தேடல் தொடங்கியதே..

Sunday 19 August 2012

கீழக்கரையில் பொதுநல அமைப்பினர்கள் இணைந்து நடத்திய இப்தார் நிகழ்ச்சி !

கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை (KMT), கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் (KMSS) மற்றும் சமூக நல மனித உரிமைகள் நுகர்வோர் சேவை இயக்கம் ஆகியோர்கள் இணைத்து நடத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நேற்று (18.08.2012) மாலை 6 மணியளவில் கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப்.செய்யது இபுறாகீம் தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ஜனாப்.ஹாஜா முஹைதீன் முன்னிலை வகித்தார். கீழக்கரை முஸ்லீம் லீக் நிர்வாகி ஜனாப்.லெப்பைத் தம்பி சிறப்புரை ஆற்றினார். 




முன்னதாக சமூக நல மனித உரிமைகள் நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர் திரு தங்கம் இராதாகிருஸ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளரும், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையின் ஆலோசகருமான முஹம்மது சாலிஹ் ஹுசைன் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழக்கரை முஸ்லீம் அறகட்டளை மற்றும் கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ஜனாப்.இஸ்மாயில் ஒருங்கிணைத்திருந்தார்.

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மத்துல்லாஹி வ பரகத்தஹு.

    கீழை இளையவன் வாசகர் வட்டத்தில் இணந்திருக்கும் அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் எந்தன் இதயம் கனிந்த சலாமும் ஈத் பெருநாள் வாழ்த்துகளும் உரித்தாகுக.

    படைத்த வல்ல ரஹ்மானின் அருளாசியும், சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீது உண்டாவதாக. ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மத்துல்லாஹி வ பரகத்தஹு.

    கீழை இளையவன் வாசகர் வட்டத்தில் இணந்திருக்கும் அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் எந்தன் இதயம் கனிந்த சலாமும் ஈத் பெருநாள் வாழ்த்துகளும் உரித்தாகுக.

    படைத்த வல்ல ரஹ்மானின் அருளாசியும், சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீது உண்டாவதாக. ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்.

    ReplyDelete