தேடல் தொடங்கியதே..

Thursday 23 August 2012

கீழக்கரையில் குப்பை காடாக காட்சி தரும் மணல் மேடு கண்காட்சித் திடல் - சுகாதாரப் பணிகள் மேம்பட பொதுமக்கள் கோரிக்கை !

கீழக்கரையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் வடக்குத் தெரு பகுதியில் அமைந்திருக்கும் மணல் மேடு பகுதியில் கண்காட்சித் திடல் அமைப்பது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் மணல் மேடு பகுதியில் மூன்று நாட்கள் கண்காட்சி நடை பெற்றது. கண்காட்சியின் மையப் பகுதியில் குப்பைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்பட்டது. அதே வேளையில், இந்த கண்காட்சித் திடலில் ஒரு பகுதியில் கூட குப்பை தொட்டிகள் காணப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளையும், துர்நாற்றம் வீசும் உணவு மிச்சங்களையும், வேறு வழியின்றி அங்கேயே வீசி சென்றுள்ளனர். தற்போது இந்தப் பகுதி குப்பைக் காடாக காட்சி அளிக்கிறது. 




இது குறித்து சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாகீம் அவர்கள் தன் முகப் புத்தகத்தில்
கூறும் போது "கீழக்கரையில் பெருநாளை முன்னிட்டு தனியார் நடத்தும் பொருட்காட்சியில் அதிக மக்கள் கூடுகின்றனர், அங்கு போதுமான கழிப்பிட வசதியோ, குடிநீரோ இல்லை. இரண்டு மற்றும் மூன்றாம் நாட்களில் அங்கு குப்பை அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் அவதிபடுகின்றனர். இங்கு தீ அணைப்பு வண்டி இல்லாதது பொதுமக்களுக்கு பாதுகாப்பு இன்மையை காட்டுகிறது." என்று தெரிவித்து இருந்தார். 




இந்த கண்காட்சித் திடலை ஏற்பாடு செய்பவர்கள், இனி வருங்காலங்களில் பொது மக்களின் சுகாதாரத்தையும் பேணும் நோக்கோடு திட்டமிட வேண்டும்.
குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது நலம் பயக்கும். பொது மக்கள் அதிகமாக கூடும், இந்த இடத்தில் அனைவரும் பயன் பெறும் வண்ணம் நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முன் வர வேண்டும். 

ஆண்களும், பெண்களும் கலக்காதவாறு, இருவருக்கும் தனித்தனி நுழைவு வாயில்களை அமைக்க வேண்டும். இதனால் கலாச்சார சீர்கேடுகள் நடைபெறுவதில் இருந்து அனைத்து சமுதாய மக்களையும் பாதுகாக்க முடியும்.இந்த பணிகளுக்காக ஆகும் செலவுகளுக்காக, குறைந்தளவு நுழைவு கட்டணம் வசூலித்தாலும் நல்லது தான்.

1 comment:

  1. சிறப்பான யோசனை. இன்ஷா அல்லா இன்னும் இரண்டு மாதத்தில் வர இருக்கும் பக்ரீத் பெருநாள் சமயத்திலாவது செயல் படுவார்களா எனப்தை பொருத்திருந்து பார்பபோம்.ஊத வேண்டிய சங்கை ஊத வேண்டியது நமது கடமை. செயல் பட வேண்டியது சமபந்தப்பட்டவர்கள் கடமை.

    ReplyDelete