தேடல் தொடங்கியதே..

Wednesday, 11 September 2013

இராமேஸ்வரம் - கோவை இடையே வாராந்திர 'எக்ஸ்பிரஸ் ரயில்' அறிமுகம் - பயணிகள் மகிழ்ச்சி !

தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்துக்கு என அறிவிக்கப்பட்ட 5 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில் முக்கியமாக கோவையிலிருந்து திருச்சி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இடம் பெற்றிருந்தது.அதன் படி கோவை - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப் டுகிறது. இச்சேவை வரும், 17.09.2013 அன்று கோவையில் துவங்குகிறது. கோவையிலிருந்து 17ம் தேதி இரவு, 7:45 மணிக்கு புறப்படும், இந்த எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16618), திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக மறுநாள் காலை, 06.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.

இதேபோன்று, 18ம் தேதி இரவு, 07.00 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரயில் (வண்டி எண்: 16617), அதே வழித்தடத்தில் மறுநாள் காலை 6:40 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த ரயில் சேவை, வாரந்தோறும் கோவையிலிருந்து செவ்வாய் கிழமையும், ராமேஸ்வரத்திலிருந்து புதன் கிழமையும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவுகள் துவங்கி விட்டன. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FACE BOOK COMMENTS :
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' மிக நீண்ட காலத்திற்கு பின்னர் கோவைக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர்கள் தொழில் நிமித்தமாக கோவைக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். பேருந்துகளில் பயணிக்கும் போது ஏற்படும் பல அசவுகரியன்களால் அவதியடைந்த எம் மக்களுக்கு இது நற் செய்தி தான்.

1 comment:

  1. ராமேஸ்வரம் இருந்து கோவைக்கு ரயில் விடப்பட்டது, ராமநாதபுரம் மாவடத்தை சேர்த்த மக்கள் வணிகர்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும் , இதற்கு மக்களின் சார்பாக அரசுக்கு நன்றி தெர்வித்து கொள்கிறோம் ,வாரத்திற்கு ஊரு முறை என்பது மிக குறைவான ரயில் போக்குவரத்துக்கு ஆகும் , வத்திற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் ரயில் இயக்க வேண்டும் , டூர் செல்லும் மக்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும்,
    கீழக்கரைல் மக்களுக்கு ரயில் வசதி என்பது இல்லை , கீழக்கரைல் ரயில்வே அமைப்பது மக்களின் நீட்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகிறது இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் , ராமநாதபுரம் இருந்து கீழக்கரை வழியாக துத்துக்குடி வரைம ரயில் போக்குவரத்துக்கு வசதி இல்லை , கீழக்கரைல் ரயில்வே அமைப்பதற்கு மக்கள் ஒன்று கூடி மக்கள் நலன் நாடும் அமைப்புகளும் ஒன்று கூடி அரசுக்கு குரல் கொடுக்க வேண்டும் ,கீழக்கரைல் ரயில்வே அமைந்தால் கீழக்கரை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம்களும் தொழில் வளர்ச்சி பெரும் , மக்களின் பொருளாதாரமும் உயரும் ,

    ReplyDelete