தேடல் தொடங்கியதே..

Friday 26 July 2013

இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! (ரமலான் ஸ்பெசல் பகுதி - 7)

இஸ்லாமிய பெருமக்களின் புனித ரமலான் நோன்பு மாதம் துவங்கி, இறைவன் அருளால் வெகு சிறப்பாகவும், அதி விரைவாகவும் நம்மை விட்டு கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள், இறைவனின் கட்டளையை அடியொட்டி, இறைவனின் நேசத்தை, அன்பை பெறும் நோக்கோடு, நோன்பெனும் மாண்பினை நல்ல முறையில் நிறைவேற்றி வருகிறார்கள்.

அந்த நோன்பு நிகழ்வுகளை, சவூதி அரேபியாவின் ஜித்தாஹ், மதினா, பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், இந்தியாவில் நியூ டெல்லி, கொல்கத்தா, ஹைதராபத் மற்றும் ஜெருசேலம், இந்தோனேசியா, பாலஸ்தீனம், பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புகைப்படக் கலைஞர்கள், மிக அழகாக புகைப்படம் எடுத்து தந்திருக்கிறார்கள். 

இந்த அற்புதமான புகைப்படங்களின் கோர்வையை 'முதுவை ஹிதாயத்' அவர்கள், தன் முக நூலில் நண்பர்களுடன் பகிர்ந்திருந்தார். அவற்றை நீங்களும் இரசித்துப் பார்வையிடுங்களேன்...


முதல் நோன்பின் போது, ஒரு பாகிஸ்தானிய சிறுவன் நோன்பு திறப்பதற்கான உணவுகளை வரிசையாக வைக்கிறான். (இடம் : மெமான் மசூதி, கராச்சி, பாகிஸ்தான்)


நோன்பின் முந்தைய தினம் ஒன்றில், தொழுது கொண்டிருப்பவர்களை ஒரு மழலை உற்று நோக்குகிறது. (இடம் : ஸ்ட்ராஸ் பக் கிராண்ட் மசூதி, பிரான்ஸ்)


 ஒரு இளம் சிறுமி, நோன்பு திறப்பதற்கான உணவுகளை அடுக்கி வைக்கிறார் (இடம் : ஜும்மா மசூதி, புது டெல்லி)

 

ஒரு பாகிஸ்தானியர், நோன்பு திறப்பதற்கான, ரோஸ்மில்க் போன்ற உணவு வகையை, ஊற்றி வைக்கிறார். 

ஒரு பள்ளியில் நோன்பு திறப்பதற்கான உணவுகள் வைக்கப்படுகிறது. அருகில் ஒரு பாகிஸ்தானிய சிறுவன் இறைவனை இறைஞ்சுகிறான். (இடம் : கராச்சி பள்ளிவாசல், பாகிஸ்தான்)

முதல் நோன்பு தினத்தில், தொழுகைக்குப் பின்னர், இறைவனுடன் கையேந்தும் இந்தியர் (இடம் : முகல் இரா மசூதி, புது டெல்லி)

ரமலான் இரண்டாம் நாளன்று வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றும் பெண்மணிகள் (இடம் : லாகூர் பள்ளிவாசல், பாகிஸ்தான்)

ரமலான் முதல் நோன்பை திறக்க, கண்ணியமுடன் அமர்ந்திருக்கும் சவூதியர்களும், வெளி நாட்டவர்களும் (இடம் : துறைமுக நகரம் ஜித்தாஹ், சவூதி அரேபியா)

மழைப் பொலிவுக்கு மத்தியிலும், ரமலான் இரண்டாம் நோன்பன்று, வெள்ளிக் கிழமை ஜும்மா  தொழுகையை, சாலையில் நிறைவேற்றும் இஸ்லாமிய பெருமக்கள் (இடம் : கொல்கத்தா)

ரமளானில் முதல் வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர், இறை வேதத்தை ஓதும் ஈரானியர் (இடம் : ஈரானிய தலை நகரம், டெஹ்ரான்)

 ஒரு பாரம்பரிய தொப்பி வியாபாரியின் கடை (இடம் : பாகிஸ்தான்)


இப்தார் விருந்து நிகழ்ச்சி (இடம்: முஹம்மது நபியவர்கள் பள்ளி, மதீனா)

ரமலான் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, பள்ளியை சுத்தம் செய்யும் பணியாளர்கள் (இடம்: பத்சாஹி பள்ளிவாசல், லாகூர், பாகிஸ்தான்)

ரமலான் முதல் நாளன்று தொழுகையை நிறைவேற்றும் இந்தோனேசியா இஸ்லாமிய பெருமக்கள் (இடம் : ஜகார்தா பள்ளிவாசல், இந்தோனேசியா)

 தொழுகைக்குப் பின்னர், சற்று ஓய்வெடுக்கும் பாலஸ்தீனிய நோன்பாளிகள் 

ரமளானின் முதல் ஜும்மா தொழுகைக்குப் பின்னர், மகிழ்வோடு வெளிவரும் சிறுமிகள் (இடம் : அல் அக்ஸா பள்ளி வளாகம், ஜெருசேலம்)

ரமலான் பிறையை காணும் முன்னதாக, மாலை தொழுகையை நிறைவேற்றும் இஸ்லாமியர்கள் (இடம் : மெக்கா மஸ்ஜித், ஹைதராபாத், இந்தியா)


நோன்பு திறக்க ஆயத்தமாக இருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் (இடம் : சவூதி ரெட் சீ போர்ட், ஜித்தாஹ்)








நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)


<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....

No comments:

Post a Comment