தேடல் தொடங்கியதே..

Friday 26 July 2013

கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! (ரமலான் ஸ்பெஷல் - பகுதி 8)

கீழக்கரை நகரில் சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி இன்று (26.07.2013) மாலை 6.30 மணியளவில், கீழக்கரை கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் கிழக்குத் தெரு ஜமாத்தினர்களும், பல்வேறு சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது மக்களும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.



முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு SDPI நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக் அவர்கள் தலைமை தாங்கினார். SDPI நகர் பொருளாளர் சித்திக் அலி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபூபக்கர் சாகிபு, ஜமாஅத் துணைத் தலைவர் அமீர் ஷாஜஹான், ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். ஜகுபர் சாதிக்,

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாஹீம் (ஸ்டேஷன் மாஸ்டர் - ஓய்வு), சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். தங்கம் இராதாகிருஷ்ணன், முஹம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர். அலாவுதீன், மௌலவி அல்தாப் ஹுசைன் மன்பஈ, மௌலவி சம்சுதீன் ஆலீம் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

SDPI கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் பாப்புலர் ப்ஃரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் நவாஸ்கான் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் SDPI கட்சியின் நகர் இணைச் செயலாளர் அபுபக்கர் சித்தீக் நன்றியுரை வழங்கினார்.



நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html


இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)


<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்.... 

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    பாப்புலர் ஃப்ரண்ட்.... நடாத்தும் இப்தார் நிகழ்சி மிகவும் ஒரே ஒரு குறையுடன் மிகமகிழ்சி அளிக்கிறது, என்ன வென்றால், இஸ்லாத்தின் பார்வையில் அனைவரும் சமம்தான் பின்பு ஏன் பிரத்யோக மேடை அரசியல் கூட்டம் போன்று, அந்த நல்ல உள்ளங்களை கீழேயே அமர்த்தி இருக்கலாமே என்பது எனது தாழ்மையான கருத்து

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    பாப்புலர் ஃப்ரண்ட்.... நடாத்தும் இப்தார் நிகழ்சி மிகவும் ஒரே ஒரு குறையுடன் மிகமகிழ்சி அளிக்கிறது, என்ன வென்றால், இஸ்லாத்தின் பார்வையில் அனைவரும் சமம்தான் பின்பு ஏன் பிரத்யோக மேடை அரசியல் கூட்டம் போன்று, அந்த நல்ல உள்ளங்களை கீழேயே அமர்த்தி இருக்கலாமே என்பது எனது தாழ்மையான கருத்து

    ReplyDelete