தேடல் தொடங்கியதே..

Saturday 11 May 2013

க‌வுன்சில‌ர் பொறுப்பை 'ராஜினாமா செய்ய‌ த‌யார்' - கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு க‌வுன்சில‌ர் முகைதீன் இபுறாகீம் ச‌வால்!


கீழை இளையவன் வலை தளத்திற்கு 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாகீம் அவர்கள் அனுப்பியுள்ள செய்தி பின் வருமாறு :

கீழக்கரை டைம்ஸ் இணைய தளத்தில் கடந்த 08.05.2013 அன்று, என் பெயரைக் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதில் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்கள் அளித்துள்ள பேட்டியில், "நான் எனது வார்டு சம்பந்தமாக எதையும் அவரிடம் கூறுவது இல்லை என்றும் எனது வார்டு குறைகளை தீர்ப்பதில் அக்கறை இல்லை" என்றும் கூறி உள்ளார்கள்.

எனது வார்டு மீது எனக்கு அக்கறை இல்லையா? என்பதையும், என் மீது அவர் வைத்திருக்கின்ற குற்றச் சாட்டு உண்மையா.? என்பதையும், என் மீது பாசம் வைத்திருக்கும் இணைய தள வாசகர்களுக்கும், நடு நிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் விளக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.



எனது வார்டு சம்பந்தமாக, நான் நகர் மன்ற தலைவி அவர்களிடம் வைத்த  கோரிக்கை மனு :

எனது வார்டுக்கு தேவையான கோரிக்கைகளை 22.10.2012 அன்று நகர் மன்ற தலைவி அவர்களிடம், எழுத்துப் பூர்வமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். இதில் அவர் கூறும் பாபு ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்வாய் இணைக்கும் 'அபாயக் குழியில்' தொட்டி அமைத்து மூடி போடும் படியும் கேட்டிருக்கிறேன்.

இது சம்பந்தமாக என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நகர் மன்ற தலைவி அவர்கள் 31.10.2012 அன்று நடை பெற்ற சாதாரண கூட்டத்தில் பொருள் 36 ல் ரூ.4,50,000 மதிப்பிலும் 29.11.2012 அன்று நடை பெற்ற சாதாரணக் கூட்டத்தில் பொருள் 15 ல் ரூ. 9500மதிப்பிலும், 30.01.2013 அன்று நடை பெற்ற சாதாரணக் கூட்டத்தில் பொருள் 28 ல் ரூ. 10000 மதிப்பிலும், மன்ற ஒப்புதல பெற்று, இது வரை பணி  ஆணை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

எனது வார்டு மீது எனக்கு 'அக்கறை இல்லை' என்று கூறிய நகர் மன்றத் தலைவி அவர்கள், உண்மைக்கு மாற்றமாக பேட்டி அளித்து இருப்பதால், என் மீது பாசம் வைத்திருக்கும் இணைய தள வாசகர்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நான் என் வார்டு சம்பந்தமாக கொடுத்த மனு நகலையும் மன்ற அஜந்தா நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன்.










இதிலிருந்தே பொது மக்களாகிய யாவரும் ஒன்றை புரிந்து கொள்ளலாம். கீழக்கரை மக்கள் மீதும், நகர் நலத் திட்டங்கள் மீதும், நகர் மன்ற தலைவிக்குத் தான் அக்கறை இல்லை என்பதையும், அவருடைய தலைமையில் எந்தப் பணிகளும் சரிவர செயல்பட வில்லை என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளலாம். 

கீழக்கரை நகராட்சி சார்பாக நடைபெற்ற தரம் இல்லாத பணிகளும், அதற்கு வழங்கப்பட்ட அதிகப் படியான தொகைகளும் :

கீழக்கரை நகராட்சி சார்பாக நடைபெற்ற பணிகளையும் அதற்கு வழங்கப்பட்ட தொகையையும், அதன் தரத்தையும் அனைவரும் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். 11 வது வார்டு ஜின்னா தெருவில் இருக்கும் பொதுக் கழிப்பிடத்தில் கூடுதல் கழிப்பறை கட்டும் பணி முடிவுற்று அதற்காக வழங்கப்பட்ட தொகை ரூ 3,49,333 ஆகும். ஆனால் செய்யப்பட்ட வேலைகள் ரூ.1,30,000 கூட இருக்காது.

புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நலன் கருதி மின்சார கட்டணம் கட்டும் அலுவலகம் செயல்படுத்த ஏற்கனவே இருந்த ஒரு அறையை புதுப்பிக்க நகராட்சியால் வழங்கப்பட்ட தொகை ரூ. 1,97,812 ஆகும். ஆனால் செய்யப்பட்ட வேலைகள் ரூ. 50000 (ஐம்பதாயிரம்) கூட இருக்காது. இதில் வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால், இதுவரை ஜின்னா தெரு கழிப்பிடமோ அல்லது புதிய பேருந்து நிலையத்தில், மின்சார கட்டணம் செலுத்தும் அலுவலகமோ இது வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் பணிகள் முழுதும் நிறைவடைந்து விட்டதாம்.

மேலும் நன்றாக இருந்த மேலத் தெரு செய்யது முஹம்மது அப்பா தர்ஹா சாலையை, பெயருக்கு சாலை போடுவதாக மன்ற ஒப்புதல் பெற்று, சுமார் 350 மீட்டர் அளவுக்கு சாலை போட செய்த செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 200000 (இரண்டு இலட்சம்) மட்டுமே. ஆனால் அதற்கு வழங்கப்பட்டதாக கணக்கில் வரும் தொகை ரூ.11,00000 (பதினோரு இலட்சம்) என்று தெரிய வருகிறது.

நகராட்சி சார்பாக நடை பெற்ற திட்டப் பணிகளுக்காக, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் 50 சதவீதம் வேலைகள் தரமாக நடை பெற்று இருப்பதாக நகராட்சி நிர்வாகம் அதிகாரப் பூர்வமாக ஏதேனும் 'ஒரே ஒரு பணியை' நிரூபித்தால் "நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்" என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நகராட்சி சார்பாக நடை பெற்ற அனைத்து திட்டப் பணிகளிலும், பெரும் அளவு ஊழல் நடை பெற்றுக் கொண்டிருப்பதை, பொது மக்களுக்கு நீதி மன்றம் மூலம் நிரூபித்து, யார் தவறு செய்து இருந்தாலும், அவர்கள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வேன் என்பதையும் இதன்  மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைத்து செயல்களையும்,எல்லாம் வல்ல ஏக இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கீழை இளையவன் வலை தளத்திற்கு, 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாகீம் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

FACE BOOK COMMENTS :
  • Fouz Ameen ஏன் ?? என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. கேள்விவோளை கேட்கிட்டே இருக்கணும். அப்பத்தான் நியாயம்னு ஒன்னு பொறக்கும். மெய் இபுறாகீம் காக்கா சவால் சரியானது.


  • Asan Hakkim போராடி மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுக்கதான் மக்கள் உங்களை நம்பி உங்களுக்கு ஓட்டு போட்டு அழகு பார்த்தார்கள் அதை விட்டு, விட்டு இப்படி முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். போராடும் தைரியம் உங்களுக்கு இல்லையா? இப்படி செய்வது உங்களின் சுய நலத்தை காட்டுகிறது. போராடுங்கள்..போராடுங்கள்..இறுதி வரை போராடுங்கள். வெற்றி நிச்சயம், நல்ல யோசனை செய்து நல்ல முடிவு எடுக்கவும். அன்புள்ள அசன் ஹக்கீம்%%


  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை நகரின் முதன்மை குடி மகள், மரியாதைக்குரிய நகர மன்ற தலைவி அவர்களிடம் முஹைதீன் இப்ராஹீம் தன் வார்டின் நலனுக்காக நேர்மையுடன் முறையாக வேண்டுகோள் வைக்கும் அத்தனை விசயங்களையும், அவர் வேண்டுமென்றே நிராகரித்து வருவதும் மறுத்து வருவதும் மக்கள் விரோதப் போக்காகவே அமைகிறது.

    18 வது வார்டு கவுன்சிலர், புதிய நகர் மன்றம் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்திலிருந்தே நகராட்சியில் நடைபெறும் ஊழலை எதிர்த்தும், மூத்த அரசியல் வாதிகளின் தலையீடுகளை எதிர்த்தும், நகராட்சி சார்பாக நடைபெறும் தரமற்ற பணிகளை கண்டித்தும், தனியாகவும் சில கவுன்சிலர்களின் ஆதரவோடும் இடைவிடாது போராடி வருகிறார்.

    இவர் தன் வார்டு சார்பாக வைக்கப்பட்ட வேண்டுகோள்கள், நகராட்சித் தலைவியால் ஏற்கப்பட்டு, 'மன்றம் அனுமதிக்கலாம்' மன்ற ஒப்புதலும் பெற்ற பிறகும் கூட, இன்னும் பணி ஆணைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏன் இவருடைய வார்டு பகுதி மட்டும் திட்டமிட்டு நிராகரிக்கப்படுகிறது? இவர் நகர் நலனுக்காக ஆக்கப் பூர்வமான கேள்விகளை தொடர்ந்து கேட்டு போராடி வருவதாலா ?

    பொதுமக்கள் நகராட்சியின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் மிக மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அதை காட்டிலும் நம்மை படைத்து பரிபாலிக்கின்ற வல்லோன் மிக மிக நுணுக்கமாக நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் நாம் மறக்க வேண்டாம்.

1 comment:

  1. sir neenga mattum than intha mathiri thappa publish pannuriyea sir maththa vard memberla work pannalaya illa ungalukku chairman nai pudikkalaiyaplease don't give any comments

    ReplyDelete