தேடல் தொடங்கியதே..

Friday 20 September 2013

கீழக்கரையில் 'சிறு நீரியல்' சிறப்பு மருத்துவ முகாம் - கீழக்கரை ரோட்டரி சங்கம் ஏற்பாடு !

கீழக்கரை ரோட்டரி சங்கம், முஹம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்ராக்ட் சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் சிறு நீரியல் சிறப்பு மருத்துவ முகாம் நாளை (21.09.2013) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்த முகாமில் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையின் சிறு நீரியல் துறை அறுவை சிகிச்சை தலைமை நிபுணர். திரு. டாக்டர். T.R.முரளி M.S., M.ch., (Uro) மற்றும் மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்க உள்ளனர். 
 

கீழக்கரை பகுதியில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதியுறும் பலர், ஆரம்ப சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டும், நிரந்தர நிவாரணத்தை தேடியும், மதுரைக்கோ  அல்லது சென்னைக்கோ சென்று மருத்துவம் செய்ய வேண்டிய நிலையே உள்ளது. இந்நிலையில் இந்த சிறப்பு மருத்துவ முகாம் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இந்த முகாமில் கொள்பவர்கள் ரூ.200 செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிறு நீர் மற்றும் இரத்த பரிசோதனைகள் செய்து தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது. 

No comments:

Post a Comment