தேடல் தொடங்கியதே..

Thursday, 27 June 2013

கீழக்கரையில் பழமையை தாங்கி, கம்பீரமாக காட்சி தரும் கட்டிடங்கள் - வரலாற்றுச் சுவடுகள் (பகுதி 1)

கீழக்கரையில் மிக வேகமாக உருவெடுத்து வரும் நகராக்கத்தின் தாக்கத்தால், பழமை மிளிரும் பல வீடுகளை இடித்து விட்டு, நவீன வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுவதில் மக்கள் நாட்டம் கொண்டுள்ளனர். இதனால் பழமைகளை தாங்கி நிற்கும் வீடுகள் எல்லாம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. கீழக்கரை நகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பழைமைகளை தாங்கி, கம்பீரமாக காட்சியளிக்கும் கட்டிடங்களும், வீடுகளும், வியாபாரத் தளங்களும் இன்னும் 15 வருடங்களுக்குள் முற்றிலுமாக காணாமல் போய் விடும் நிலையே உள்ளது. 


இடம் : பழைய மீன் கடை, சேரான் தெரு, கீழக்கரை 

பட விளக்கம் : கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்திற்கு பாத்தியப்பட்ட, இந்த மீன் சந்தை கட்டிடம் 120 வருடங்கள் பழமையானது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் (கொளுக்கி ஓடுகள்) கொழும்பு ஓடுகள் அததனையும், இன்னும் எவ்வித சிதிலமும் அடையாமல்  புதிததாக பொருத்தப்பட்ட ஓடுகள் போல் மிளிர்வதை காணலாம்.

கீழக்கரையில் மிகவும் தொன்மையான வரலாற்றுடன் காட்சி தரும் பழைமை கட்டிடங்கள் பெரும்பாலும் பழைய குத்பா பள்ளி தெரு, பரதர் தெரு, பெத்தரி தெரு, சேரான் தெரு, நடுத் தெரு, கிழக்குத் தெரு பகுதிகளில் இருக்கிறது.அவற்றுள் பெரும்பாலானவை பராமரிக்கப்படாமல், சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இது போன்ற கட்டிடங்கள் கீழக்கரை நகரின் பண்டைய கலாச்சாரத்தை பறை சாற்றும் வரலாற்று சின்னங்களாக இருக்கிறது.


இடம் : கஸ்டம்ஸ் சாலை, பெத்தரி தெரு, கீழக்கரை 

நம் கீழக்கரையின், எதிர் கால சந்ததியினர் இது போன்ற பழமையான கட்டிடங்களை காண ஆவல் கொள்ளும் காலத்தில், இவை புகைப்படமாகவாவது, நம் கைகளில் தவழட்டும் என்கிற பேராவலில் இவற்றை வெளியிட முனைகிறேன். இதன் தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் பழமையான கட்டிடங்களின் வரலாறுகள், வடிவமைப்புகள், கடந்து வந்த பாதைகள் குறித்து விரிவாக பதிகிறேன்.

பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!

FACE BOOK COMMENTS :

 • Fouz Ameen கீழை இளையவனே கலக்குரிய மச்சான். போட்டோஸ் பாத்து, இது என்ன இடம்னு கண்டு பிடிக்கலே. செய்தி படிச்சி தான் தெரிஞ்சிகிட்டேன். இன்னும் நெறைய போட்டோ அப்டேட் போடு மச்சான்.
 • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' ஆஹா அருமை.. மாசா அல்லாஹ். கீழக்கரையின் பழைமையான கட்டிடங்களை இது போன்று யாராவது சமூக ஆர்வலர்கள் புகைப்படமாக தந்தால் மட்டமே, வருங்கால சந்ததியினர், சரித்திரங்களை தெரிந்து கொள்ள முடியும். இது போன்ற வரலாற்று பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் தம்பி இளையவரே. ஆர்வம் மேலிடுகிறது.
 • Keelakarai Ali Batcha தம்பி கீழை இளையவனே, கடந்த ஆண்டு இறுதியில் சரித்திர ஆர்வலர் நமதூர் தம்பி அபு சாலிஹ் சீனி அசனா அவர்களுடன் பழைமையான எனது வீட்டிற்கு வருகை தந்து ஆய்வு செய்தது ஜப்பானிய சரித்திர மாணவர் குழு.தாங்களும் ஒரு முறை வருகை தந்து பழங்கால பித்தளை வட்டா, மர பல்லாங்குழி போன்ற மற்றவைகளையும் கண்டு களியுங்களேன்.

 • Keelai Ilayyavan அன்புள்ள அலி பாட்சா காக்கா, 


  தங்களின் அழைப்பிற்கு நன்றி. நானும் உங்கள் இல்லத்திற்கு வருகை தர பேராவல் கொண்டு காத்திருக்கிறேன்.
 • Abdul Hameed Ramnad இது போன்ற நமது ஊருக்கென்றே சொல்லப்படும் பல்வேறு பழமைகளையும் கலாச்சாரங்களையும் பாதுகாத்து நமது ஊர் பெருமையை வருங்கால நமத சந்ததிகளுக்கு சொல்ல நாம் கடமை பட்டுள்ளோம் .
  June 27 at 9:52pm via mobile · Unlike · 4
 • Syed Abusalique Seeni Asana @ Keelakarai Ali Batcha mama - பத்து நாள் முன்னாடி 3 முக்கியமான நபர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து வர விரும்பினேன் அவர்களும் விரும்பினார்கள் வருவதற்கு. அனால் காலம் சற்று குறைவான காரணத்தினால் ஒரு சில இடங்களை மட்டும் பார்த்து விட்டு 2 முக்கியஸ்தர்கள் செனனை செல்ல வேண்டி ஆகிற்று. மீண்டும் அவர்கள் நோன்பு காலங்களில் வருவதகவும் கண்டிபஹா உங்கள் வீட்டை பார்வை இட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து சென்றார்கள்.. நான் கண்டிப்பாக அழைத்து வருவேன். Insha allah.. ஜப்பானியர்களுடன் வரும்போது தாங்கள் நமது ஊர் சுவை மிகுந்த தின்பண்டங்களை வைத்து அசதிநீர்கள்.. பழமைக்கு (அம்பாலர் காலத்து வீடுகள்) ஒரு முக்கிய அங்கமாகவும் கண்கவர் தேக்கு மரங்களால் ஆனா அதிக வேளைபடுகளுடன் கட்ட பட்ட உங்கள் வீட்டை பார்த்து மெய்மரந்து போனார்கள் என்றல் தவறு இல்லை.. 2 நாட்கள் உங்கள் வீட்டை ஆய்வு செய்து அதனை ஒரு மாடல் வடிவில் ஜப்பணில் அமைத்து காட்டவேண்டும் என்றும் விரும்பினார்கள். தங்கள் வீட்டில் உள்ள பொக்கிசங்களை நன் மட்டும் பார்த்தல் போதுமா? தங்கள் வீட்டில் உள்ள பழமையான பொருட்கள், பழைய போட்டோக்கள் அதனை தங்கள் முறையாக பராமரிக்கும் முறை அனைத்தும் சூப்பர்.. 3அம் நபர் கண்டிப்பக வருவர் என்பதில் ஐயம் இல்லை.. @ 3ஆம் நபர் - வருவார் தானே ?
 • Syed Abusalique Seeni Asana கீழை இளையவன் அதிகம் அதிகம் சமூக அக்கறை கொண்டவராகவும்.. பிற்கால சமூகத்தின் நிலைமையை எண்ணி அவர்களுக்கு என்று கஷ்டப்பட்டு பல இடங்கள் ஏரி எறங்கி போடோஸ் எடுத்து இணையத்தில் பதிவு செய்து வருகிறார். ஒவ்வொரு போடோஸ் பின்னாடி எவ்வலவு அலட்ச்சல்களை அவர் சந்தித்து இருப்பர் என்பதை என்னால் உணர முடிகிறது.. கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு என்று மட்டும் இல்லாமல் விஞானம், அறிவியல், மருத்துவம், சட்டம் ஏன் அணைத்து துறைகளையும் அலசி அறைந்து பதிவுகளை தரும் நமது கீழை இளையவன்க்கும் , அவரின் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்.
 • Nazir Sultan Thambi include our vadakku theru (North street) in your list where there is a house belongs to PKS family near ration shop, which is elegantly showing our forefathers’ expertise on construction

2 comments:

 1. தம்பி எங்கள் வடக்கு தெருவையும் வரிசையில் சேர்த்து கொள்ளுங்கள் இன்னும் எங்கள் தெருவில் ரேஷன் கடை அருகில் மிக பிரமாண்டமாய் பீ கே எஸ் குடும்பத்திற்கு சொந்தமான ஜமீன் கோட்டை போல் ஒரு பழமையான வீடு உள்ளது.- நசிர் சுல்தான். வடக்கு தெரூ கீழக்கரை

  ReplyDelete
 2. தம்பி உங்கள் வரிசையில் எங்கள் வடக்கு தெருவையும் சேர்த்து கொள்ளுங்கள். வடக்கு தெரு ரேஷன் கடை அருகில் பீ கே எஸ் குடும்பத்திற்கு சொந்தமான ஜமீன் கோட்டை போல் ஒரு வீடு உள்ளது.அதுவும் நம் பழைய கட்டிட கலைக்கு சான்றாக பறை சாற்றி கொண்டு இருக்கிறது. நசிர் சுல்தான்

  ReplyDelete