தேடல் தொடங்கியதே..

Tuesday, 16 July 2013

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)

கீழக்கரையில் மிகப் பிரம்மாண்டமான களரி சட்டிகளில் நோன்பு கஞ்சி காய்ச்சப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் சமைக்கப்படும் இந்த நோன்பு கஞ்சியில் சேர்க்கப்படும் வெந்தயம், பாசிப்பருப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை,ஏலக்காய் போன்றவைகள் நோன்பாளிகளின் களைப்பை போக்குவதோடு,உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் தருகிறது.கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில், ரமலான் மாதம் முழுவதும் காய்ச்சப்படும் நோன்புக் கஞ்சியின் தனிச் சுவையை பருக, ஏராளமான சிறியோர்கள், பெரியவர்கள், வீட்டிலிருந்து பாத்திரங்களை கொண்டு வந்து வாங்கி செல்கின்றனர்.கீழக்கரை நோன்புக் கஞ்சி குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவைக் காண கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)


கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)


<<<<<  கீழக்கரை நோன்புக் கஞ்சி மணம் - இன்னும் வரும்.... 

No comments:

Post a Comment