தேடல் தொடங்கியதே..

Wednesday 11 September 2013

துபாயிலிருந்து இந்தியாவுக்கு ரூபாய் கொண்டு வர தடை - யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி அறிவிப்பு !

இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோர், 10 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்ல, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஒருவர், நேபாளம் மற்றும் பூடான் நீங்கலாக, பிற நாடுகளுக்கு செல்லும் போது, 10 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம். அதுபோல், குறுகிய கால பயணமாக வெளிநாடு செல்வோர், நேபாளம் மற்றும் பூடான் நீங்கலாக, எந்த நாட்டில் இருந்து, இந்தியாவிற்கு திரும்பினாலும், அவர், 10 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பலர், இந்தியா வரும் போது, கணிசமான இந்திய ரூபாய் தாள்களை கையில் எடுத்து வருகின்றனர். இதனால், விமான நிலைய சோதனையின் போது, பல்வேறு பிரச்னைகள் எழுகிறது என்பதனை காரணம் காட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து, இந்தியா செல்பவர்கள், இனி ரூபாயை எடுத்து செல்ல வேண்டாம் என, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, வங்கிகளுக்கும், நாணய மாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. ரூபாய்க்கு பதிலாக, 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 5,000 திர்காம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு செல்பவர்கள், ரூபாயை எடுத்து சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தூதரகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

நன்றி : மணிச்சுடர் 

No comments:

Post a Comment