தேடல் தொடங்கியதே..

Wednesday, 11 September 2013

கல்வி கூடங்களில் மாணாக்கர்கள் தங்களின் மார்க்க / சமய அடையாளங்களுடன் வர தடை ஏதும் இல்லை - முதன்மை கல்வி அலுவலர் தகவல் !

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்விக்கூடங்களில் இஸ்லாமிய மாணவர்கள் தாடி வைக்கவும், தொப்பி அணிவதற்கும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியவும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர், நேரடியாகவும், மறை முகமாகவும் தடுத்து வந்தனர். அதே போல கல்விக் கூடங்களுக்கு வரும் இந்து சமய மாணவர்கள் திருநீறு பூசிக் கொள்ளவும், கிருத்துவ சமய மாணவர்கள் சிலுவை அணியவும், பல கல்வி நிறுவனங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. 


இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த சகோதரர் அன்சார் தீன் அவர்கள் தகவல் அறியும் உரிமைகள் சட்டம் மூலம், கல்வி கூடங்களுக்கு சமய அடையாளங்களுடன் மாணவர்கள் வருவது சம்பந்தமாக, முதன்மை கல்வி அலுவலரிடம் கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் தந்துள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கல்வி கூடங்களில் மாணாக்கர்கள் சீருடையுடன்  தங்களின் மார்க்க / சமய அடையாளங்களுடன் வர தடை ஏதும் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.  
இது போன்ற தகவல்களை, தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின் மூலம் அரசு துறையினரிடமிருந்து பெறுவது எப்படி.? அதற்கான வழி முறைகள் என்ன.? என்ன மாதிரியான கேள்விகளை கேட்கலாம்.? யாரிடம் கேட்பது.? என்ற தகவல்களை அறிய கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடவும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 , பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  

1 comment:

  1. மாணவர்களின் கல்வி கற்கும் திறனை புரிந்து கொண்டு பாடம் கற்பிக்கும் திறமை இல்லாத ஆசிரியர்களை , பணி நீக்கம் செய்ய வேண்டும் , இல்லாவிடில் பல மாணவர்களின் எதிகாலம் கேள்வி கூரியதகிவிடும் ,சரியாக படிக்காத மாணவர்களை மட்டும் குறை கூற கூடாது , மாணவர்களை மட்டும் துன்புறுத்த கூடாது , பெரும் பலான ஜமாஅத்து பள்ளிகளில் திறமை இல்லாத ஆசிரியர்களே அதிகமாக உள்ளனர் ,

    ReplyDelete