தேடல் தொடங்கியதே..

Tuesday, 29 October 2013

கீழக்கரையின் அமானுஷ்ய பக்கமா..? 'அஞ்சு வாசல் கிட்டங்கி' ! (சரித்திரப் பகுதி - 2)

கீழக்கரையின் அமானுஷ்ய பக்கமாய் தற்போது காட்சி தரும் இந்த அஞ்சு வாசல் கிட்டங்கி வளாகத்திற்குள், கடந்த 1967 ஆம் ஆண்டு காலக் கட்டம் வரை, முன்னாள் தமிழக முதலமைச்சர் முதல், அப்போது இருந்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் வரை, இங்கு ஆஜராகாமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு இந்த கிட்டங்கி, கீழக்கரை நகரின் முக்கிய வணிக தளமாக விளங்கி வந்துள்ளது. ஊர் போற்றும் பெரிய மனிதர்கள் எல்லாம் வலம் வந்த இடமாக இருந்துள்ளது. 

அதற்கு ஒரு உதாரணமாக கடந்த 1950 ஆம் வருட கால கட்டத்தில், இந்த அஞ்சு வாசல் கிட்டங்கியின் பிரதான தலை வாசல் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், நம் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இன்றும் சாட்சியாக இருக்கிறது.


(இடமிருந்து வலமாக) SVM.செய்யது காசீம், SVM.முஹம்மது ஜமாலுதீன், இராமநாதபுரம் கலெக்டர் அம்பா சங்கர், ஆனா சீனா சேகு மதார் அம்பலம், முன்னாள் தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் (இங்கு வரும் போது தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்துள்ளார்), AMS.அஹமது இபுறாஹீம் (பின்னால் கருப்பு தொப்பி அணிந்திருப்பவர், இராமநாதபுரம் இராஜா சண்முகநாத சேதுபதி, கானா. ஆனா. மூனா. மௌலா முஹைதீன், கடைசியாக நிற்கும் மூன்று பேர்களின் விபரம் தெரியவில்லை. இவர்கள் கலெக்டர் அம்பா சங்கருடன் வந்திருந்த உயர் அதிகாரிகளாக இருக்கலாம்

பின் வரிசை நடுப்பாகத்தில் (இடமிருந்து வலமாக) முதல் நபர் குறித்த விபரம் இல்லை, அஞ்சு வாசல் பண்டக சாலை மேனேஜர், முஹம்மது அப்துல் ரஹ்மான் சாஹிபு (நடுவே உயரமாக வெள்ளை தொப்பி அணிந்திருப்பவர் - அலி பாட்சா மாமா அவர்களின் தந்தையார்), SVM கணக்குப் பிள்ளை

பின் வரிசையில் (இடமிருந்து வலமாக) ஜகுபர், ஹபீப் முஹம்மது (சேர்மன் சேகு அப்துல் காதர் மைத்துனர்), உலகு ஆசாரி ஆகியோர் நிற்கின்றனர். அப்போதும், இப்போதும் இந்த கிட்டங்கி SVM வகையறாக்களின் பூர்வீக சொத்தாக இருந்து வருகிறது.

இந்த புகைபடத்தில், பல முக்கியஸ்தர்களுடன் கீழக்கரையில் கலை நுணுக்கமான தேக்குமர வேலைப்பாடுகளை செய்த உலகு ஆசாரி அவர்களும் இடம் பெற்றிருப்பதை பார்க்கும் போது, சமூகத்தில் அவர்களுக்கு எவ்வளவு மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. 

குறிப்பு : இந்த அரிய புகைப்படம், கீழக்கரை தச்சர் தெருவில் இருக்கும் மூத்த சமூக ஆர்வலர். அலி பாட்சா மாமா அவர்கள் (அம்பலார் வீடு) இல்லத்தில் இருக்கிறது.  


குறிப்பு : தற்போது சிதிலமடைந்து கிடக்கும் இந்த அஞ்சு வாசல் கிட்டங்கியின் தலை வாசலில் தான், அரை நூற்றாண்டுக்கு முந்தையை அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அஞ்சு வாசல் கிட்டங்கி வளாகத்தில் கடந்த 1957 ஆம் ஆண்டில் இங்கு நடை பெற்ற ஒரு கொலை சம்பவம், அந்த காலக் கட்டத்தில் கீழக்கரையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த அஞ்சு வாசல் கிட்டங்கியில் வேலை பார்த்த ஒரு நடுத்தர வயது நபர், 10 வயது சிறுவனை கொலை செய்து, அந்த பிரேதத்தை, இந்த கிட்டங்கியில் உள்ள ஒரு பகுதியில் மறைத்து வைத்திருந்தார். 


அஞ்சு வாசல் கிட்டங்கியின் முதல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு பாதை  

நாள் முழுவதும் சிறுவன் வீடு திரும்பாததால், துடித்துப் போன பெற்றோர்கள்  போலீசில் புகார் செய்தனர். சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் போலீசாரின் தேடுதல் வேட்டையில் அஞ்சு வாசல் கிட்டங்கியில் இருந்து பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கொலையாளி குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. 

போலீசார் குற்றவாளியை விரைந்து பிடிக்க வியூகம் வகுத்தனர். அந்த பகுதியில் சந்தேகப்படும் பல்வேறு நபர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மும்முரமாக நடந்தது. யுவராஜ் என்கிற பெயரில் ஒரு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இந்த கொலை செய்தி காட்டுத்தீ போல ஊரெங்கும் பரவியிருந்ததால் பொதுமக்கள் அதிகமானோர் இந்த பகுதியில் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தனர். 


பழைய தூசு படிந்த சங்குகளுடன் காட்சி தரும் அஞ்சு வாசல் கிட்டங்கியின் ஒரு அலமாரி 

அப்போது அந்த மோப்ப நாய் அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதியில் பிரேதம் இருந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு அங்கும் இங்கும் ஆக்ரோசமாக ஓடியது. திடீரெனெ அஞ்சு வாசல் கிட்டங்கியில் வேலை பார்த்த ஒரு நபரை கவ்விப் பிடித்தது.  

பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு, கொலை எப்படி நடை பெற்றது என்பதை நடித்துக் காட்டினார்.பின்னர் போலீஸ் விசாரணையில் குற்றம் முற்றிலும் நிரூபிக்கப்பட்டு, வழக்கு நடை பெற்று சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவாக உருவெடுத்த பின்னர், கீழக்கரையை பொருத்தமட்டில் ஒரு கொலைக்கு சிறை தண்டனை பெற்றவர் இவரே முதலாமவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் மற்றும் அது சார்ந்து பரப்பப்பட்ட ஆவி வதந்திகள் தான் இன்னும் இந்த பகுதியை சுற்றி சுற்றி வருகிறது. ஆனால் இன்னும் இங்கு காலை நேரங்களில் சங்கு தொழில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விசயமாகும். அது சம்பந்தமாக அடுத்த பதிவில் காண்போம்.

அஞ்சு வாசல் கிட்டங்கியின் முதல் பகுதியை வாசிக்க :


சரித்திர சேகரிப்பில் உதவி : வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா சுல்தான் அவர்கள் 

பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!    (தொடரும் >>>>)  

FACE BOOK COMMENTS :

Like ·  · Unfollow Post · Share · Edit
 • Seeni Ibrahim Ssh நல்ல தொகுப்பு தம்பி, நமதூர் செய்திகளுக்கு நன்றிகள் பல,,,
  4 hours ago · Like · 1
 • கீழக்கரை 'புதிய ஒற்றுமை'கீழக்கரையின் பழைய நினைவுகளை வெளிக் கொணரும் அற்புதமான பதிவு. கீழை இளையவனுக்கு வாழ்த்துகள். இங்கு என்றோ ஒரு கொலை நடந்து விட்டது என்பதற்காக அஞ்சு வாசல் கிட்டங்கியை அமானுஷ்ய பகுதியாக பேசி வரும் மக்கள், பேய் பிசாசு கதைகளை தூக்கி வீசி விட்டு, இனியாவது இதன் சரித்திர முக்கியத்துவத்தை உணர தலைப்பட வேண்டும்.
 • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்
 • Imthiyaz Ahmed அற்புதமான அருமையான பதிவு தெரியாத பல சமாச்சாரங்களை தெரிந்து கொள்ள செய்து விட்டாய் இளையவா வாழ்த்துக்கள் நீ எழுதும் கட்டுரைகளில் தொடாத விசயமில்லை உன்னால் மட்டுமே எப்படி சாத்தியமாகிறது கீழக்கரை எழுத்தர்கள் உன்னிடம் கற்று கொள்ள வேண்டும்.உன் ஒவ்வொரு பதிவினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அடுத்த பதிவு எப்போது
  3 hours ago · Like · 2
 • Jahu Jotun 5 வாசல் கெட்டிங்கி பத்தி மிகவும் நல்ல செய்தி சொன்னிர்கள். நன்றி
  3 hours ago · Like · 1
 • சின்னக்கடை நண்பர்கள் Really good and excellent historical information about Anju Vaasal Kittanki. Thanks keelai ilayavan machan
 • Hamid Sahul very nice to know the historical news
 • Fouz Ameen நல்ல வரலாற்று தகவல் நண்பா. அமானுஷ்யம் மறைந்து, அஞ்சு வாசல் கிட்டங்கியின் உண்மை முகம் தெரிந்தது. அடுத்த தொடர்ச்சியை உடனே போஸ்ட் பண்ணுங்கள்
 • Keelakarai Ali Batcha இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்தபின் 1967 வரை மதராஸ் மாகாணத்தை (இன்றைய தமிழ் நாடு) காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்தது. அந்த காலக் கட்டத்தில் கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எஸ்.வி.எம்.முகம்மது ஜமாலுதீன் பிரதர்ஸ் வகையறாக்கள் ஆளும் அரசுடன் நெருக்கமாக மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். அதன் காரணமாக அடிக்கடி ஐந்து வாசல் கிட்டங்கிக்கு தமிழக ஆளுநர்கள்,முதல்வர்கள், ஏனைய அமைச்சர்கள், இவர்களை சார்ந்த அரசு உயர் அதிகார்கள் வருகை தந்தார்கள்.

  ஐந்து வாசல் கிட்டங்கியில் கடல் சார்ந்த பல தரப்பட்ட சங்குகள்,ஆழ் கடலில் 100 அடி ஆழம் வரை உயிர் காக்கும் எவ்வித உபகரணமின்றி மூழ்கி எடுத்த ஜாதி, பட்டி சங்குகள். கடல் சிப்பி,மிகச் சிறியச் சங்கு போல தோற்றம் அளிக்கக்கூடிய முத்துகள், பவளங்கள்,சோவிகள் முதலியவைகளை ஏக போகமாக வியாபாரம் செய்தார்கள்.

  முத்துகளால் செய்யப்பட்ட வகை வகையான் மாலைகள் வ்ட இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.அப் பகுதி ஏழை மக்கள் முத்துகளை வீட்டிற்கு வாங்கிச் சென்று மாலையாக கோர்த்து வந்து கூலி பெற்றுச் செல்வர்.அருமையான வேலை வாய்ப்பு. நிரந்தர வருமானமாகவும் இருந்தது.

  சுருக்கமாக சொல்லுவதென்றால் இன்று ராமேஸ்வரம் கோவில் கடைகளில் கிடைக்ககூடிய அனைத்து பொருட்களும் அன்று இந்த ஐந்து வாசல் கிட்டங்கியில் சங்கமம்..

  ஐந்து வாசலில் தெற்கு பக்கமுள்ள கடைசி வாசலின் உள்ளே நெல்,மாவு,மிளகாய் அரைக்கக்கூடிய அரவை மிஷின் ஒன்று இருந்தது அங்கு தான் கொலை நடந்தது. அது கீழக்கரை சரித்திரத்தில் பதிக்கப்பட்ட வ்ரலாற்று சம்பவம். கராணம் யுவராஜ் என்ற பெயரால் அழைக்கப்பட்ட மோப்ப நாய் ஒன்று வந்து கொலையாளியை பிடித்துக் கொடுத்தது அந்தக் காலக் கட்டத்தில் ஆச்சரியமான சம்பவம். அன்று ஊரே அல்லோலப்பட்டது.சுற்று வட்டார மக்களும் பஸ் போக்குவரத்து இல்லாமையால் கால் நடையாக வந்து கூடி விட்டர்கள்.

  இப் பதிவின் மூலம் நீண்ட நேரம் கடந்த கால மலரும் நினைவுகளில் மூழ்க வைத்த கீழை இளையவனுக்கு மனமார்ந்த நன்றி.உரித்தாகுக.

2 comments:

 1. கீழக்கரை அலி பாட்சா29 October 2013 at 16:45

  இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்தபின் 1967 வரை மதராஸ் மாகாணத்தை (இன்றைய தமிழ் நாடு) காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்தது. அந்த காலக் கட்டத்தில் கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எஸ்.வி.எம்.முகம்மது ஜமாலுதீன் பிரதர்ஸ் வகையறாக்கள் ஆளும் அரசுடன் நெருக்கமாக மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். அதன் காரணமாக அடிக்கடி ஐந்து வாசல் கிட்டங்கிக்கு தமிழக ஆளுநர்கள்,முதல்வர்கள், ஏனைய அமைச்சர்கள், இவர்களை சார்ந்த அரசு உயர் அதிகார்கள் வருகை தந்தார்கள்.

  ஐந்து வாசல் கிட்டங்கியில் கடல் சார்ந்த பல தரப்பட்ட சங்குகள்,ஆழ் கடலில் 100 அடி ஆழம் வரை உயிர் காக்கும் எவ்வித உபகரணமின்றி மூழ்கி எடுத்த ஜாதி, பட்டி சங்குகள். கடல் சிப்பி,மிகச் சிறியச் சங்கு போல தோற்றம் அளிக்கக்கூடிய முத்துகள், பவளங்கள்,சோவிகள் முதலியவைகளை ஏக போகமாக வியாபாரம் செய்தார்கள்.

  முத்துகளால் செய்யப்பட்ட வகை வகையான் மாலைகள் வ்ட இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.அப் பகுதி ஏழை மக்கள் முத்துகளை வீட்டிற்கு வாங்கிச் சென்று மாலையாக கோர்த்து வந்து கூலி பெற்றுச் செல்வர்.அருமையான வேலை வாய்ப்பு. நிரந்தர வருமானமாகவும் இருந்தது.

  சுருக்கமாக சொல்லுவதென்றால் இன்று ராமேஸ்வரம் கோவில் கடைகளில் கிடைக்ககூடிய அனைத்து பொருட்களும் அன்று இந்த ஐந்து வாசல் கிட்டங்கியில் சங்கமம்..

  ஐந்து வாசலில் தெற்கு பக்கமுள்ள கடைசி வாசலின் உள்ளே நெல்,மாவு,மிளகாய் அரைக்கக்கூடிய அரவை மிஷின் ஒன்று இருந்தது அங்கு தான் கொலை நடந்தது. அது கீழக்கரை சரித்திரத்தில் பதிக்கப்பட்ட வ்ரலாற்று சம்பவம். கராணம் யுவராஜ் என்ற பெயரால் அழைக்கப்பட்ட மோப்ப நாய் ஒன்று வந்து கொலையாளியை பிடித்துக் கொடுத்தது அந்தக் காலக் கட்டத்தில் ஆச்சரியமான சம்பவம். அன்று ஊரே அல்லோலப்பட்டது.சுற்று வட்டார மக்களும் பஸ் போக்குவரத்து இல்லாமையால் கால் நடையாக வந்து கூடி விட்டர்கள்.

  இப் பதிவின் மூலம் நீண்ட நேரம் கடந்த் கால மலரும் நினைவுகளில் மூழ்க வைத்த கீழை இளையவனுக்கு மனமார்ந்த நன்றி.உரித்தாகுக.

  ReplyDelete
 2. can you also collect olden days picture of muslim bazzar , others streets , important places like movie hall , mosque , marriage time photos.

  ReplyDelete