தேடல் தொடங்கியதே..

Monday, 8 July 2013

கீழக்கரை ASWAN பொது நல சங்கம் சார்பாக நடை பெற்ற சிறுவர்கள் மதரசாவின் ஆண்டு விழா நிகழ்ச்சி !

கீழக்கரை அஹமது தெருவில், சிறப்பாக செயல்பட்டு வரும் மதரஸதுல் அல்-மனார் சிறுவர்கள் அரபி மதரசாவின் ஆண்டு விழா, அஹமது தெரு ASWAN பொது நல சங்கத்தின் சார்பாக, நேற்று (07.07.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணியளவில், பெண்கள் தொழுகைப் பள்ளியில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஹமது தெரு ASWAN பொது நல சங்கத்தினர் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ASWAN சங்கத்தின் அமீரக தலைவர் M.ஹமீது கான் அவர்கள் தலைமை வகித்தார். ASWAN சங்கத்தின் தலைவர் A.சுல்த்தான் (A.S) அவர்கள் முன்னிலை வகித்தார். H.ஜாசிர் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். ASWAN துணை தலைவர் O.A.கமருல் ஜமான் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.கீழக்கரை புதுப் பள்ளிவாசல் கத்தீப் மன்சூர் ஆலிம், அப்ஜலுல் உலமா அரபித் துறை தலைவர்  மவ்லவி S.அப்துல் நாசர் ஜமாலி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். அதனை தொடர்ந்து மதரசாவில் பயின்ற 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, கிராஅத் போட்டி, குர்ஆன் சூராக்கள் ஒப்புவித்தல் போட்டி போன்றவைகளில் முதன்மை பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிகளின் நிறைவில் ASWAN சங்கத்தின் இணை செயலாளர் M.N.நெய்னா முஹம்மது சாஹிபு அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை 'மஸ்தான்' என்கிற அஹமது இபுறாஹீம் அவர்கள் தொகுத்து அளித்தார்.

No comments:

Post a Comment