தேடல் தொடங்கியதே..

Tuesday 12 November 2013

கீழக்கரையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் இலவச பிசியோதெரபி முகாம் - இன்றும் (12.11.2103) நாளையும் நடை பெறுகிறது !

"ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நாடு முழுவதும்  நவ. 1-ம் தேதி முதல் நவ. 15-ம் தேதி வரை  மக்கள் ஆரோக்கியத்துடன் வாழவும், வலிமையான தேசமாக உருவாகவும் மாரத்தான் ஓட்டம், பொதுமக்களுக்கு இலவசமாக யோகா, நீச்சல் பயிற்சி, மருத்துவ முகாம், ஆகியவை சிறப்பாக நடை பெற்று வருகிறது. 



அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருமேனி, பெரிய பட்டினம், சாயல் குடி உள்ளிட்ட பகுதிகளில் மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றது. அதன் தொடர்ச்சியாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பிஸியோ பிசியோ கிளினிக் இணைந்து நடத்தும் இலவச முகாம் இன்றும் (12.11.2013) நாளையும் (13.11.2013) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ஸ்டார் மெடிக்கல் எதிரே அமைந்துள்ள பிசியோதெரபி கிளினிக்கில் நடை பெறுகிறது. 



இந்த முகாமினை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ்கான் அவர்கள் துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் முஹம்மது  சலீம், கீழக்கரை நகர் தலைவர் அஹமது நதீர், நகர் செயலாளர் அஸ்ரப் மற்றும் நிர்வாக அங்கத்தினர்கள் உடனிருந்தனர். இந்த நல்ல முகாமை சிகிச்சை அவசியப்படும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

1 comment:

  1. கீழை அலி பாட்சா 8/9 ஓ.ஜே.எம் தெரு12 November 2013 at 18:33

    கீழை மாநகரில் இது போல பொது மக்களுக்கு பயன் அளிக்கும் சமூக சேவைகளை குறைந்தது இரண்டு, மூன்று தினங்களுக்கு முன் விளம்பரப்படுத்தினால் பொது மக்களும் தயார் படுத்திக் கொள்ள பேருதவியாக இருக்கும்.ஏனென்றால் இது போன்ற சேவை திட்டங்கள்
    சம்பந்தப்பட்டவர்களால்ஏற்கனவே திட்டமிட்டு செயல் படுத்த படுத்தப்படுவதாகும்.

    இன்ஷா அல்லா,இனி வரும் காலங்களில் எனது கோரிக்கையை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

    இது போன்ற பொது மக்களுக்கு நற் பயன் அளிக்கும் சமூக சேவைகளை மேலும் மேலும் தொடர எக நாயன் இடத்தில் இரு கையேந்தி துவாச் செய்து எனது அன்பு வாழ்த்துகளை எத்தி வைக்கிறேன். ஆமீன்

    ReplyDelete