தேடல் தொடங்கியதே..

Friday, 5 July 2013

கீழக்கரையில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா - பொது மக்கள் திரளாக பங்கேற்பு !

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் 2013-2014-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று முன் தினம் (03.07.2013) புதன் கிழமை மாலை 4 மணியளவில் ஹுசைனியா திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது. இவ்விழாவில், கடந்த ஆண்டின் ரோட்டரி சஙகத்தின் கீழக்கரை தலைவர் Er.ஆசாத் S.S.ஹமீத் தலைமை வகித்தார். புதிய தலைவராக டாக்டர்.M.H.செய்யது ராசீக்தீன் அவர்களும், செயலாளராக Er.R.சுப்பிரமணியன் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 


சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் M.அசோக் பத்மராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு கவுரவிப்பாளராக S.R.தீனதயாளன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் ரோட்டரி உதவி கவர்னர் S.R.முருகேசன், பேராசிரியர் A.அலாவுதீன் உள்ளிட்டோர்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.


இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகரின் பல்வேறு சமூக நல அமைப்பினர்களும், ஜமாஅத் நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் ரோட்டரி சங்க நிர்வாகிகளும் திரளாளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது, கீழக்கரை நகரில், அரசு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீதம் தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளுக்கும் பாராட்டு சான்றும், நினைவுப் பரிசும் வழங்கினர். மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவருக்கு மூன்று சக்கர வாகனமும், ஏழைப் பெண்மணி ஒருவருக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.
கீழக்கரை ரோட்டரி சங்க புதிய நிர்வாகளின் சேவைகள் மென் மேலும் சிறக்க, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment