தேடல் தொடங்கியதே..

Wednesday, 4 September 2013

கீழக்கரை நகராட்சி பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக, ஆதார் அடையாள அட்டைக்கு தகவல் சேகரிக்கும் பணி, தற்போது கீழக்கரை நகராட்சியில் அனைத்து வேலை நாள்களிலும் நடை பெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, தங்கள் தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் விடுபட்டவர்கள் விபரங்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பவர்கள், பதிவு செய்யலாம். அதற்கான இலவச விண்ணப்பங்களை பெற்று, தகவல்களை பூர்த்தி செய்து  அளிக்க வேண்டும். இதற்கென தனித்தாளில் ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது. இதனை பத்திரமாக வைத்திருந்து, எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடை பெற இருக்கும் ஆதார் அட்டைக்கான கை ரேகைகள் மற்றும் விழித்திரை பதிவு செய்வதற்கான முகாமில் வழங்க வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிய வருபவர்கள், மறக்காமல் தங்கள் புகை படங்களை கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment