தேடல் தொடங்கியதே..

Thursday 25 July 2013

கீழக்கரை நகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள இரண்டாண்டு 'சாதனை' மலர் - 'வேதனை' தான் மலர்ந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் குமுறல் !

கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த 24.07.2013 அன்று தினப் பத்திரிக்கை ஒன்றில் நகராட்சியின் இரண்டாண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏறத்தாழ 5 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, பெரும்பாலான வேலைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. 



நிறைவடைந்ததாக கூறப்படும் பணிகள் குறித்தும், இன்னும் தரமில்லாமல் தொடரும் பணிகள் குறித்தும், கீழக்கரை வாழ் பொது மக்களும், உலகெங்கும் வாழும் கீழக்கரை சமூக ஆர்வலர்களும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்னும் கீழக்கரை நகரின் பல பகுதிகளில் சாலை மேம்பாடு, குடி நீர் வசதி, வாருகால் சீரமைப்பு, தெரு விளக்கு பொருத்துதல் போன்ற திட்டங்கள் முறையாக செயல்படுத்தாமல் இருக்கும் போது இது போன்ற சாதனை மலர், வேதனை தருவதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

இது குறித்து சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாஹீம் அவர்கள் கூறும் போது "இந்த விளம்பரம் செய்தித் தாள்களை மட்டும் தான் அலங்கரிக்கிறது. அது நமது ஊரை அலங்கரிக்கவில்லை.

கடந்த இரண்டாண்டுகளில், நகராட்சி ஒப்பந்ததாரர்களால் நடை முறைப்படுத்தப்பட்ட தரமற்ற பணிகளால், ஊரெங்கும் பல்லாங்குழி சாலைகளும், வழிந்தோடும் சாக்கடைகளும், தெரு விளக்குள் இல்லாமல் இருள் சூழ்ந்த தெருக்களும் மட்டும் தான் இருக்கிறது.  

இது போன்று சாதனை மலர் வெளியிடுவது, வெறும் கண் துடைப்பேயன்றி வேறில்லை." என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

இது குறித்து துபாயிலிருந்து சமூக ஆர்வலர். நஜீம் மறைக்கா அவர்கள் கூறும் போது "நகராட்சி சார்பாக, செய்தி தாள் ஒன்றில் வெளியிடப்பட்டு இருக்கும்  இரண்டாண்டு சாதனை மலர் தகவல் அறிவிப்பில் ஜொலிக்கும் பெயர்களில் உள்ள நகராட்சி உறுப்பினர்கள் என்ன சொல்ல போகிறார்கள்...?

எதற்கெடுத்தாலும் கோஷம் போட்டவர்கள், தங்கள் பெயர்களை, சாதனை மலரில் கலர், கலராக போடுவதற்கு எப்படி அனுமதித்தார்கள்.

அப்ப அதெல்லாம் விளம்பரம் மற்றும் காசு.. பணம்... துட்டு... மணி... மணி தானா...???" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FACE BOOK COMMENTS : 

Like ·  · Unfollow Post · Share · Edit
  • Abu Siddique Veliyoor vazh keelai nanbarkalukku theriyapadutha vendum. Pala kodigalukku poi kanakku kattapattulathu nenjam kumurugirathu.
    3 hours ago · Like · 2
  • Abu Siddique Irandandu saathanaigal (kollaigal) moondramandum thodarum....

    By 

    Kilakarai Municipality
    3 hours ago · Like · 1
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' தமிழக அரசால் கீழக்கரை நகராட்சிக்கு, இது வரைக்கும் இல்லாத அளவிற்கு குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அம்மா அடிக்கடி சட்ட சபையில் முழங்குவது போல 'முந்தைய தி.மு.க மைனாரிட்டி ஆட்சி காலத்தில்' இல்லாத அளவிற்கு, கடந்த இரண்டாண்டுகளில் சுமார் ஏழரை கோடி ரூபாய் வந்துள்ளது. 

    நகரின் வளர்ச்சிப் பணிக்காக வந்த இந்த மக்கள் பணம், தரம் கெட்ட ஒப்பந்ததாரர்களாலும், பணம் முழுங்கி நகராட்சி அதிகார மகாதேவன்களாலும், கேடு கெட்ட சில கயவ கவுன்சிலர்களாலும், கூறு போடப்பட்டு, வீணடிக்கப்பட்டு வீதியெங்கும் வீச்சம் சாக்கடை நாற்றத்தையும் தாண்டி பவனி வருகிறது. 

    கீழக்கரை மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க வந்த இந்த பணத்தை, கீழக்கரை மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வந்த இந்த பணத்தை, கீழக்கரையின் தெருவெங்கும் இருள் போக்கி ஒளி வீச வந்த இந்த பணத்தை, இப்படி ஒட்டுமொத்தமாக கீழக்கரையை செழிப்பாக்க வந்த இந்த பணத்தை, ஒட்டுமொத்தமாக, வெளிப்படையாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த அருமையான மக்கள் பணத்தை, ஊழலுக்கு துணை போகாமல் உருப்படியாக செலவிட்டிருந்தால் நம் கீழக்கரை எவ்வளவு செழிப்பானதாக மாறியிருக்கும். சற்று நிதானித்து யோசனை செய்து பார்க்கும் போது மனம் உண்மையில் குமுறத் தான் செய்கிறது இளையவனே..

    கீழக்கரை நகராட்சி அங்கத்தினர்களே நீங்கள் குறித்துக் கொள்ளுங்கள். எல்லாம் வல்ல வல்லோன் அல்லாஹ், நாளை மஹ்ஷர் மைதானத்திலே, கேள்விக் கணக்கு கேட்கும் அந்த நியாயத் தீர்ப்பு நாளிலே, நிச்சயமாக உங்கள் 'சாதனை மலர்' குறித்தும், நீங்கள் அடித்த கொள்ளைகள் குறித்தும் தீர்க்கமாக விசாரிக்கப்படுவீர்கள் எ
    ன்பதை மறந்து விட்டீர்களா..?
    3 hours ago · Like · 2
  • Abu Siddique Panam vilungum muthalaigalal nadathapadum admin kli. Ethirthu ketpavargaluku arrest warrant arajagam, attuliyam... Innum pala..
    2 hours ago · Like · 1
  • Segu Sathaku Ibrahim கீழக்கரையில் சரியான முறையில் நகராட்சியின் நிதியை பயன் படுத்தி வேலை செய்தால் 
    போதும் ஊர் செழிப்பு ஆகிவிடும் ,இப்போது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் 
    அவர்களிடம் வீட்டு வரி கேட்டு வருபவர்களிடம் வரி வாங்குகிறீர்கள் எங்களுக்கு ஏன் 
    அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்யவில்லை என்று கேள்வி கேட்க வேண்டும் .
    2 hours ago · Like · 3
  • Segu Sathaku Ibrahim ஏன் என்றால் கேபிள் டிவி வேலை செய்யவில்லை என்றால் எப்படி கத்துகிறோமே ,அது போல் நகராட்சியில் வேலை செய்ய வில்லை என்றாலும் கேட்க நமக்கு ஏன் துணிவு இல்லை .
    2 hours ago · Like · 2
  • Meeran Musthan Yenna saaditirgal publicity pannura alavukku. Nothing
    2 hours ago via mobile · Like · 1
  • Abu Siddique Vethanai Malar.
    2 hours ago · Like · 1
  • கீழை ரோஜா கீழக்கரையில் எங்கே சாதனை நடந்திருக்கிறது. எந்த தெருவில் சுகாதாரம் இருக்கிறது. மீண்டும் டெங்கு காய்ச்சல் தான் நிறைய பேருக்கு இருக்குது. இது நிச்சயமாக வேதனை மலர் தான்
    2 hours ago · Like · 1

    • Keelakarai Ali Batcha காரணம் ஆளுகின்ற அரசின் கேடு கெட்ட சட்ட நடைமுறைகள் தான். மக்களின் வரிப் பணத்தில் மக்கஊக்கு சேவை செய்ய சம்பளம் பெறுபவனை நீதமாக கடமையை செய் என கேட்ட நாதி அற்ற அரசு நிர்வாகம், தட்டி கேட்கும் பாதிப்புக்கு உள்ளானவனை அரசு ஊழியனை வேலை செய்ய விடாமல் தடுத்தாய் என்று கிரிமினல் வழக்குகளை தொடரும் அவல நிலைமையால் தான்.

1 comment:

  1. சவுக்கடி சாவன்னா25 July 2013 at 20:14

    ஊரே நகராட்சி நிர்வாகத்தை காறி துப்பிக் கொண்டு இருக்கிறது.இந்த லட்சணத்தில்... மானம் கெட்ட ஜன்மங்கள். கீழக்கரையிலும் கடல் இருக்கிறது.

    ReplyDelete