தேடல் தொடங்கியதே..

Saturday 4 February 2012

IAS தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - கீழக்கரை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள் !

இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்தியா அயல் நாட்டுப் பணி (IFS) மற்றும் 28 வகையான மத்திய பணிகளுக்குப் பணியாளர்களை தேர்ந்தேடுப்பதற்கான இந்த ஆண்டின் (2012) குடிமை பணிகள் (சிவில் சர்வீஸ்) தேர்வை வரும் மே மாதம் 20 ஆம் தேதி (20.05.2012) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு ஒரே நாளில் நடைபெறும். தென் மாவட்டத்தில் இந்த தேர்வு மதுரையில் நடை பெற உள்ளது. இதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் இன்று (04.02.2011) அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.03.2012




நம் இராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பாக நம் கீழக்கரையில், பத்தாம் வகுப்பு முடித்து விட்டால்,  அடுத்து பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டு வேலைக்கு பறப்பது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது நம் பிள்ளைகள் ஓரளவுக்கு கல்லூரிகளில் கால் பதித்து பட்டதாரிகள் ஆகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும் கூட, அவர்களும் வெளி நாட்டு வேலை வாய்ப்பையே முழுதாய் நம்பியுள்ளனர். நம் மண்ணிலேயே அரசாங்க உயர் பதவிகளுக்கு யாரும் முயற்சி செய்வது கிடையாது. அதை பற்றியான எந்த ஒரு விழிப்புணர்வும் அவர்கள் மத்தியில் இல்லை.

நம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூட அரசாங்க வேலை வாய்ப்புகள் பற்றி சொல்லி கொடுப்பது இல்லை. ஒரு சில மாணவர்களிடம் மட்டும் "நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்.. நான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும்.." என்ற கனவுகள் இருந்தாலும் கூட, அவர்களுக்கு  சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால், அது கனவாக மட்டுமே கரைந்து விடுகிறது. ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமென்றால், எங்கே அதற்கான விண்ணப்பம் கிடைக்கும் ? என்று கூட தெரியாத நிலையே இன்றும் இருந்து வருகிறது.

ஆகவே இனியும் இந்த அரசாங்க வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை நழுவ விடாமல், முறையாக பயன்படுத்தி கொள்ள, ஆர்வம் கொண்ட அனைவரும் கீழை இளையவன் ஐ.ஏ.எஸ் வழிகாட்டி தளத்தினில், இணையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம.

கீழை இளையவன் ஐ.ஏ.எஸ் வழிகாட்டிஇனைய தள முகவரி :http://www.keelaiilayyavanias.blogspot.in/

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தளத்திலும், தேர்வுக்கான அறிவிப்பு செய்தியை பார்வையிட்டு, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரி http://www.upsc.gov.in/
 

No comments:

Post a Comment