தேடல் தொடங்கியதே..

Friday, 5 July 2013

கீழக்கரை நகரில் நடை பெற்ற 'மஸ்ஜிது கதீஜா' பெண்கள் தொழுகைப் பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சி!

கீழக்கரை புதுக் கிழக்குத் தெருவை அடுத்த பெரிய காடு மனாஸில் கார்டனில் 'மஸ்ஜிது கதீஜா' பெண்கள் தொழுகைப் பள்ளிவாசல் இன்று (05.07.2013) 3.30 மணியளவில் திறக்கப்பட்டு, அஷர் தொழுகை நடை பெற்றது.

இந்த பள்ளிவாயிலை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த சகோதரர்கள் க.அ.ம. உமர் சாகிபு மற்றும் க.அ.ம. சேகு மதார் சாகிபு (முக்தார்) ஆகியோர்கள் நிர்மாணித்து, பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், முறைப்படி வக்பு செய்ய இருக்கிறார்கள். 

இந்த பள்ளியை ஆர்கிடெக்ட் கபீர் அவர்கள் அழகிய வடிவில் கட்டுமானம் செய்து அளித்து உள்ளார். இந்த விழாவிற்கு ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் வருகை தந்து சிறப்பித்தனர். 

இந்த பள்ளி வாயிலின் திறப்பு விழாவினை பழைய குத்பா பள்ளி இமாம் ஹைதர் அலி அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார். 'மஸ்ஜிது கதீஜா' பள்ளியை க.அ.ம. உமர் சாகிபு  அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் முப்தி அ.உமர் ஷரீப் காஸிமி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.  க.அ.ம. உமர் சாகிபு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை டவுன் காஜி A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

இந்த விழாவின் இறுதியில் மவ்லவி. அப்ழலுல் உலமா. ஹாபிஸ். செய்யது அஹமது நெய்னா சித்தீகி ஆலிம் ஜமாலி அவர்கள் துஆ ஓதினார். நிகழ்வுகளை லெப்பை தம்பி அவர்கள் தொகுத்து அளித்தார். இந்த பள்ளியின் பின் புறத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் பெயரில் வணிக வளாகம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு கட்டுமான பணிகள்  நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. நகர் செய்திகள் உடனுக்கு உடன் மாஷா அல்லா. கீழை இளையவனே.உன் இளமை துள்ளுகிறது

    ReplyDelete
  2. நாயனின் நாட்டப்படி இந்த் அழகிய பெண்கள் தொழுகைப் பள்ளி “ மஸ்ஜித கதிஜா”-வை உருவாக்கியவர்களின் பரந்த நாட்டத்தை எல்லாம் வல்ல நாயன் கபூல் செய்து அருள் பாலிக்கானக.ஆமீன்.ஆமீன் யா ரப்பில் ஆல்மீன்

    ReplyDelete