தேடல் தொடங்கியதே..

Monday 19 August 2013

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடை பெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் திரு.சுந்தரராஜன் அவர்கள் பங்கேற்பு !

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடைபெற்ற, மூன்றாம் ஆண்டு துவக்க விழா, சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் விழா, சிறந்த சேவை மற்றும் சாதனையாளருக்கு விருதுகள் வழங்கும் 'முப்பெரும் விழா'  நிகழ்ச்சி, நேற்று (18.08.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணியளவில் ஹுசைனியா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றது.



இந்த நிகழ்ச்சியில் முதன்மை சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. S.சுந்தரராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக அ.இ.அ.தி.மு.க  மாவட்ட கழக செயலாளர் மற்றும் தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு வாரியத் தலைவர்.திரு.G.முனியசாமி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் திரு.G. கண்ணன் ஆகியோர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 




இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாகீம் அவர்கள் தலைமை ஏற்றிருந்தார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பசீர் அஹமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிறுவனர். ஜனாப்.ஹமீது அப்துல் காதர் அவர்கள் அறிமுக உரை ஆற்றினார். அதனை தொடர்ந்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜனாப்.A.அலாவுதீன், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் உறுப்பினரும், கீழக்கரை நகர் அ.இ.அ.தி.மு.க  செயலாளருமான திரு. இராஜேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உரையாற்றினர். இந்த விழா நிகழ்ச்சியில் கீழக்கரை நகரில் சிறப்பான முறையில் சேவையாற்றி வரும் பொதுநல அமைப்பினர்களுக்கு சேவை விருதுகளும், சாதனை விருதுகளும், சாதனையாளர் விருதும், சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. S .சுந்தரராஜ் அவர்களிடம் கீழக்கரை நகருக்கு அவசர அவசியமாக செய்ய வேண்டிய பணிகளான, கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் புறக் காவல் நிலையம் அமைத்தல், கீழக்கரை நகரில் சுத்தம், சுகாதாரம் பேணும் நோக்கோடு வாருகால்களை உடனடியாக உயர்த்தி கட்டி மூடி போடுதல், கீழக்கரையில் தனி தாலுகா அலுவலகம் அமைத்தல், கீழக்கரை நகராட்சிக்கு மற்றுமொரு சுகாதார ஆய்வாளரை நியமித்தல், கீழக்கரை வழியாக தூத்துக்குடி மார்க்கத்தில் புதிய இரயில் தடம் அமைத்தல் உள்ளிட்டவைகளை செய்து தர வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இது குறித்து அமைச்சர் அவர்கள் பேசும் போது " கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக முன் மைத்திருக்கும், அனைத்து முத்தான கோரிக்கைகளும், மாண்புமிகு தமிழக முதல்வர்அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அத்தியாவசியப் பணிகள் உடனடியாக நிறைவேறித் தர வழி வகை செய்யப்படும்." என்று உறுதியளித்தார்.


விழாவின் இறுதியில் நன்றியுரையை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துணை செயலாளர். திரு.A. செல்வ நாராயணன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிகளை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துணைத் தலைவர். திரு.S.பாரதி மற்றும் உறுப்பினர் A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் தொகுத்து வழங்கினர். 

இந்த விழா ஏற்பாடுகளை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் A.M.ஹாஜா அனீஸ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் அங்கத்தினர்கள் விஜயன், கெஜி உள்ளிட்ட நிர்வாகிகள், கீழக்கரை நகரிலுள்ள அனைத்து பள்ளிகளின் தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

1 comment:

  1. ஒவ்வொரு சூரிய உதயமும் உன் வெற்றிகாகவே உதிக்கிறது......

    முயற்சி செய் இன்றே வெற்றி பெறுவாய்.....

    இந்த நாளும் உனக்காகவே காத்திருக்கிறது .

    valthukzhal

    ReplyDelete