தேடல் தொடங்கியதே..

Thursday 5 April 2012

கீழக்கரையில் 'தண்ணீர் பந்தலாக மாறிய குப்பை மேடு' - பொது மக்கள் வரவேற்பு !

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையின் பிரதான பகுதியாக இருக்கும் செக்கடி நுழைவு பகுதி ( வடக்குத் தெரு பள்ளிவாசல் முன் புறம்) என்று நோக்கினும் 'துர் நாற்றம்' வீசும் குப்பை மேடாகவே காட்சி அளித்து வந்தது. இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகளும், அந்தப் பகுதியில் தொழில் புரியும் வியாபாரிகளும், இந்த அவலத்தால்  பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.


தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்

ஆனால் தற்போது இந்த இடம், தமிழக முதல்வரின் ஆணையின் பொருட்டும், நல்லுள்ளம் படைத்தவர்களின் முயற்சியாலும், கொளுத்தும் வெயிலின் தாக்கத்தின், தாகத்தை தீர்க்கும், தண்ணீர் பந்தலாய் மாறி இருக்கிறது. இதனால் சுற்று வட்டார பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


குப்பை மேடாக காட்சி அளித்த இடம்



இது குறித்து அதே பகுதியில் கடை வைத்திருக்கும் சேட் அவர்கள் கூறும் போது "இந்த நல்ல முயற்சி அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. 'இங்கு குப்பை கொட்டாதீர்கள்' என்று பல முறை எடுத்து கூறியும்.. பொதுமக்கள் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை. இந்த முயற்சிக்கு பிறகாவது இனி குப்பை கொட்ட மாட்டார்கள் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment