தேடல் தொடங்கியதே..

Sunday 23 June 2013

கீழக்கரையில் பகல் வேளைகளில் மட்டும் பிரகாசிக்கும் ஹைமாஸ், தெரு விளக்குகள் - 'செய் வினையாக இருக்குமோ.?" என பொதுமக்கள் பீதி!

கீழக்கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை  12 முதல் 16 மணி நேர மின் வெட்டு இருக்கும் காலத்தில் கூட, பொது மக்களுக்கு இரவில் வெளிச்சம் தர வேண்டிய, தெரு விளக்குகள் காலை நேரங்களில் மட்டுமே சுடர் விட்டு எரிந்தது. நெய்னா முஹம்மது தண்டையல் தெரு, தம்பி நெய்னா பிள்ளை தெரு, ஆடறுத்தான் தெரு, சேரான் தெரு, சின்னக்கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6.30 மணிக்கு ஏறிய வேண்டிய தெரு விளக்குகள் இரவு 9 மணிக்கு மேல் தான் எரிகிறது.


புகைப்படம் எடுத்த நேரம் : நண்பகல் 12.30
இன்னும் சில இடங்களில் காலை 8 மணிக்கு எரிய துவங்கும் தெரு விளக்குகள் நண்பகல் வரைக்கும் எரிகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவ்திக்குள்ளாயினர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடமும், மின்சார வாரிய ஊழியர்களிடமும், பல்வேறு சமூக நல அமைப்பினர்கள் புகார்கள் அளித்ததன் பேரில் சீர் செய்யப்பட்டு கொஞ்ச காலம் சரியாக சென்றது. தற்போது மீண்டும் இந்த பிரச்சனை தலை தூக்கியுள்ளது.

இது குறித்து ஆடறுத்தான் தெருவை சேர்ந்த அஹமது சலீம் அவர்கள் கூறும் போது "இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. கீழக்கரையில் பல இடங்களில் உச்சி வெயில் பொழுதிலும் தெரு விளக்குகள் அத்தனையும் பிரகாசமாக எரிந்து கொண்டே தான் இருக்கிறது.

இராத்திரி நேரங்களில் தான் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏதோ செய்வினை போல் தெரிகிறது. நகராட்சிக்கு பிடிக்காத யாரோ தான் இதை செய்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன்." என அச்சம் கலந்த முகத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை செயலாளர். S. இஸ்மாயில் அவர்கள் கூறும் போது "இது போன்று பல இடங்களில் நண்பகல் வரை தெருவிளக்குகள் எரிவதால், மின்சாரம் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. பலமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் செய்தும் பலனில்லை. நகராட்சி தெரு விளக்கு சீரமைப்பாளர் ரமேசிடம் கேட்கும் போதெல்லாம் ஏதோ டைமர் கோளாறு, வயர் உரசுவதால் எரிகிறது, சைத்தான் கோளாறு என்று பிதற்றுகிறார். இவர்களை ஓதி பார்த்தால் தான் சரியாகும் என நினைக்கிறேன்." என்று தன் வருத்தத்தை தெரிவித்தார்.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி 

கீழக்கரையில் உச்சி வெயிலிலும் சுடர் விட்டு எரியும் தெரு விளக்குகள் - தொடர் மின் வெட்டிலும் தொடரும் சாதனை !
http://keelaiilayyavan.blogspot.in/2012/10/blog-post_11.html


FACE BOOK COMMENTS :
  • Asan Hakkim இந்த "விளக்கு" கம்பம் பழைய கஸ்டம்ஸ் ஆபீஸ் அருகில் உள்ளது. இந்த பழைய கஸ்டம்ஸ் ஆபீஸில் தான் பல ஆண்டுகளாக "இரவில்" சமூக விரோதிகளின் அநியாங்கள் பல நடக்கிறது. "இரவில்" எப்போதாவது ஒரு தடவை போலிஸ்;; கண்காணித்தாலும். போலிஸ்;; கண்ணிலும், தெரு மக்கள் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு இரவு நேரங்களில் "சமூக" விரோதிகள் தொடர்ந்து #கஞ்சா &போதை மற்றும் $ஓரின சேர்க்கை(9) காம களியாட்டங்களிலும் ஈடுபட்டுதான் வருகிறார்கள். அதனால் இரவில் வெளிச்சம் இருந்தால் இது போன்ற கேவலமான செயல்களை கட்டுபடுத்தலாம். குறிப்பு:- அரசு இந்த வித "விளக்கு" பிரச்சனைக்கு விரைந்து சரி செய்யுமா? இல்லை சமூக விரோதிகளுக்கு "விளக்கு" பிடிக்குமா??? - பொறுத்திருத்துதான் பார்ப்போமெ!!! இப்படிக்கு கஸ்டம்ஸ் ரோடு அன்புள்ள அசன் ஹக்கீம்%%

2 comments:

  1. அரசு முறை பயணமாக பஞ்சாப் மாநிலத்தில் வளம் வந்து கொண்டிருக்கும் நமது முதல் குடிமகள் நகர் திரும்பியதும் கவனிக்கப்பட்லாம்.

    ReplyDelete
  2. லச்சம்,சுகாதாரக்கேடு,சில சுயநலவாதிகளின் அட்டூழியம் போன்ற இன்னல்களினால் இருட்டில் மூழ்கி கிடக்கும் நம் கீழக்கரையை இப்படியாவது விளக்குகளை எரிய விட்டு வெளிச்சம் கொடுக்கிறோம் என்று மார்தட்டிகொள்கிரார்களோ என்னவோ...

    ReplyDelete