தேடல் தொடங்கியதே..

Tuesday 11 June 2013

கீழக்கரையில் விதி முறைகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் - ஆபத்துகள் ஏற்படும் முன் தடுக்கப்படுமா?

கீழக்கரையில் தற்போது கோடை விடுமுறைக்குப் பின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களை அதிகளவில் ஏற்றி,  மின்னல்   வேகத்தில் சாலைகளை கடந்து செல்லும் ஆட்டோக்கள், ஆம்னி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கீழக்கரை, குறுகிய சாலை வசதி உள்ள ஊராக திகழ்வதால் பள்ளி, கல்லூரிகளில் உள்ள பெரிய வாகனங்கள் குறிப்பிட்ட சாலைகளில் மட்டுமே சென்று வர இயலும்.  எனவே தான் இது போன்ற தனியார் வாகனங்களை நாடுகின்றனர்.

பட விளக்கம் : அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவரை கண்டிக்கும் தமுமுக நகர் தலைவர் முகம்மது சிராஜீதீன் 

இது குறித்து கீழக்கரை தமுமுக நகர் தலைவர் முகம்மது சிராஜீதீன் அவர்கள் கூறும் போது "இந்த விசயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். விபத்துகள் ஏற்பட்ட பிறகு வருத்துவதில் பயனில்லை. தினமும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செல்லும் வாகனத்தில் பாதுகாப்பாக அமர்ந்து செல்கிறார்களா..? என்பதை கவனிக்க வேண்டும். ஆபத்து வருமுன் காப்பது நம் கடமை." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் பசீர் அஹமது அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் 500க்கும் மேற்பட்ட வாடகை ஆட்டோக்களும் 300க்கும் மேற்பட்ட ஆம்னி வேன்களும் இயக்கப்பட்டு வருகிறது. இவைகளில் பெரும்பாலானவை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ ,மாணவிகளை மாத வாடகை அடிப்படையில் ஏற்றி செல்கின்றனர்.

இவர்கள் அளவுக்கு அதிகமாக கூடுதல் மாணவர்களை ஏற்றிச் செல்வதால் பள்ளிக் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறும் அபாயமும் உள்ளது. சில ஆட்டோக்களில் முன் இருக்கையிலும் 2 பள்ளி குழந்தைகளை அமர்த்தி செல்கிறார்கள். இதனால் பேராபத்துகள் நிகழும் என்பதை உணர வேண்டும்" என்று தெரிவித்தார். 

அதிகமான குழந்தைகளுடன் பறக்கும் ஆட்டோ 

கீழக்கரையில் ப‌ல‌ ஆண்டு காலமாக இந்த‌ குற்ற‌ச்சாட்டு இருந்து வ‌ருகிற‌து. ஆனால் இதற்கு பதில் தரும் சில வாகன ஓட்டுனர்கள் "பெட்ரோல் விலை கூடி விட்டது. டீசல் விலை  ஏறி விட்டது. அதனால் தான் இது போன்று பள்ளி மாணவர்களை ஏற்ற வேண்டிய சூழல்" இருப்பதாக தெரிவித்தாலும் மாணவ செல்வங்களை, இப்படி நசுக்கி, மூச்சு திணறடித்து கல்விக் கூடங்களுக்கு அழைத்து செல்வதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் பள்ளி விடும் நேரங்களில், சிறிய சந்துகளிள் ஜெட் வேகத்தில் பறக்கும் இது போன்ற வாகனங்களால் உயிரிழப்புகளும் ஏற்படக் கூடிய அபாயம்  உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதில் அச்சப்படும் விஷயம் என்னவென்றால்.. இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் பலருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை. சிறுவர்களும் வாகனங்களை ஓட்டுகிறார்கள். சிலர் குடிபோதையில் ஓட்டுகிறார்கள் என்று நீண்ட காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் : நண்பன். இர்பான் 

2 comments:

  1. நக்ரில் நீண்ட காலமாக புரையோடிப் போன இப் பிரச்சனையாக இருப்பதால் சர்வ தேச அளவில் வசித்துக் கொண்டு இருக்குக்ம் கீழக்கரை வாசிகளும், கீழக்கரை சம்பந்தப்பட்ட வளைத் தங்களை பார்வை இடும் அனைவரின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் கீழக்கரை டைம்ஸில் இருந்த எமது பதிவை மீண்டும் பதிவு செய்கிறோம்.

    மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 12, 2013 at 7:45 PM @kilakaraitimes.blogspot.in

    பல சந்தர்பங்களில் இதைபற்றி பேசி விட்டோம்.விவாதித்து விட்டோம். ஆனால் நடவடிக்கையோ / பலனோ பூஜ்ஜியமாக உள்ளது. ஒரு சமயம் பாரிய விபரிதம் நடக்கட்டும் என்ற காத்திருப்போ?

    இந்த நிலையை சீர் செய்ய வேண்டுமானால் கீழக்கரையில் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு செய்தே ஆக வேண்டும்.அத்துடன் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் ( RIGIONAL TRANSPORT OFFICER) தொடர் கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இதனால் தனிப்பட்ட விரோதங்களும், சாதி, சமய சாயம் பூசும் வேலைகளும் தடுக்கபபடும்.

    கீழ்கண்ட தகவல் கீழை முரசில் 01/02/12 -ல் வெளியானதின் மறுபதிப்பு:

    கீழக்கரை சமூகத்தின் தனித்துவமான சமய, சமூக, கலாச்சார மதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதுடன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருவதையும்,கடந்த காலத்தில் நாம் இழந்த சமூக விழுமியங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சில புரட்சிகர இளைஞர்கள் அனைத்து ஜமாஅத்துக்களுடன் கலந்து பேசி வருவதையும் கீழைமுரசு வாசகர்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.

    இந்த முயற்சிகளை தொடர்ந்து, இன்று காலை கீழக்கரை பைத்துல்மாலில் குத்பா கமிட்டியின் கூட்டம் , கமிட்டியின் தலைவர் செ.மு. ஹமீது அப்து காதர் தலைமயில் நடை பெற்றது, கீழக்கரையின் 8 ஜமாஅத்தை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பைத்துல்மால் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பினர்களாக கீழை புகாரி, கீழை முஜிப், ஹுசைன், கன்மனி அலி, அப்துல் ஹமீது, உட்ட்பட சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக சாதாரன விஷயங்களை மட்டுமே அலசும் இந்த கூட்டத்தில், இன்று அனல் கக்கும் விவாதங்கள் தெறித்தது. சகோ. புஹாரி மற்றும் சகோ. அப்துல் ஹமீது ஆகியோர்கள் நெருப்பு பிழம்பாக மாறி பேசினர்.

    குறிப்பாக கீழக்கரையில் அரங்கேற்றப்படும் இஸ்லாத்திற்கு எதிரான, அறுவறுப்பான கலாச்சார சீரழிவுகளின் போக்கு, ஜமாஅத்துக்களின் கையறுபபட்ட நிலை, கலாச்சார சீரழிவுகளை அங்கீகரிக்கும் நம் மக்களின் மன மாற்றம், எல்லைமீறி போகும் அனாச்சாரங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மானவ சமுதாயத்தை சீரழிக்க புறப்பட்டிருக்கும் சமூக பொறுக்கிகள், அவர்களின் தொழில், சமுதாயத்தில் பதமாய் கலந்து கீழக்கரையின் கலாச்சார மதிப்புக்களை உறிஞ்சி சக்கையாய் துப்பும் நஞ்சுகள், பணத்தால் அவலங்களை மறைக்கும் பரிதாபம், ஆகிய சீர்கேடுகளை பற்றி பேசினார்கள், மேலும், சமீபத்தில் நடைபெற்ற சம்பவஙகளை நம்மை சுற்றி கண்டும் கானாமல் விட்டுவிட்டால் எதிர்கால சந்த்தியினருக்கு நாம இந்த கேடுகெட்ட செயல்களுக்கு அங்கீகாரம் வழங்கிவிடும் சரித்திரப் பிழையை செய்துவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். நிகழ்வுகளின் சூழ் நிலை உணமையை அறிந்து கொண்டு இதுவரை கீழக்கரை வரலாறு கண்டிராத கீழ்காணும் அதிரடி முடிவு குத்பா கமிட்டி எடுத்து இருக்கிறது.

    இனி வரும்காலங்களில் சமூக மதிப்பீடுகளை வலுவிழக்க செய்யும் சம்பவங்கள் ஜமாஅத்துக்களின் மூலமே , தீர்க்கப்படும் எந்த கட்சியோ, இயக்கமோ, தனிநபர்கள் அமைப்போ இந்த் விஷயத்தில் தலையிட அனுமதிக்க முடியாது, இது போன்ற விஷயத்தில் ஜமாத்துக்களின் முடிவே இறுதியானது.

    இந்த விஷயங்களை கண்காணிக்க மற்றும் ஆராய “அனைத்து ஜாமாத்துக்கள் கூட்டமைப்பு ’ வழிநடத்துதலின் கீழ் கண்கானிப்பு குழு அமைக்கப்படும், ஓவ்வொரு ஜமாத்துக்களில் இருந்து 3 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இதன் தலைவராக “குத்பா கமிட்டியின்” தலைவரே செயல்படுவார்.

    மானவர்களை பள்ளி, மற்றும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும், வேன்கள்,ஆட்டோக்கள் ஆகியவை ஜமாஅத்துக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும், மேலும் ஜமாஅத் குழுக்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் இந்த வாகனங்கள் கொண்டு வரப்படும்.

    மேலே சொல்லப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்த குழு இனி மாதம் ஒரு முறை கூடி விவாதிக்கும் என கூறப்பட்டிருக்கிறது, ஜமாஅத்துக்களின் இந்த ஒருங்கினைப்புத் திட்டம், அறியாமை உள்ளங்களில் விஷ விதை நட்டு சொகுசாய் காய்பறித்து குசு விடும் பண்டார நாய்களின் வேட்டிக்குள் வேட்டு வச்ச மாதிரி ஆகிடுச்சுன்னு ஊர்ல பேசிக்கிறாங்க.. உண்மைதான் நாங்களும் “கொலை வெறி” லதான் இருக்கிறோம்.

    நன்றி: கீழை முரசு அனவரும் காண வேண்டிய வளைத் தளம்: www.keezhaimurasu.blogspot.in

    ReplyDelete
  2. நக்ரில் நீண்ட காலமாக புரையோடிப் போன இப் பிரச்சனையாக இருப்பதால் சர்வ தேச அளவில் வசித்துக் கொண்டு இருக்குக்ம் கீழக்கரை வாசிகளும், கீழக்கரை சம்பந்தப்பட்ட வளைத் தங்களை பார்வை இடும் அனைவரின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் கீழக்கரை டைம்ஸில் இருந்த எமது பதிவை மீண்டும் பதிவு செய்கிறோம்.