தேடல் தொடங்கியதே..

Thursday 20 June 2013

கீழக்கரை நகரில் ஜவாஹிருல்லா MLA நாளை (21.06.2013) முகாமிட்டு ஆய்வு - பொது மக்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என TMMK தகவல் !

இராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் முனைவர். பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கீழக்கரை நகருக்கு அடிக்கடி வந்து பொதுமக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்நிலையில் நாளை வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரையில் முகாமிட்டு, பொதுமக்களின் குறைகளை நேரில் விசாரித்து ஆவன செய்வார்கள் என கீழக்கரை நகர் த.மு.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.


இது குறித்து மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி. கீழை இர்பான் அவர்கள் கூறும் போது "கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் இருந்து நடை பயணமாக செல்ல திட்டமிட்டு இருக்கும் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் சுகாதாரம் மற்றும் இன்ன பிற குறைகள் குறித்து பொது மக்கள் சுட்டிக் காட்டும் இடங்களுக்கு சென்று நேரடி ஆய்வு செய்வதுடன், விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்துவார்கள். பொது மக்கள் தங்கள் புகார் மனுக்களை கொடுப்பது குறித்த மேலதிக தகவல்களுக்கு நகர் தலைவர் சிராஜுதீன் அவர்களை 94431 70984 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்" என்று தெரிவித்தார்.

FACE BOOK COMMENTS :

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை நகருக்குள் ஓராண்டுக்கு பிறகு ஆய்வு மேற்கொள்ள வரும் சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி. அதே வேளை ஆய்வுக்கு வரும் நேரம் தகுந்ததாக் இல்லை. கதிரவன் மங்கிய அந்தி சாய்ந்த நேரத்தில் கீழக்கரையின் அவல நிலைகளை எங்கு போய் பார்ப்பது ?

    அதுவும் நாளை ஆய்வு செய்
    ய இருக்கும் MLA என்று இன்றே அறிவிப்பு செய்து தண்டோரா போட்டு விட்டீர்கள். அப்புறம் என்ன இன்று இரவோடு இரவாக, இது வரை இல்லாத புதுமையாக கமிசனர் முன்னிலையில் அதிரடி வேலைகள் செய்யப்படும். அதி காலையிலேயே தெருவெல்லாம் நீர் தெளித்து, கோலம் போட்டு, பிளீச்சின்ங் பவுடர் தூவி, அது பத்தாது என்று TMMK, MMK தொண்டர்கள் ஊர் முழுதும் கட்சி கொடி கட்டி அமர்க்களப்படுத்துவார்கள்.

    கீழக்கரை கமிஷனரும், கவுன்சிலர்களும் ஊரின் தூய்மை பகுதிகளுக்கு MLA வை அழைத்து சென்று தாஜா செய்வார்கள். கூட்டம் களைந்து இனி அடுத்த வருஷம் MLA மீண்டும் வருவார். பிறகு எப்படி ஊரின் உண்மை நிலை தெரியும். கொஞ்சம் சிந்தித்து செயலாற்றுங்கள். நான் யாரையும் குறை சொல்ல இதை கூறவில்லை. நமது ஊரின் எதார்த்தத்தை சொல்கிறேன்.
    3 hours ago · Unlike · 2

No comments:

Post a Comment