தேடல் தொடங்கியதே..

Thursday, 27 June 2013

கீழக்கரையில் மூதாட்டியை 'காணவில்லை'- தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டுகோள் !

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் வசிக்கும் காலம் சென்ற மர்ஹூம். முஹம்மது இபுனு அவர்களின் மனைவி,  'முத்து ஆமினா உம்மாள்' (வயது 70) அவர்களை இன்று அதிகாலை முதல் காணவில்லை. 


காணாமல் போன சமயம் பச்சை நிறத்தில் கைலியும், மஞ்சள் நிற சட்டையும், ஆரஞ்சு நிறத்தில் தாவணியும் அணிந்திருந்தார். கடந்த 20 நாள்களுக்கு முன்னர் தான் இவர்களுடைய கணவர் வபாத்தானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மூதாட்டி காணாமல் போயுள்ளது குடும்பத்தார்களை கடும் மன உளைச்சளுக்கு ஆளாக்கியுள்ளது. 

இது குறித்து கீழக்கரை காவல் துறையினரிடமும், கண்டுபிடித்து தருமாறு மனு அளிக்கப்பட்டு உள்ளது. காணமல் போனவர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக கீழ் காணும் அலைப்பேசி எண்ணுக்கு தகவல் தருமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரை காவல் நிலையம் - 04567 241272
கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை (இஸ்மாயில்) - 90034 35377
மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் (சாலிஹ் ஹுசைன்) - 9791742074

  • Keelai Ilayyavan இறைவன் அருளால், சற்று முன்னர், முத்து ஆமினா உம்மாள் அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சியும், காணாமல் போன தகவலை பகிர்ந்தும் கொண்ட முக நூல் நண்பர்கள் அனைவருக்கும், முத்து ஆமினா உம்மாள் அவர்களின் குடும்பத்தார்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment