தேடல் தொடங்கியதே..

Thursday 19 September 2013

ஜித்தாவில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு இரத்த தான முகாம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு !

தற்போது உலகம் முழுவதிலிருமிருந்து முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா நகருக்கு வர துவங்கியிருப்பதால், அவர்களில் தேவைப்படுவோருக்கு அவசர காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக இது போன்ற இரத்த தான முகாம்கள் அவசியமாகிறது. கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையினருடன் இணைந்து TNTJ ஜித்தா  மண்டலம், TNTJ ரியாத் மண்டலம் ஆகியோர்கள்  ஆண்டு தோறும் ஹஜ் காலங்களில் இரத்த தான் முகாம்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர். 








இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலமும், கிங் ஃபஹத் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு இரத்ததான முகாம் எதிர் வரும் 27.09.2013 வெள்ளிக் கிழமையன்று நண்பகல் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை, கிங் ஃபஹத் மருத்துவமனை வளாகத்தில் நடை பெற உள்ளது. இரத்த தானம் செய்ய விரும்பும்  கொடையாளிகள், தங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



இரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து ஏழு வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல கேடயங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை  செய்து வருகின்றது.



இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5-6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், அதிகமான திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, இரத்த தானம் செய்துள்ளனர் என்பது மகிழ்வு தரும் கூடுதல் செய்தி. 

படங்கள் : கடந்த 2011 ஆம் ஆண்டு ஜித்தாவில் நடை பெற்ற இரத்த தான முகாமில் எடுக்கப்பட்டது 

No comments:

Post a Comment