தேடல் தொடங்கியதே..

Thursday 2 February 2012

கீழக்கரையில் இன்று முதல் பாலிதீன் தடை அமுலாக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  நம் கீழக்கரை நகராட்சியில், நகரின் சுகாதாரத்தை முன்னிறுத்தி 2-2-2012 முதல் பாலிதீன் விற்பனைக்கான தடை விதிப்பு அமலுக்கு வருமென்று ஒருமனதாக முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
 
 
கீழக்கரை முஸ்லீம் பஜாரில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை


கீழக்கரை மக்கள் எல்லோராலும் பெரும் ஆவலுடன் எதிர் பார்க்கபட்டு கொண்டிருந்த இந்த பாலிதீன் ஒழிப்பு தினமான இன்றிலிருந்து பாலிதீன் பொருள்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் உபயோகத்திற்கான தடை, நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைமுறை படுத்தபடுகிறது. 


 இது குறித்து ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த செய்தி  (Kindly Click the blow Link ) http://www.keelaiilayyavan.blogspot.in/2012/01/02022012.html
 
 


இது குறித்து கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து கேட்ட போது, "இந்த நல்ல முயற்சிக்கு கீழக்கரையின் அனைத்து தரப்பு மக்களும், உறுதுணையாக இருந்து தங்கள் முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும். இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி பைகள், காகிதத்தாலான பைகள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் நம் கீழக்கரை நகரை தூய்மை நகரமாக மாற்ற எங்களுக்கு உதவ வேண்டும். எங்களுக்கு  இது சம்பந்தான ஆலோசனைகளை, கருத்துக்களை பொது மக்களும், சமூக நல ஆர்வலர்களும் தயங்காமல் தர முன் வர வேண்டும்." என்று தெரிவித்தார்.
 
 
கீழக்கரை V.A.O அலுவலகம் அருகில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை

எத்தனை சட்டங்கள் போட்டாலும், திட்டங்கள் தீட்டினாலும், தடைகளை போட்டாலும் பொது மக்கள் ஒத்துழைப்பின்றி, ஆதரவின்றி இது போன்ற சிறப்பான தீர்மானங்கள் வெற்றியின் சிகரத்தை, எட்டி பிடித்து விட முடியாது. ஆகவே நம் கீழக்கரை நலனில் அக்கறை கொண்டு நகராட்சி எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு, கருத்து வேறுபாடுகளை களைந்து, அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆவலும், ஆசையும், விருப்பமும்...

1 comment:

  1. அன்புள்ள நண்பரே, பாலிதீன் ஓர் அற்புதமான வரம்; அதனை போதும் போதும் என்கிற அளவு பயன்படுத்த முடியும்! பயன்பாடு முடிந்தபின் சரியான முறையில் அப்புறப்படுத்தினாலே சுற்றுச்சூழல் கெடாதவாறு பாதுகாக்கலாம்.
    அதனை விடுத்து பாலிதீனுக்கு தடை விதிப்பது, பாலிதீனுக்கு எதிராக குரல் கொடுப்பது ஆகியவை அறியாமையின் விளைவாக அல்லது அரசியல் விளையாட்டாகத்தான் இருக்க முடியும்.
    மோட்டார் வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை வெளியிடும் புகை, சுற்றுச்சூழலை பாலிதீனைக்காட்டிலும் அதிகமாகவே மாசுபடுத்துகின்றன என்ற விஷயம் தங்களுக்குத் தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். அக்காரணத்தினால் மோட்டார் வாகனங்களையும் தொழிற்சாலைகளையும் தடை செய்தல் என்ற சூழ்நிலையைத் தங்களால் கற்பனை செய்ய முடியுமா? மோட்டார் வாகனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் எந்த அளவு மாசு கட்டுப்பாடு முயற்சி மேற்கொள்ளப் படுகிறதோ அதைக்காட்டிலும் கூடுதல் அக்கறையுடன் கூடுதல் முயற்சி எடுக்கப்பட்டாலே உபயோகப்படுத்தப்பட்ட பாலிதீனை அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என நான் நம்புகிறேன்.

    ReplyDelete