தேடல் தொடங்கியதே..

Monday 20 May 2013

கீழக்கரையில் சிறுவர்கள் நடமாடும் சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் 'கேஸ் சிலிண்டர்கள்' - விபரீதம் நடைபெறும் முன் அகற்றப்படுமா ?


கீழக்கரை சின்னக்கடைதெரு  சாலை எப்போதும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருந்தபடியே இருக்கும். மேலும் இந்த சாலையில் பள்ளிக் கூடங்களுக்கு செல்லும் சிறுவர் சிறுமிகளும், பொதுமக்களும் நடந்து செல்லும் முக்கிய சாலையாக இருக்கிறது. முத்தலிபு காக்கா அரிசிக் கடை அருகே உள்ள இந்த சாலையில், கீழக்கரை சேது கேஸ் ஏஜென்சி நிறுவனத்தினரால் பாதி சாலையை ஆக்கிரமித்தவாறு வைக்கப்பட்டு இருக்கும் கேஸ் நிரம்பியிருக்கும் சிலிண்டர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன், இப்போது இருக்கும் கடும் வெப்பத்தால் கேஸ் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயமும் இருப்பதாக, இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.





இந்த கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கும் பகுதியை கடந்து செல்லும் சிறுவர்கள் விளையாட்டாக, அதன் மீது ஏறி விளையாடுவதும், தாவுவதுமாக வயிற்றில் புளியை கரைக்கின்றனர். அவர்கள் தப்பி தவறி சிலிண்டர் மூடியை திறந்து விட்டால், இப்போது கீழக்கரையில் வீசும் அக்னி அனலுக்கு தீப்பற்றி கொள்வது பெரிய விசயமே அல்ல. 

இந்த சிலிண்டர்கள் பரப்பி வைக்கப்பட்டு இருக்கும் சாலையின் மேல் பகுதியில் தான், உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கிறது ஏற்கனவே இதே இடத்தில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பட்ட மரம் ஒன்று முறிந்து விழும் நிலையில் வேறு நின்று கொண்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்திற்கு புகார் செய்யும் போதெல்லாம் "சாலையில் நாங்கள் வைத்திருப்பது காலி சிலிண்டர் தான். அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று மட்டும் பதில் வருகிறது. 



இது போன்று பொதுமக்கள் அச்சப்படும் வகையில், சாலையில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டர்களை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என 'ஒரு சாவு விழும் வரை...' பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • Asan Hakkim "ஒரு சாவு விழும் வரை...' பொறுத்திருக்க அவசியம் இல்லை மக்கள் சக்தி மகத்தான சக்தி, ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் ஒரே நாளே போதும் காலி பண்ணிவிடலாம் - சும்மா ஒன்னும் இல்லாத விசயத்துக்கெல்லாம் கட்ட பஞ்சாயத் வைக்கிறார்கள். இது போன்ற விசயத்துக்கு கட்ட பஞ்சாயத் வைக்க மாட்டர்களா என்ன? ஒரு உசுரு போனால் சும்மா வந்து விடுமா என்ன?? காலி சிலிண்டர்....காலி சிலிண்டர்....என சொல்லுபவர்கள் உசுரு போனால் கூலியா(உயிரைய்) கொடுக்க போகிறார்கள் என்ன??? {குரல் கொடுப்போம் வெற்றிபெறுவோம். - அன்புள்ள அசன் ஹக்கீம்%%

1 comment:

  1. படத்தை காணும் எந்த அறிவு கெட்ட ஜென்மமும் இது காலி சிலிண்டர்கள் என்று சொல்ல மாட்டார்கள். பார்வையில் படும் அனைத்து சிலிண்டரும் சீலுடன் உள்ளது.வெட்கம் கெட்ட ஆத்மா சொல்லுகிறது காலி சிலிண்டர் என்று.

    சில காலத்திற்கு முன் நகரின் இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தது, டெலிவரி சமயத்தில் பில் தொகையை விட எதுவும் கூடுதலான பணம் கொடுக்க வேண்டாம் என்று. ஆனால் நடைமுறையில் எப்படி இருக்கிறது. சிலிண்டர் ஒன்றுக்கு பில்படி ரூ.405/= கொடுக்க வேண்டும். ஆனால் வசூலிக்கப்படுவதோ ரூ.430/= வாதாடி விட்டு கொடுக்க மறுத்தால் அடுத்த முறை காலத்தில் டெலிவரி கிடைக்காது.இது சம்பந்தமாக 500 பிளாட்டில் உள்ள ஒருவரோ மற்ற பகுதியில் உள்ளவர்களோ சேது கேஸ் ஏஜென்ஸி அலுவலகத்திற்கு சென்று வர வேண்டுமானால் ஆட்டோவுக்கு எவ்வளவு செலவாகும்? இதனால் மக்களும் கூடுதலாக கொடுக்க கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். காலத்தின் கொடுமை. இந்த லட்சணத்தில் கோடவுனில் டெலிவரி எடுத்தால் ரூ.8/= குறைக்கப்படும் என்று பில்லில் அச்சடித்து உள்ளார்கள்.

    ஆகவே பொது நல அமைப்புகள் எந்த ஒரு பிரச்சனையையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தால் தான் பிரச்சனைகளுக்கு நிரந்திர தீர்வு எட்ட முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும்.

    இந்தப் பிரச்சனையில் பொது மக்கள் அச்சப்படும் வகையில் எதுவும் நடக்காமல் இருக்க வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் காத்து அருள்வானாக. ஆமீன்.

    ReplyDelete