தேடல் தொடங்கியதே..

Monday 10 June 2013

கீழக்கரையில் கோடை விடுமுறை முடிந்து இன்று (10.06.2013) பள்ளிகள் திறந்தன - மகிழ்ச்சியுடன் பள்ளி செல்லும் மாணவ செல்வங்கள் !

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின், இன்று (10.06.2013) திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வுகள் முடிந்த பின், ஏப்ரல், மே மாதங்களில், கோடை விடுமுறை விடப்பட்டது. 2013 -14ம் கல்வி ஆண்டை, கடந்த 03.06.2013 தேதி முதல் துவக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது. 

இடம் : ஹமீதியா மேனிலைப் பள்ளி, கீழக்கரை 


ஆனால், கடும் வெயில் காரணமாக, பள்ளி திறப்பதை, 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும், இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளும், இன்று திறக்கப்பட்டுள்ளன. 

கீழக்கரை நகரில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளது. காலை முதலே மாணவ, மாணவியர் அனைவரும், தங்கள் பள்ளிகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் செல்லத் துவங்கினர். தற்போது அனைத்து பள்ளிகளிலும் PRE KG, LKG, UKG போன்ற வகுப்புகளுக்கு, அனல் பறக்கும் அட்மிஷன் நடை பெற்று வருகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு,இன்று காலை பள்ளி திறந்ததும், இலவச பாடப் புத்தகங்கள் வழங்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கல்வி எனும் அழியா திரவியம் தேடி தங்கள் சிறகினை விரித்து.. பள்ளிகள் நோக்கி பறக்கத் துவங்கி இருக்கும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment