தேடல் தொடங்கியதே..

Tuesday 14 May 2013

கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை, விரைந்து அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் முயற்சி !


கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் அருகே அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் (கடை எண் : 6983) கடையால், இந்தப் பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. கீழக்கரை வாழ் பெண்களும், குழந்தைகளும், எல்லா நேரங்களிலும் அதிகம் பயணிக்கும் இந்த சாலையில் அச்சப்படும் வகையில் அமைந்திருக்கும், இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற சமூக ஆர்வலர்கள் பலர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கீழக்கரை மக்களை நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி, நேற்று (13.05.2013) திங்கள் கிழமை காலை 10.30 மணியளவில், கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 

இந்த மனுவை பெற்றுக் கொண்ட, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.இராஜ கிருபாகரன் அவர்கள், இந்த மனு மீது விசாரணை செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு பரிந்துரை செய்தார்.




இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் A.M.S.தமீமுதீன் அவர்கள் கூறும் போது "இந்த டாஸ்மாக் கடையின் அருகில் தான் மின்சாரக் கட்டணம் செலுத்தும் மையம் செயல் படுகிறது. தினமும் பெண்களும், முதியவர்களும் இங்கு வந்து போகக் கூடிய சூழல் இருக்கிறது. இந்த கடையின் முன்னால் எப்போதும் போதையில் குடிமகன்களின் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது. அது மட்டுமில்லாமல், கீழக்கரை சார் பதிவாளர் அலுவலக கட்டிடமும் இதன் அருகாமையில் உள்ள மருதன் தோப்பு பகுதியில் தான் வரப் போவதாகவும்  தெரிய வருகிறது. ஆகவே எந்த சூழ் நிலையிலும், இந்த டாஸ்மாக் மதுபானக் கடையை நாம் தொடர அனுமதிக்கக் கூடாது." என்று சமுதாய அக்கறையுடன் தெரிவித்தார்.

3 comments:

  1. எது எப்படி இருப்பினும் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி எதிர் வரும் ஆகஸ்ட் 14 வரை காத்திருக்க தான் வேண்டும்.

    அந்தப் பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக கோரமான விபரிதம் நடக்கும் முன் வளைவுகளின் இரு மருங்கிலும் உள்ள அனைத்து மரங்களும் நீக்கப்பட்டு தெளிவான பார்வை கிடைக்க வழி செய்தாக வேண்டும்.

    அந்த பகுதியில் நடமாடும் பொது மக்களுக்கும் மிகுந்த பொருப்புடன் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். தடுப்பு கற்களில் உள்ள இரவில் ஒளிரும் தகடுகள் முற்றிலுமாக நாசமாகப்பட்டுள்ளது. நாசப்படுதியவர்களுக்கு ஒரு பைசா அளவுக்கு கூட பிரயோசனம் கிடையாது.ஆனால் இதனால் வாகன ஓட்டிகளுக்கு எந்த அள்வுக்கு சோதனையான கட்டம் என்பது அறிவுள்ளவர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  2. சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புகிறேன,மேலும் தம்பி சலிஹ் ஹுசைன் எடுத்துகொள்ளும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சட்டம் தன் கடமையை செய்யும் எனநம்புகிறேன்,மேலும் தம்பி சலிஹ் ஹுசைன் எடுத்துகொள்ளும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete