தேடல் தொடங்கியதே..

Sunday 8 July 2012

கீழக்கரை நகராட்சியில் தொடரும் கூச்சல், குழப்பங்கள் - தீர்வு தான் என்ன ?

நம் கீழக்கரை நகராட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, புதிய நகர் மன்றம் பொறுப்பேற்ற தருணத்திலிருந்தே, மன்ற உறுப்பினர்களுக்குள் கூச்சல்களும், குழப்பங்களும் தொடர்ந்து நடந்தேறிக் கொண்டிருக்கிறது. நகர சபை கூட்டங்களும் பெரும்பாலும் அமளியிலே முடிவடைந்துள்ளது. இதனால் நகரின் பல அத்தியாவசியப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகாரட்சி அலுவலர்களும் பொது மக்களை அலைக்கழிக்கும் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை குப்பையில் கிடத்தும் அவலம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.




இதற்கிடையே கீழ‌க்க‌ரை நகர சபை நிர்வாகத்தில் இலட்ச்சக்கனக்கில் ஊழ‌ல் ந‌டைபெறுவ‌தாக‌வும், நகராட்சி ஆணையர்  உள்ளிட்டோர் இதில் ச‌ம்ப‌ந்த‌பட்டிருப்ப‌தாக‌வும், ம‌க்க‌ள் ப‌ண‌ம் வீண் விரயமாக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும்  அச்சிட்டப்பட்டுள்ள பேன‌ர்க‌ளை கைக‌ளில் பிடித்த‌வாறு நேற்று முன் தினம் 1.45 மணியளவில் ந‌டுத்தெரு ஜீம்மா ப‌ள்ளி முன் புறம் க‌வுன்சில‌ர்கள் இடிமின்ன‌ல் ஹாஜா, முகைதீன் இபுறாகீம் ஆகியோர் நின்று கொண்டிருந்த‌ன‌ர். ஜீம்மா தொழுகை முடிந்து ஏராளாமானோர் வீடு திரும்பி கொண்டிருந்த நேரமாதலால், பலர் இவர்கள் கைகளில் ஏந்திய வாசகங்களை படித்து திகைப்பில் ஆழ்ந்தவாறு சென்றனர்.




அடுத்ததாக கீழக்கரை நகராட்சி கூட்டம் கூட்டரங்கில் மாலை 4 மணியளவில் துவங்கியது. நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை தலைவர் ஹாஜா முகைதீன், அலுவலக மேலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) முஜீபுர் ரஹ்மான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டத்தின் ஆரம்பமே சலசலப்புடன் துவங்கியது. பின்னர் கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா பேசும் போது சென்ற‌ கூட்ட‌த்தில் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ தெருவிள‌க்கு டெண்ட‌ரில் க‌மிஷ‌ன‌ர் ஊழ‌ல் செய்துள்ளார் என்றும் த‌ர‌ம் குறைந்த‌ விள‌க்குக‌ள் ந‌க‌ருக்கு வ‌ந்துள்ள‌து என்றும் நேரடியாக குற்றம் சாட்டினார்.




கவுன்சிலர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான நோட்டீஸ் குறித்து 10வது வார்டு கவுன்சிலர் அஜ்மல்கான் உள்ளிட்ட க‌வுன்சில‌ர்க‌ளிடையே க‌டும் வாக்குவாத‌ம் ஏற்ப‌ட்ட‌து. இதில் 10வ‌து வார்டு க‌வுன்சில‌ர் அஜ்ம‌ல்கான் ஆபாச‌மாக‌ பேசியதாக கூறி க‌டும் எதிர்ப்பு தெரிவித்தோடு அஜ்ம‌ல்கான் ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என்று கோரி க‌வுன்சில‌ர்க‌ள் முகைதீன் இப்ராகிம்(18வ‌து வார்டு),சாகுல் ஹ‌மீது(வ‌து வார்டு),இடிமின்ன‌ல் ஹாஜா(20வ‌து வார்டு) ஆகியோர் ந‌க‌ராட்சி ம‌ன்ற‌ த‌ரையில் அம‌ர்ந்து போராட்ட‌ம் நட‌த்தின‌ர். இதை தொடர்ந்து அமைதியாக இருக்குமாறு நகராட்சி தலைவர் வலியுறுத்தி கொண்டிருந்தார்.ஆனால் தொடர்ந்து அமளி நிலவியதால் நகராட்சி தலைவர் சபையிலிருந்து வெளியேறினார். இதனால் நகருக்கு நலன் தரும் பல முக்கிய பொருள்கள் குறித்து விவாதிக்கப்படமலேயே அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியது.




இது குறித்து நகர சபை த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து, "பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானங்களை ஆதரித்து உள்ளனர். ஒரு சில உறுப்பின‌ர்க‌ள் ம‌ட்டுதான் வேண்டுமென்றே பிர‌ச்சனை செய்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சபை ஒழுக்கங்கள் முறையாக பின்பற்றப்படாததாலும், தீர்மான‌த்தை படிக்க முடியாத அளவிற்கு அமளி நிலவியதாலுமே அங்கிருந்து வெளியே வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. தெருவிளக்கு டெண்டரில் நான் முன்னரே தற்போதைய ஒப்பந்ததாரரான மலானி & கோவிற்கு கொடுக்க வேண்டாம் என்றேன் இப்போது கொடுக்க வலியுறித்தியவர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தொட‌ர்ந்து ஊருக்கான‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ளை த‌டுத்து வ‌ருவ‌து ந‌க‌ரின் வ‌ள‌ர்ச்சிக்கு உதவாது என்ப‌தை இவ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌ வேண்டும்" என்று தெரிவித்தார்.

தீர்வு தான் என்ன ?

அனைத்து பிரச்சனைகளுக்கும் முழு முதற்காரணமாக இருப்பது, நம் கீழக்கரை நகருக்கு ஒரு நிரந்தர ஆணையர் இல்லாதது தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போதைய ஆணையர் கூடுதல் பொறுப்பு வகிப்பவராக இருப்பதால், நம் நகரை முழுமையாக கவனிப்பதில்லை. வாரம் ஒரு முறை மட்டும் நகருக்கு வலம் வந்து என்ன பயன் ?

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி 

நிரந்தர ஆணையர் நம் நகராட்சி அலுவலகத்திலேயே இருக்கும் பட்சத்தில், நகரின் மேல் முழு அக்கறை கொண்டு செயல்பட ஏதுவாகும். டெண்டர் குறித்த விசயங்களை தீர ஆராய்ந்து, முறைப்படுத்த முடியும். இது குறித்து நகராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு துறை ரீதியாக, முறையான அறிவுரைகள் வழங்க ஏதுவாகும்.

நகர் மன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான பிணக்குகளையும், மனக் கசப்புகளையும் நீக்கி, நம் நகரை வளப்படுத்த முடியும். ஆகவே நம் கீழக்கரை நகராட்சிக்கு, இது போன்ற ஒரு நல்ல பொதுநலன் பொருந்திய, அனுபவமிக்க நிரந்தர நகராட்சி ஆணையரை வெகு சீக்கிரம் நியமனம் செய்திட, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு, நம் நகரின் அனைத்து பொது நல அமைப்பினர்களும் ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்க் கொள்ள வேண்டும்.

இளையவன் ஏக்கம் : சமீபத்தில் மதுரை மாநகருக்கு கிடைத்த திரு. சகாயம் IAS போல, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கிடைத்த திரு. நடராசன் IPS போல, 'ஒரு புண்ணியவான்', நம் கீழக்கரை நகருக்கு நிரந்தர நகராட்சி ஆணையராக கிடைப்பாரா??

அன்பான கீழக்கரை வாழ் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள் !

நம் நகராட்சியில் தொடரும் கூச்சல், குழப்பங்களுக்கும், அமளிகளுக்கும் முறையான தீர்வு காண, நம் நகரின் எதிர் கால நலனை மட்டும் நினைவில் கொண்டு, தங்களின் மேலான, ஆக்கப்பூர்வ அறிவுரைகளையும், சிந்தனை சிதறல்களையும், இந்த தருணத்தில், கருத்துப் பதிவுகளாக தந்து, நம் நகர் செழிக்க உதவுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தீர்வு ?                                         தீர்வு ?                                               தீர்வு ?

2 comments:

  1. நடைமுறைக்கு உகநத தீர்வை நீங்களே சொல்லி விட்டீர்கள். இதே தீர்வை எமது சார்பாகவும் கீழக்கரை டைம்ஸில் பல முறை பதிவு செய்துள்ளேம். இதுவரை பலன் இல்லை.

    ஒரு சமயம் அனைத்து மக்களும் ( அரசியல் கட்சிகள் ஆளும் கட்சி உட்பட மற்றும் அனைத்து பொது நல சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து).ஊர் நலம் காக்க கடை அடைப்புக்கு வேண்டுகோள் விடுத்து போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் ஒரு வேளை பலன் கிடைக்கக் கூடும். பூனைக்கு யார் மணி கட்டுவது ?

    ReplyDelete
  2. கிழக்கரை நகராட்சிக்கு எத்தனையோ சேர்மன்கள் வந்து போய் இருக்கிறார்கள் பெண்கள் கூட. இந்தளவு கூச்சலோ குழப்பமோ சேர்மனுக்கு எதிரான ஆர்ப்பாட்டமோ நடந்ததில்லை .ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் கூச்சல் குழப்பம் .உருப்படியான எந்த விசயமும் நடந்ததாக தெரியவில்லை .இதற்க்கு மக்கள் மத்தியில் சில காரணங்கள் விவாதிக்கப்படுகிறது .அதை உங்கள் முன் வைக்கிறோம் .இவை நியாயமான காரணமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் 4 வருடங்கள் கிழக்கரை மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வாய்ப்பே கிடையாது .
    1 .சேர்மன் அவர்களுக்கு படிப்பு அறிவும் நிதர்சன அறிவும் மிக மிக குறைவு .அதனால் கூச்சல் குழப்பங்களை கட்டுப்படுத்த அவரால் இயலவில்லை .
    2 .சேர்மன் அவர்களை ஆட்டுவிப்பது அவருடைய கணவரும் சகோதரர்களும் தான் மற்றும் சில முடிவுகள் தீர்மானங்கள் கூட இவர்களுடைய வழிக்காட்டுதலின் பெயரில் தான் நடக்கிறதாக .குற்றச்சாட்டு .
    3 சேர்மன் அவர்களுக்கு சுயமாக முடிவெடுக்க தெரியாத அளவுக்கும்
    4 கவுன்சிலர்களோடு ஆரோக்கியமான விவாதமோ கருத்துகளை உருவாக்கும் சூழலை உருவாக்க தெரியாமை .
    5 அரசாங்க அதிகாரிகளை வீட்டுக்கு அழைத்து விருந்தும் தடபுடலாக பிக்னிக்கும் நடத்துவதாக குற்றச்சாட்டு .
    6 நகராட்சி ஊழல் மயம் குப்பை மயம் ஆவதை தடுக்க அதிகாரிகளை
    உடனுக்குடன் செயலாற்ற ஊக்கப்படுத்தாமை.
    கவுன்சிலர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு
    1 சேர்மன் அவர்களோடு சேர்ந்து நகராட்சி பிரச்சினைகளை தீர்க்க உடன்படாமை
    2 எதற்க்கெடுத்தாலும் கூச்சல் போடுவதும் சபையை அவமதிப்பதுமாக நடப்பதும் என்று இவர்கள் நடவடிக்கை அமைந்துள்ளது
    3 சேர்மனும் பெண் என்பதால் ஒத்துழைப்பு கொடுத்து நடந்து பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் இவர்களிடம் இல்லை என்பதாக குற்றச்சாட்டு
    ஒரே ஒரு பயன் கீழக்கரை மக்களுக்கு
    இதுவரை கீழக்கரை நகராட்சி கட்டிடம் உள்ளே என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரியாமல் இருந்தது இப்போது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளது மாஸா அல்லா

    ReplyDelete