தேடல் தொடங்கியதே..

Thursday 7 June 2012

கீழக்கரையில் நடைபெற்ற மரம் நடும் விழா நிகழ்ச்சி - பொது நல அமைப்பினர்கள் பங்கேற்பு !

நம் கீழக்கரை நகரில் மக்கள் தொகை உயர்ந்து வருவதாலும், கட்டப்படும் புதிய வீடுகளின் எண்ணிகை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாலும், நிழல் தரும் மரங்களும், தோட்டங்களும் அழிக்கப்பட்டு வருகிறது.  பண்டைய காலங்களில் எழில் கொஞ்சும் கடற்கரை நகரமாக திகழ்ந்த நம் கீழக்கரை, மரங்களற்ற பாலை நிலமாக மாறி விடுமோ ? என்ற அச்சப்பட தோன்றுகிறது. இதனை தடுக்கும் நல்ல நோக்கோடு  மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க பல்வேறு சமூக நல அமைப்பினரும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.




இதன் முதற்கட்டமாக, கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவர் ஜனாப்.ஹாஜா முஹைதீன் அவர்கள் தலைமையில் கீழக்கரை மக்கள் விழிப்புணர்வு நல சங்கம் (K.M.M.S) மற்றும் கீழக்கரை முஸ்லீம் அரக்கட்டளையினரின் முயற்சியில், வேம்பு, வாவரசு, புங்கை, வாகை உள்ளிட்ட 22 நிழல் தரும் மரங்களை, கீழக்கரை புதிய கடல் பாலம் பகுதியில் நட்டு பராமரிக்க முன் வந்துள்ளனர்.




இதற்கான மரக் கன்றுகள் நடும் விழா இன்று (07.06.2012) காலை 10 மணியளவில் கலங்கரை விளக்கம் பகுதியில் நடை பெற்றது. இந்த விழாவில் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர், கீழக்கரை நுகர்வோர் சமூக நல சங்கத்தினர், கீழக்கரை காவல் துறை சார்பு ஆய்வாளர் (பொறுப்பு), பெரும்பாலான வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.




தற்போது எங்கு நோக்கினும் "சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்", "புவி வெப்பமயமாதல்" "மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்", "பசுமைக் குடில் வாயுக்கள்" என்றெல்லாம் முழக்கங்கள் ஓயாது ஒழித்துக் கொண்டே இருக்கிறது. காரணம்... புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது.




எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க நம் நகரவாசிகள் முன் வர வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை நாம் அனைவரும் பெறுவோம்.

2 comments:

  1. புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் நல்ல முயற்சி.முயற்சி வெற்றிப் பெற வாழ்த்துக்கள்......

    புதிய வரவுகள்:
    பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?,கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

    எனது தள கட்டுரைகளில் சில:
    அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-தளத்திற்கு வந்து உங்க கருத்தை தெரிவியுங்கள்-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete