தேடல் தொடங்கியதே..

Friday 14 June 2013

தமிழகத்தில் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு அறிவிப்பு !

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று (13.06.203) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குரூப்-4 தேர்வு மூலமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பப்படன. 


இந்த நிலையில், மேற்கூறப்பட்ட பதவிகளில் சுமார் 5,500 காலி இடங்கள் குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. தேர்வு பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன. குரூப்-4 தேர்வு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மட்டுமே உண்டு. நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. 



இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு தொடக்க நிலையில் ஏறத்தாழ ரூ.14 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படுவோர் பட்டதாரியாக இருந்தால் இரண்டு இன்கிரிமென்ட் அதாவது கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணியில் இருந்துகொண்டே துறைத்தேர்வுகள் எழுதி படிப்படியாக பதவி உயர்வும் பெறலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுள்ளவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கான விண்ணப்பங்களை இன்று (14.06.2013) முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஜூலை 15.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 25.

மேலும் விண்ணப்பக்கட்டணம், வயதுவரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை அறிய கீழ் காணும் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தை சொடுக்கி பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம். 

டி.என்.பி.எஸ்.சி இணையதள முகவரி 

கீழக்கரை பகுதியில் அரசு வேலைகளுக்காக முயற்சிக்கும் ஆர்வமுடையவர்கள், இந்த தேர்வுக்கு விரைந்து விண்ணப்பிக்குமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

No comments:

Post a Comment