தேடல் தொடங்கியதே..

Friday 14 June 2013

கீழக்கரையில் அனைத்து ஜூம்மா பள்ளிகளிலும், காலம் சென்ற 'செ.மு. ஹமீது' அவர்களுக்காக நடைபெற்ற 'காயிப் ஜனாஸா தொழுகை' - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !

கீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த, 'சேனா மூனா ஹமீது காக்கா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'கீழக்கரையின் கல்வித் தந்தை' 'எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்'அவர்கள் 06.06.2013 மாலை 6.48  மணியளவில் புது டெல்லியில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.  


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 08.06.20013 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நடை பெற்றது. இவர்கள் கீழக்கரை அனைத்து ஜமாத்துகளின் கூட்டமைப்பான 'கீழக்கரை குத்பா கமிட்டி' யின் தலைவராகவும் அங்கம் வகித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'செ.மு.ஹமீது காக்கா' அவர்கள் இல்லம், மேலத்தெரு, கீழக்கரை 


இந்நிலையில் கீழக்கரையில் இன்று (14.06.2013) வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பின்னர், கீழக்கரையில் அனைத்து ஜமாத்து பள்ளிவாசலிலும், 'காயிப் ஜனாஸா தொழுகை' நடை பெற்றது. கீழக்கரை நடுத் தெரு குத்பா பள்ளியில் பைத்துல் மால் துணை செயலாளர் முஹைதீன் தம்பி அவர்களின் சிறு உரைக்குப் பின்னர், கீழக்கரை டவுன் காஜி.A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் அவர்கள் இமாமாக இருந்து தொழுகை நடத்தினார். அனைத்து பள்ளிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்தனர்.

No comments:

Post a Comment