்பந்தமாக மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.மேலும் கூறுகையில் நிஜாமுதீன் காக்கா என்னிடம் பல முறை எப்பகுதியை வரலாற்று சிறப்பு மிக்க கலை நயமிக்க பகுதியாகவே மாற்றபட வேண்டும். என வலியுறுத்தி வருகிறார்கள்.

வெளிநாடுகளில் பாரம்பரியமிக்க இடங்கள் உள்ள பகுதிகள் தொன்மை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருவது போன்று நமது ஊரிலும் பழைய குத்பா பள்ளி பகுதியை அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு அமைப்பது என்றால் கல்கத்தாவில் ரோடுகள் உள்ளது போன்று கற்கள் பதிக்க பெற்ற ரோடுகளும். லண்டனில் உள்ளது போன்று பழமைவாய்ந்த விக்டோரியன் தெரு விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். இது போன்றவைகள் மேற்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.

மேலும் வள்ளல் சீதக்காதியின் தந்தை வீடும், அன்னாரின் ஓய்வு மாளிகையாக பயன்படுத்தப்பட்ட கஸ்டம்ஸ் ஆபீசை சீதக்காதியின் மணி மண்டபம் ஆக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மீன் கடையை மார்க்கெட் வளாகமாக மாற்றி தர வேண்டும் என்றும் B.S.A அஷ்ரப் புகாரி அவர்களிடம் இடம் வலியுறுத்தி இருக்கிறோம்.  இறைவன் நாடினால் ஜமாத்தார்கள் முன்னிலையில் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்" என்று எதிர்பார்ப்புகள் தளும்பிய மகிழ்வோடு விளக்கமாக தெரிவித்தார்.

2 comments:

 1. Dear Abu Salique and other readers; I am really astonished to come across an astute historian like Abu Salih with facts & findings of our great Kilakarai and connecting of dots scientifically!

  My humble request to you is do not get carried away in aging, numbering the ancient heritages / mosques, especially related to your home town, as of natural bias any ordinary historian shall do. (What I mean is we may get BIASED/ May Allah save is us from this pride)

  I rate you a reasonably a good professional in this specialization of “Ancient/medieval/modern history of Indian Peninsular’ in perspective to arrival / trade / living / rule of Arabian – Persians’ in the Coastal-India including Sri Lanka and Bay of Mannarvalikuda Islands.”

  Let us always use words like ‘one of the oldest’ for naming/aging of any puradhana Monuments of great Kilakarai in order to avoid disputes within ourselves, as well as the world to take note of authenticity of your work and great history of Kilakarai as it is.

  (Do you remember, myself curiously interacted with you about the O.J.Mosque, Coastal, MinHaji Mosque and we even toured across many places ending with Odaikarai Pallivasal during my visit to our Town during January 2013, which was absolutely accidental meeting of ours)

  ReplyDelete
 2. Its like you read my mind! You appear to know a lot about this, like you wrote the
  book in it or something. I think that you could do with a few pics to drive the message home a bit, but other than that, this is excellent blog.
  A great read. I will definitely be back.

  ReplyDelete